குழந்தை பெற்ற பிறகு என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்று புதிய தாய்மார்களுக்கு குழப்பம் ஏற்படக் கூடும். இந்த விஷயத்தில் பரிசீலனை செய்வதற்கு நிறைய இருக்கின்றன. பிரசவத்திற்கு முன்பு எப்படி இருந்தோமா, அதே உடல் வாகை பெற வேண்டும் என்பது பெண்களின் விருப்பமாக இருக்கும். குறிப்பாக, உடல் எடையை முந்தைய நிலைக்கு கொண்டு செல்ல விரும்புவார்கள். குறிப்பாக, பாலூட்டும் காலத்திலேயே இந்த அனைத்து முயற்சிகளும் நடைபெறும்.
இதுபோன்ற சமயத்தில் தான் பெண்களுக்கு அதிக குழப்பம் ஏற்படும். குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் ஆர்வத்தில், சிலர் தங்களின் உடல் நலனை மறந்திருப்பார்கள். ஆகவே, புதிய தார்மார்களின் குழப்பத்திற்கும், கேள்விகளுக்கும் விடையளிக்கும் விஷயங்கள் இந்தச் செய்தியில் உள்ளன.
ஆரோக்கியமான உணவுப் பட்டியல்
கலோரிகள்
குழந்தை பிறப்பை தொடர்ந்து, நீங்கள் பாலூட்ட வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, இந்த சமயத்தில் ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகள் அவசியம். நாளொன்றுக்கு 300 முதல் 400 கலோரிகள் வரையுள்ள உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும்.
புரதம்
நீங்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் புரத உணவுகளைக் காட்டிலும் சற்று கூடுதலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளைக்கான சாப்பாட்டில், ஒரு முறை மட்டும் புரதம் எடுத்துக் கொண்டால் போதுமானதாக இருக்காது. ஆகவே, ஒவ்வொரு வேளை சாப்பாட்டிலும் புரதச் சத்து அடங்கிய வெவ்வேறு உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேல்கடாகோக்ஸ்
பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்தச் சத்து மிக, மிக அவசியாமது. ஏனென்றால், தாய்ப்பால் சுரப்பை இது தூண்டக் கூடியது. பப்பாளிப் பழம், நட்ஸ், நிலக்கடலை, பீன்ஸ், இஞ்சி, ஜீரகம் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இந்த சத்து உங்களுக்கு கிடைக்கும்.
ஆயுர்வேதத்தின் படி உங்கள் நாளை ஒரு ஸ்பூன் நெய்யுடன் தொடங்கினால் இந்த பிரச்சனைகளே இருக்காது..!
மினரல்ஸ்
உடலுக்கு ஜிங்க், ஃபோலேட் போன்ற சத்துக்கள் மிக அவசியமானது. இந்தச் சத்துக்கள் நிரம்பிய உணவை தவிர்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பாலூட்டும் காலத்தில் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் :
முழு ஓய்வு கூடாது
குழந்தை பெற்ற பெண்கள் சோர்வாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில், அவர்களை எப்போதும் ஓய்வெடுக்கச் சொல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால், அது சரியான பழக்கம் அல்ல. உடலுக்கு கொஞ்சமேனும் உழைப்பு இருக்க வேண்டும். அதேசமயம், நீங்கள் மிகுந்த சிக்கலுக்கு இடையே குழந்தையை பெற்றெடுத்தவர் என்றால் மட்டும் ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது.
கடலை எண்ணெய் சமையலுக்கு நல்லதா..? பகீர் உண்மைகளை வெளியிடும் நிபுணர்கள்..!
உடல் எடை குறைப்பு கூடாது
குழந்தை பெற்ற உடனேயே மீண்டும் பழையபடிக்கு கட்டுக் கோப்பான உடல் அழகை பெற்றுவிட வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கும். ஆனால், இதற்கான உடனடி முயற்சிகள் தவறானது. உங்கள் உடல் ஆரோக்கியமாக மீண்டு வருவதற்கு சிறிது அவகாசம் அளித்த பின்னர், இந்த முயற்சியை செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.