• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பிஸ்கட் சாப்பிடுவது ரொம்ப பிடிக்குமா ? அப்ப இதை படிங்க..

பிஸ்கட் சாப்பிடுவது ரொம்ப பிடிக்குமா ? அப்ப இதை படிங்க..

காட்சி படம்

காட்சி படம்

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அதிகளவு எடுத்துக்கொண்டால் இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

  • Share this:
    உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகள், கடைகளில் அதிகளவில் கிடைகின்றன. கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் குறைந்த விலையில் அந்த பொருட்கள் கிடைப்பதால்,மக்களும் விரும்பி வாங்கி உண்ணுகின்றனர். அந்தவகையில், ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் உடல்நலத்துக்கு, குறிப்பாக இதய ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுகிறது.

    கார்டியாலஜி ஆப் அமெரிக்கன் கல்லூரி வெளியிட்ட ஆய்வு ஒன்றில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அதிகளவு எடுத்துக்கொண்டால் இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இறப்பை கூட தழுவ நேரிடும் என எச்சரிக்கிறது. அந்த ஆய்வு என்ன கூறுகிறது என்பதை பார்க்கலாம்.

    அதிகரித்த இறப்பு விகிதம் : ஏறக்குறைய சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எடுத்துகொண்ட உணவு முறை குறித்த தகவல்களை அமெரிக்கன் காலேஜ் ஆப் கார்டியாலஜி தொகுத்துள்ளது. அதில், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தினசரி எடுத்துக்கொண்டவர்கள்.

    உதாரணமாக புரதம் அல்லாத உணவுகள் அல்லது சோடா போன்ற பானங்களை எடுத்துக்கொண்டவர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் விகிதம் சுமார் 7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. புரதம் அல்லாத உணவுகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்பு உள்ளிட்ட பிற ஆரோக்கிய பாதிப்புகள் 9 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரொட்டி, பிஸ்கட்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளால் கரோனரி இதய நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

    சுவையூட்டிகள் : புரதம் அல்லாத மற்றும் அழகுக்காக தானியங்கள் நிரப்பப்பட்ட ரொட்டி உள்ளிட்ட உணவுகள் பார்ப்பதற்கும், காலை உணவாக எடுத்துக் கொள்வதற்கும் நன்றாக இருக்கும். ஆனால், அவற்றில் சுவையை கொடுப்பதற்காக அதிகப்படியான சர்க்கரை மற்றும் உப்பு மறைமுகமாக சேர்க்கப்பட்டிருக்கும். கூடுதலாக ரசாயன சுவையூட்டிகளும் கலக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் அந்த உணவுகளை சாப்பிடும்போது எடை அதிகரிப்பு, இதய நோய் பாதிப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதால் புற்றுநோய் ஏற்படவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

    also read : சிப்ஸ் சாப்பிடுவதால் உடலில் இந்த பிரச்சனைகள் வருமாம்.. தெரிஞ்சிக்கோங்க..

    நோயில் இருந்து விடுபட : இதயநோய் உள்ளிட்ட பிற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான அடிப்படை காரணம் தவறான உணவுப்பழக்கம் ஆகும். எளிதாக கிடைக்கும் புரதங்களற்ற உணவுகளை குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக சாப்பிடுகிறோம். ஒரு சிலர் அந்த சுவைகளுக்கு அடிமையாகி நாள்தோறும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால், நாள்தோறும் நீங்கள் சாப்பிடும் உணவை கண்காணிக்க வேண்டும்.

    அதில், ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளான குளிர்பானம், ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுகள் ஆகியவற்றை பட்டிலிட்டு, மெதுவாக ஆரோக்கியமற்ற உணவுகள் எடுத்துக்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஒரு கட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள பழகிக்கொள்வீர்கள். நோய் பிரச்சனையில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: