குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்ய சோம்பேறித்தனமா..? எந்த பயிற்சியும் இல்லாமல் ஈசியா செய்ய இதோ டிப்ஸ்

மாதிரி படம்

குளிர்காலம் என்றாலே அதுவும் மழை பெய்துவிட்டால், அன்றைய தினம் பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெயால் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ்களை அள்ளி தின்று கொண்டாடுவோம்.

  • Share this:
உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் பட்டினி இருக்க வேண்டிய தேவையில்லை. சரியான நேரம் மற்றும் விகிதத்தில் உணவு உட்கொண்டாலே போதும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும். அந்தந்த பருவகாலத்திற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியம். குளிர்காலத்தில் தான் ஏராளமான பண்டிகைகளும் விழாக்களும் வரும். இதன் விளைவு நாமும் பலவற்றையும் சாப்பிட்டு உடல் பருமனை கூட்டி விடுவோம். குறிப்பாக இந்த குளிர்காலத்தில் மக்கள் சூடாகவும் காரசாரமாக சாப்பிட வேண்டும் என்று நிறைய இறைச்சி வகைகளை எடுத்துக் கொள்கின்றனர். இதுவே உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்து விடுகிறது.

எனவே இந்த குளிர்காலத்தில் நாம் முதலில் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலம் என்றாலே அதுவும் மழை பெய்துவிட்டால், அன்றைய தினம் பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெயால் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ்களை அள்ளி தின்று கொண்டாடுவோம். அதோடு இப்போது தீபாவளி வேறு, அதிரசம், முறுக்கு, ஓட்டைவடை என பலவும் செய்து சாப்பிட்டு உடல் எடையை கூட்டிக்கொள்வோம். பொதுவாகவே வெயில் காலங்களில் இருக்கும் சுறுசுறுப்பு மழைக் காலங்களில் பலருக்கும் இருப்பதில்லை. உண்மையில் குளிர்காலத்தில் கூட நம்மால் உடல் எடையை குறைக்க முடியும்.

குறிப்பாக குளிர்காலத்தில் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடிய சில டிப்ஸ்களை பார்ப்போம்.எலுமிச்சை - தேன் தண்ணீர் :

சூடான நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இந்த பானத்தில் உடலுக்கு மிகவும் அவசியமான ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலின் எடையும் குறைகிறது. எரிச்சலுக்கு எதிரான குணங்களை கொண்டிருக்கும் இந்த பானம் வயிறு உப்புசமடைவதையும் தவிர்க்கிறது. குளிர் காலம் என்றால் தண்ணீர் தாகம் எடுக்காது. அதற்காக தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படும். மேலும், குளிரின் போது தண்ணீர் தாகத்திற்கும், பசிக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் அவதிப்படுவர். தண்ணீருக்கு பதில் நன்றாக சாப்பிடுவார்கள். உண்மையில் தண்ணீர் குடித்தாலே பசி உணர்வு அவ்வளவாக இருக்காது. முதலில் இந்த புரிதல் அவசியம். தாகம் எடுக்கவில்லை என்றாலும் தண்ணீர் குடித்துவிடுவது நல்லது. அது உடல் எடையையும் குறைக்கும்.

Weight loss | Calories | உடல் எடை குறைப்பு, ஃபிட்னெஸுக்கான மிகக்குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளின் பட்டியல் இதோ..

சரியான உணவுத்திட்டம்:-

அதிகமான நார்ச்சத்து மற்றும் புரதம் அடங்கிய உணவை காலையில் சாப்பிட வேண்டும். இது உடலுக்கு போதுமான ஆற்றலை அளிக்கும். ஆகவே, இடையிடையே நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், உங்கள் வயிற்றை நீண்ட நேரம் பசிக்காமல் வைத்திருக்கும், இதனால் அடிக்கடி பசி எடுக்காது. மேலும், அவை அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவுகின்றன. மேலும் அவை ஆரோக்கியமான தசைகளின் வளர்ச்சியையும் அதிகரிக்கும். உங்கள் உணவில் முழு தானியங்கள், ஓட்ஸ், சோயா துண்டுகள், சன்னா, மூங், மசூர், முட்டை, ப்ரோக்கோலி, கொய்யா, இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, உலர்ந்த பழங்களை சேர்க்கவும்.கொழுப்பை குறைக்கும் கிரீன் டீ :

கிரீன் டீயில் கேட்சின்ஸ் அடங்கியுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகள் உள்ளன. கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிகம் உள்ள உயர்தர ஆன்டிஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது. சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 5 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்தும், உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

உலகம் முழுவதும் கிரீன் டீ அதன் எடை குறைப்பு பலன்களுக்காகப் புகழ் பெற்றுள்ளது. கிரீன் டீயில் உள்ள உட்பொருட்கள், எடை குறைப்பு செயல்முறைகளை ஊக்குவிக்கின்றன.

எடை குறைப்பிற்கு நடனம் - உடற்பயிற்சி - யோகா :

நன்றாக நடப்பதன் மூலம் தேவைக்கு அதிகமான எடையை குறைக்கலாம். தினந்தோறும் 1 மணி நேரம் நடந்தால் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம். 1/2 மணி நேரம் நடந்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். என்னதான் டயட் இருந்தாலும், சிறிய அளவாவது உடற்பயிற்சி செய்வது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். ஏற்கனவே சொன்னது போல இந்த கிளைமேட்டில் உடற்பயிற்சி செய்ய பிடிக்காதுதான்.

ஆனால், அதற்கு மாற்று வழி தான் இந்த நடனம். நமக்கு பிடித்த பாடலை டிவியில் போட்டுவிட்டு நன்றாக உடலை அசைத்து நடனம் ஆடலாம். இதன்மூலம் உடற்பயிற்சி செய்த பயனும் கிடைக்கும், மனதும் உற்சாகம் அடையும். யோகா ஆசனங்களைத் திட்டமிட்டு தவறாமல் செய்யுங்கள், குறிப்பாக காலை அல்லது மதிய உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் செய்தால் நல்ல பலனை பெறலாம். வழக்கமான உடற்பயிற்சிகள் அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவும். உங்கள் எடை குறைப்பு திட்டத்தில் யோகா ஆசனங்கள் நல்ல பலனை தரும்.நல்ல தூக்கம் :

உங்களுக்கு நல்ல மற்றும் தடையற்ற தூக்கம் வராவிட்டால் உடல் எடை குறைப்பிற்க்கான உங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும். ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கத்துடன் இணைந்தால் சவாலான உடற்பயிற்சி முறை சிறந்த முடிவை அளிக்கிறது. உடல் எடை குறைய வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், போதுமான அளவு உறங்க வேண்டும். சரியான தூக்கமில்லாமல் இருப்பது அடிக்கடி சோர்வுறச் செய்யும். பணிகளை திறம்பட செய்ய இயலாது. ஆகவே, உடல் அதிகமான சர்க்கரை உணவுகளை தேட ஆரம்பிக்கும் பின்னர் உடல் எடையும் கூடும்.

அதிக எடை உள்ளவர்கள், கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பதால், நீரிழிவு, மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாது.
Published by:Sivaranjani E
First published: