உணவு தான் நமது உடல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவுகிறது. எனவே, ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், காட்டாயம் நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவினை சாப்பிடுவது மிக அவசியம். ஊட்டச்சத்து உணவினை மட்டும் சாப்பிட்டால் போதுமா என்று கேட்டால், அதுதான் இல்லை. நாம் ஆரோக்கியமாக உணவினை சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதேஅளவுக்கு நாம் உண்ணும் உணவைப் சரியான நேரத்தில் உண்பதும் முக்கியம். ஏனெனில் சமச்சீரான உணவினை ஒழுங்கற்ற சுழற்சி முறையில் சாப்பிடும் போது அது சில உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
சயின்ஸ் டெய்லி பத்திரிகையில் வெளியான ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வில், இரவு நேர உணவுப் பழக்கம் மனித உடலில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் பகல்நேர உணவு இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. சயின்ஸ் அட்வான்சஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இரவு நேரத்தில் உணவு உண்பது உடலின் மைய மற்றும் புற சர்க்காடியன் கடிகாரங்களுக்கு இடையில் சீரமைப்பை ஏற்படுத்துகிறது. அவை 24 மணி நேர சுழற்சியில் மன உடல் மற்றும் நடத்தை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கையான நேரக் கண்காணிப்பாளர்களாக செயல்படுகின்றன.
இதுகுறித்து ப்ரிகாமில் உள்ள தூக்கம் மற்றும் சர்க்காடியன் கோளாறுகள் பிரிவில் உள்ள ஆய்வின் இணை ஆசிரியரும், மருத்துவ கால உயிரியல் திட்டத்தின் இயக்குனருமான ஃபிராங்க் ஏ.ஜே.எல். என்பவர் கூறியதாவது, குளுக்கோஸ் சகிப்புத்தன்மை மற்றும் பீட்டா-செல் செயல்பாட்டின் மீதான விளைவுகளுக்கு உணவு நேரமே காரணம் என்று ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
ஆய்வுக்காக, 14 நாள் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக நெறிமுறைக்கு உட்படுத்தப்பட்ட 19 ஆரோக்கியமான இளம் வயதினர் மீது உள்ளடக்கிய சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். சோதனையில், நிலையான உடல் தோரணைகள் மற்றும் ஒவ்வொரு மணி நேரமும் ஒரே மாதிரியான சிற்றுண்டிகளை உட்கொண்டனர். மேலும் பங்கேற்பாளர்கள் 32 மணிநேரம் விழித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
குளிர்காலத்தில் பற்கூச்சம் அதிகமாக ஏற்படுவதற்கு என்ன காரணம்..? சரி செய்யும் வழிகள்..!
மேலும், ஆய்வில் பங்கேற்றவர்கள் வெவ்வேறு உணவு அட்டவணைகளைப் பின்பற்றி இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். முதல் குழு இரவு ஷிப்ட் ஊழியர்களின் அட்டவணையை உருவகப்படுத்த இரவில் சாப்பிட்டனர். மற்ற குழு பகலில் சாப்பிட்டனர். அவர்களின் உணவு அட்டவணையை மத்திய சர்க்காடியன் "கடிகாரத்தின்" 24 மணி நேர சுழற்சியுடன் ஆராய்ச்சியாளர்கள் சீரமைத்தனர். இறுதியாக, பங்கேற்பாளர் தங்களது எண்டோஜெனஸ் சர்க்காடியன் தாளங்களில் உணவு அட்டவணையின் பின் விளைவுகளை மதிப்பிடுவதற்கு 40 மணிநேர நிலையான வழக்கமான நெறிமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர்.
அதில் இரவில் சாப்பிட்ட பங்கேற்பாளர்கள் அதிக இரத்த குளுக்கோஸ் அளவைக் கொண்டிருப்பதை கண்டுபிடிப்பு சுட்டிக்காட்டியது. அதேசமயம் பகலில் பிரத்தியேகமாக சாப்பிட்டவர்களுக்கு உடல் குளுக்கோஸ் அளவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை. மேலும், பகலில் மட்டும் சாப்பிடுபவர்களில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒப்பிடும்போது, இரவில் சாப்பிடுவது கணைய பீட்டா-செல் செயல்பாட்டைக் குறைத்தது என்பது கண்டறியப்பட்டது. பங்கேற்பாளர்கள் சரியாக தூங்க வில்லை என்றாலும் கூட பகல் நேர உணவு சுழற்சியை ஒப்பிடும் பொது இரவு நேர உணவு சுழற்சியை மேற்கொண்டவர்கள் உடலில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மை உருவானதை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood Sugar, Diabetes