கர்ப்பிணிகள் சிப்ஸ் சாப்பிட்டால் குழந்தை வளர்ச்சி பாதிக்குமா... என்ன சொல்கிறது ஆய்வு?

ர்ப்பிணிகள் அதிகமாக வெஜிடபிள் எண்ணெய் மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் அதிகமாக உண்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

news18
Updated: May 27, 2019, 6:30 PM IST
கர்ப்பிணிகள் சிப்ஸ் சாப்பிட்டால் குழந்தை வளர்ச்சி பாதிக்குமா... என்ன சொல்கிறது ஆய்வு?
கர்ப்பிணிகள் சிப்ஸ் சாப்பிட்டால் குழந்தை வளர்ச்சி பாதிக்கும்
news18
Updated: May 27, 2019, 6:30 PM IST
கர்ப காலத்தில் பெண்கள் உண்ணும் ஒவ்வொரு உணவையும் மிக கவனமுடன் தேர்வுசெய்ய வேண்டும். அது அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் மட்டுமன்றி உள்ளே இருக்கும் சிசுவையும் சார்ந்துள்ளதால்தான் இத்தனை அக்கறையும், கவனிப்பும்.

அந்த வகையில் ஆராய்ச்சியாளர்கள் ஜர்னல் ஆஃப் ஃபிசியாலஜியில் வெளியிட்ட ஆய்வு முடிவில், கர்ப்பிணிகள் அதிகமாக வெஜிடபிள் எண்ணெய் மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உருளைக் கிழங்கு, வெஜிடபிள் எண்ணெயில் ஒமேக 6 கொழுப்பும் குறிப்பாக லினோலெயிக் ஆசிட் அதிக அளவில் இருப்பதால் அது குடல் வீக்கத்திற்கு வழிவகுக்கும். அதுமட்டுமன்றி இதய நோய்க்கும் வித்திடும் என்று கூறப்படுகிறது.




”கர்ப்பிணிகள் அவர்களுடைய உணவு முறைகளில் கவனமுடன் செயல்படுவது அவசியம். உருளைக் கிழங்கு, வெஜிடபிள் எண்ணெய் மட்டுமன்றி ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்தை கர்ப்பிணிகள் அதிகமாக உட்கொண்டால் அது குழந்தையின் வளர்ச்சியைப் பெருமளவு பாதிக்கும் என்பதைக் கண்டறிய முடிந்தது“ என இதன் தலைமை ஆராய்ச்சியாளர் டீன் ஸ்கெல்லி குறிப்பிடுகிறார். இவர் ஆஸ்திரேலியாவின் க்ரிஃபித் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

அந்த ஆய்வில் கர்ப்பமாக இருந்த எலிகளை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். தொடர்ந்து 10 வாரங்களுக்கு லினோலெயிக் ஆசிடையும் அவற்றின் உணவு முறையில் சேர்த்துக் கொடுத்துள்ளனர். பொதுவாக எலிகள் ஒரே பிரசவத்தில் அதிகமான குட்டிகளை ஈன்றக் கூடியது. ஆனால் அந்த உணவு முறைக்குப் பின் குறைவான குட்டிகளை குறிப்பாக ஆண் எலிக் குட்டிகள் மிகவும் குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Loading...

எனவே இதன் மூலம் கர்ப்பிணிகள் அதிகமான லினோலெயிக் ஆசிட்டை உட்கொண்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது. கர்ப்பிணிகள் மட்டுமின்றி, மனிதர்களும் இந்த ஆசிட்டை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...