Home /News /lifestyle /

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறீர்களா..? இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறீர்களா..? இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள்

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள்

இனிப்பு சேர்த்த கார்போனேட்டட் பானங்கள், பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்த உணவுகள், ஸ்ப்பிரெட்ஸ், ரஸ்க், காலையில் சாப்பிடும் பேக்கிங் செய்த தனியா வகைகள், ப்ரூட் யோகர்ட் போன்றவை நோவா முறையை பயன்படுத்தி (NOVA system) தயாரிக்கப்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கால மாற்றத்துக்கு ஏற்ப நமது உணவு பழக்கம் முதல் தினசரி செயல்பாடுகள் வரை, எல்லாமே மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் இவற்றில் பல, நல்ல மாற்றங்கள் இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக உடலுக்கு தேவையான நல்ல சத்துக்களை தரக்கூடிய உணவுகளை சமைத்து சாப்பிடுவது சிறந்தது. மேலும் உணவில் சேர்க்கப்படும் காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவை ஃபிரஷானதாக இருக்க வேண்டியவது அவசியம். வாழ்வியல் மாற்றத்திற்கு ஏற்ப இன்ஸ்டன்ட் ஃபூட் என்று சொல்லப்படும் உடனடி உணவுகளையே பலர் விரும்புகின்றனர்.

ஆனால் இந்த உணவுகளில் உள்ள அபாயத்தை பற்றி கண்டுகொள்வதில்லை. பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்து விற்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. I.R.C.C.S-இன் தொற்றுநோயியல் மற்றும் தடுப்புத் துறை நியூரோமெடின் பொசில்லி (இத்தாலி) நடத்திய ஆய்வில், பதப்படுத்தப்படும் உணவுகளை மக்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு தீவிரமான இதய நோய் பாதிப்புகள் உண்டாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல், ஐரோப்பிய சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, இரண்டாவது மாரடைப்பு (அல்லது பக்கவாதம்) ஏற்படுவதற்கான அதிக ஆபத்தை இது கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக மற்ற வகை உணவுகளை சாப்பிடுவதை விடவும், அதிகம் பதப்படுத்தப்படும் உணவுகளை சாப்பிடும் மக்களுக்கு மோசமான ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மோலி-சானி தொற்றுநோயியல் திட்டத்தில் 1,171 பேரை கொண்டு ஆய்வு நடத்தினர். இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே சில இதய நோய்கள் இருந்துள்ளன. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடர்ச்சியாக அவர்களின் உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. மேலும் சமையலில் வழக்கமாகப் பயன்படுத்தப்படாத பொருட்கள் (ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட புரதங்கள், மால்டோடெக்ஸ்ட்ரின்கள், ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள்) மற்றும் சாயங்கள், பிரிசர்வேட்டிவ்ஸ், ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், ஆன்டிகேக்கிங் ஏஜெண்டுகள், சுவையை மேம்படுத்தும் இனிப்பூட்டிகள், இனிப்புகள் போன்றவற்றை இவை கொண்டிருக்கும்.இனிப்பு சேர்த்த கார்போனேட்டட் பானங்கள், பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்த உணவுகள், ஸ்ப்பிரெட்ஸ், ரஸ்க், காலையில் சாப்பிடும் பேக்கிங் செய்த தனியா வகைகள், ப்ரூட் யோகர்ட் போன்றவை நோவா முறையை பயன்படுத்தி (NOVA system) தயாரிக்கப்படுகின்றன. இந்த முறையில் உணவுகளை அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பைக் காட்டிலும் செயல்முறையின் அளவைப் பொறுத்து மதிப்பிடப்படுகிறது.

தொற்றுநோயியல் மற்றும் தடுப்புத் துறையின் ஆராய்ச்சியாளர் மற்றும் ஆய்வின் முதல் ஆசிரியரான மரியாலாரா பொனாசியோ இதை பற்றிய பல முக்கிய ஆய்வுகளை நடத்தியுள்ளார். அதிக அளவில் பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்த உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலம் இரண்டாவது மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 40% அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

உடலில் நடக்கும் இந்த 5 விஷயங்களை உங்களால் தடுக்கவே முடியாது : தோல் மருத்துவர்கள் விளக்கம்

நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் தரத்தை பொறுத்து தான் நமது உடல் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படும். எனவே ஃபிரஷ் காய்கறிகள், பழங்கள், அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தனியா வகைகள் போன்றவற்றை எடுத்து கொள்வது சிறந்தது. இதனால் ஆரோக்கிய நலன்கள் மட்டுமே உடலுக்கு கிடைக்கும். மாறாக எந்தவித உடல் பாதிப்புகளும் ஏற்படாது என்பதை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food, Junk food, Processed Food

அடுத்த செய்தி