ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது பலவிதமான நோய்களுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக இதய நோய்கள் பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக ஹை கொலஸ்ட்ரால் இருக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பலரும் இதய நோய் பாதிப்பால், உடல் பருமனால் அவதிப்படுவதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதும் அதிக கொலஸ்ட்ரால் இருக்கும் உணவுகளை சாப்பிடுவதும் தான்.
உடலுக்கு கொலஸ்ட்ரால் மிகவும் அவசியம், ஆனால் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது தான் பிரச்சனையாகிறது. எனவே கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு வாழ்க்கை முறை மாறுதல் முதல் மருந்துகள் வரை சில தீர்வுகள் இருக்கின்றன. இருப்பினும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தினமும் ஒரு அவகோடா, அதாவது பட்டர் ஃப்ரூட் என்று கூறப்படும் வெண்ணைப் பழம் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வரும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஒரு சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அதன் தாக்கம் உடலில் பல விதங்களாக வெளிப்படும். அந்த வகையில் பென்ன் ஸ்டேட் ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் அவகோடோ சாப்பிடுவதால் உடலில் என்ன மாதிரியான விளைவுகள் அல்லது முடிவுகள் தெரிகிறது என்பதை கூறியுள்ளனர்.
தினமும் ஒரு அவகோடா என்ற ரீதியில் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து அவகோடா சாப்பிட்டு வந்தாலும், வயிற்று சுற்றளவு, கொழுப்பு, வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பு, தொப்பை அல்லது கல்லீரலில் இருக்கும் கொழுப்பு ஆகியவற்றில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உடல் எடை அதிகரிக்கவில்லை, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பும் அதிகமாகவில்லை என்று ஆய்வு கூறுகிறது. இருப்பினும் உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு தினமும் அவகேடோ சாப்பிடுவதால் குறைகிறது என்பதை இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது.
தினமும் ஒரு அவகோடா சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கவில்லை, உடலின் உடல் பருமனும் அதிகரிக்கவில்லை, அது மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்பு கொலஸ்ட்ராலும் குறைந்துள்ளது. இவை அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.
வாயு தொல்லையால் அவதியா..? இந்த எளிமையான யோகாசனங்களை முயற்சி செய்யுங்கள்.!
டெக்சாஸ் டெக் யூனிவர்சிட்டியின் ஊட்டச்சத்து அறிவியல் உதவி பேராசிரியரான கிறிஸ்டினா பீட்டர்சன் இதை பற்றி கூறுகையில் ‘அவகோடாவை தினமும் சாப்பிடுவது பங்கேற்பாளர்களின் உணவுப் பழக்கத்தில் உள்ள தரத்தை, அதாவது அவர்கள் எவ்வளவு ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிறார்கள் என்பதை எட்டு புள்ளிகள் அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அதாவது தினமும் அவகாடோ சாப்பிடுவர்கள் தங்களுடைய உணவுப் பழக்கத்தின் தரத்தை அதிகரித்து இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.
நாம் சாப்பிடும் உணவுகளின் தரம் எப்படி இருக்கிறது, ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறோமா? இல்லையா? என்பதன் அடிப்படையில்தான் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் இந்த டயட்டரி வழிமுறைகள் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒருவரின் உணவுப் பழக்கத்தின் தரம் குறைவாக இருந்தால் அவருக்கு இதய நோய், நீரிழிவு மட்டுமல்லாமல் பலவிதமான தீவிரமான பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?
இந்த ஆய்வில் அதிக எடையுள்ள அல்லது உடல் பருமனான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு ஆறு மாதத்திற்கு நடத்தப்பட்டது. ஆய்வு பங்கேற்பாளர்கள் தங்களுடைய வழக்கமான உணவு பழக்கத்தை தொடர்ந்தபடியே தினமும் ஒரு அவகோடாவை சாப்பிட்டு வந்தனர். அவகோடா அதிக கொழுப்புள்ள பழமாக இருந்தாலும் அவகோடா சாப்பிடுவதால் உடல் எடை யாருக்குமே அதிகரிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் மருத்துவ ரீதியாக வயிற்று கொழுப்பு பகுதிகளில் பல வித முன்னேற்றங்களும் மற்றும் இதயம் சார்ந்த மெட்டபாலிக் ரேட்டிங்கில் ஆபத்துகளும் குறைந்துள்ளது என்றும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அவகோடா சாப்பிடுவதால் உடலுக்கு எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றிய விரிவான ஆய்வு இதுதான் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு அவகோடா சாப்பிடுவதால் பாடி மாஸ் இன்டெக்ஸ் மற்றும் வயிற்று சுற்றளவு குறைகிறதா என்பதை சம்பந்தப்படுத்தி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் அதில் சிறிய எண்ணிக்கையிலேயே கலந்து கொண்டனர். எனவே, கணிசமான எண்ணிக்கையில் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த ஆய்வு நீண்ட காலத்துக்கு மேற்கொள்ளப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.