Home /News /lifestyle /

இந்த 3 இலை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா..? எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்..?

இந்த 3 இலை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா..? எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்..?

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள்

ஆயுர்வேத நிபுணர்கள் இந்தியாவில் கிடைக்க கூடிய மூலிகைகள் சிலவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமாக ஆரோக்கியமான விதத்தில் ரத்தத்தில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் நீரழிவு நோயின் தலைநகராக இந்தியா மாறி வருவது வேதனை அளிக்க கூடிய செய்தியாகும். தவறான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை, வேலைப்பளு, அதிகப்படியான மன அழுத்தம் ஆகியவை உடலில் உள்ள கார்டிசோலின் அளவைப் பாதிக்கிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை உருவாக்குகிறது, உயர் இரத்த சர்க்கரை உடலை பாதிப்படைய செய்கிறது மற்றும் முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை தடுக்கிறது.

அதிக இரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பல வழிகளில் பாதிக்கும் மெதுவான மருந்து மற்றும் ஊசி மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஆயுர்வேத நிபுணர்கள் இந்தியாவில் கிடைக்க கூடிய மூலிகைகள் சிலவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமாக ஆரோக்கியமான விதத்தில் ரத்தத்தில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கின்றனர்.

மூலிகைகள் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுமா?

புரதம், நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுடன், இந்த மூலிகைகளை நீங்கள் இணைத்தால் மட்டுமே அவை சர்க்கரைக்கு எதிராக வேலை செய்யும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், இந்த மூன்று மூலிகைகளையும் காலை உணவில் சேர்த்துக்கொள்வது இயற்கையாகவே சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது என்பது நிபுணர்களின் கருத்தாகும்.

அப்படி நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய 3 மூலிகைகள் குறித்து இப்போது விரிவாக அறிந்து கொள்ளலாம்...



1.கறிவேப்பிலை:

கறிவேப்பிலை, இந்தியர்களின் பெரும்பாலான உணவுகளிலும், நமது வீட்டுத் தோட்டங்களிலும் காணப்படக்கூடியது ஆகும். காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிடுவது உணவில் இருந்து சர்க்கரை உற்பத்தி ஆகும் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இது இயற்கையாகவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், கறிவேப்பிலையில் உள்ள நார்ச்சத்து நீண்ட காலத்திற்கு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

உயர் கொலஸ்டிரால் காரணமாக உங்கள் உடலில் இந்த வலிகள் தோன்றலாம்

2.அமிர்தவல்லி இலை:

அமிர்தவல்லி இலை, கிலோய், குடுச்சி, சீந்தில் கொடி என பலவகையான பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதனை காலையில் தேநீர் போலவோ அல்லது அப்படியே அரைத்து சாறு தயாரித்தோ உட்கொள்ளலாம். அதை விட எளிமையாக அப்படியே சில இலைகளை பறித்து தண்ணீரில் சுத்தம் செய்து, மென்று சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த கசப்பான மூலிகை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கல்லீரல் மற்றும் மண்ணீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இந்த மூலிகை ஒவ்வாமையை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.



3. வேம்பு:

கசப்பு தன்மை கொண்ட வேம்பு நீரழிவு நோய்க்கு எதிரான மூலிகை என்பது பலரும் அறிந்ததே. இதனை தேநீர் அல்லது டிடாக்ஸ் வாட்டராக எடுத்துக்கொள்வது ரத்தத்தில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

4. அஸ்வகந்தா:

ஆயுர்வேதம் எனும் புதையல் தரும் ரத்தினமாக அஸ்வகந்தாவை ஆயுர்வேத மருத்துவ உலகினர் போற்றி புகழுகின்றனர். இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, மூளையின் செயல்பாட்டிற்கு சிறந்தது, மன அழுத்தம், சோர்வு மற்றும் மூளையின் விழிப்புணர்வை அதிகரிக்கிறது. இந்த மூலிகையை தேநீர் வடிவில் அல்லது பாலுடன் கலந்து குடிப்பதன் மூலம் அதன் செயல்திறனை அதிகரிக்க முடியும். இந்த மூலிகை ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கக்கூடியது என்பதால், ஒரு சிறந்த படுக்கை நேர பானமாகவும் இது பயன்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes

அடுத்த செய்தி