பாதாம் சாப்பிடுவதால் பல நன்மைகளை பெற முடியும் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் புதிதாக வெளியாகியுள்ள ஆய்வில் ஒரு நாளைக்கு இரண்டு முறை பாதாம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் கொழுப்பின் அளவையும் சீராக்கி கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று கூறியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில், உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இதில் அதிக அளவிலான எண்ணிக்கை இந்தியாவில் இருப்பது கசப்பான உண்மை. அதாவது வருடத்திற்கு சுமார் 14-18% பேர் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதை வாழ்க்கை முறை மாற்றத்தால் சரி செய்ய முடியும் என்றும் கூறுகிறது. அப்படி எதெந்த வகைகளில் நம் வாழ்க்கை முறை மூலம் சரி செய்யலாம் என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
அதில் ஒன்றுதான் இந்த புதிய ஆய்வு. அதவது, சிற்றுண்டி தேர்வுகள் என்று வரும்போது, பாதாம் ஒரு எளிதான மற்றும் சுவையான - உணவாகும். எனவே பாதாமை சிற்றுண்டியாக இளம் பருவத்தினருக்கும், இளம் வயதினருக்கும் கொடுத்து வந்தால் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை முன்கூட்டியே தடுத்து நீரிழிவு நோயை எதிர்காலத்தில் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளது.
இந்த சீரற்ற கட்டுப்பாட்டு மருத்துவ சோதனை, இரத்த குளுக்கோஸ் உயர்வு, லிப்பிடுகள் (lipids), இன்சுலின் மற்றும் வளர்சிதை மாற்ற செயலிழப்பு காரணிகளில் பாதாம் நுகர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் மும்பையில் வசிக்கும் முன்கூட்டிய நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே (16-25 வயதுடையவர்கள்) அழற்சி நோய்க்கான அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் பாக்டீரியா பரவுமா..? மற்ற உணவுகளையும் பாழாக்கும் என எச்சரிக்கை...
பலவீனமான குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்துடன் 275 பங்கேற்பாளர்கள் (59 ஆண், 216 பெண்) இந்த ஆய்வில் பங்குபெற்றனர். ஆய்வின் தொடக்கத்தில், பங்கேற்பாளர்களின் எடை, உயரம் மற்றும் இடுப்பு மற்றும் இடுப்பு சுற்றளவு ஆகியவை அளவிடப்பட்டு உண்ணாவிரத இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் அவர்களின் லிப்பிட் சுயவிவரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒரு குழுவுக்கு பாதாம் கொடுக்கப்பட்டு முறையான உணவு பட்டியலும் கொடுக்கப்பட்டு கண்கானிக்கப்பட்டுள்ளது.
பின் ஆய்வு முடிவில் அவர்களை கண்காணித்ததில் ஒருவர் முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி அதோடு கூடிய பாதாம் சிற்றுண்டி என எடுத்துக்கொள்ளும் போது டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதோடு பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யாமல் தினசரி இரண்டு முறை பாதாம் சாப்பிட்டாலே கணிசமான வகையில் நீரிழிவு நோயை தவிர்க்கலாம். கொழுப்பை சமநிலை செய்யலாம் என்பதை குறிப்பிட்ட்ள்ளது. 12 வாரங்கள் பங்கேற்பாளர்களை கண்கானித்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இளைஞர்கள்,கல்லூரி மாணவர்கள் காலை உணவை தவிர்க்கிறார்கள் எனில் சிற்றுண்டியாக பாதாம் சாப்பிட்டால் கூட போதுமானது என்கிறது. எனவே இனி உங்கள் சிற்றுண்டி பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்ற விரும்பினால் முதலில் பாதாம் சாப்பிடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Almond, Cholesterol, Diabetes