Home /News /lifestyle /

காபி, டீ பழக்கத்த விட முடியலையா? இந்த 7 விஷயங்களை பாலோ பண்ணிப்பாருங்க! 

காபி, டீ பழக்கத்த விட முடியலையா? இந்த 7 விஷயங்களை பாலோ பண்ணிப்பாருங்க! 

மாதிரி

மாதிரி

Health Tips | காஃபின் கலந்த காபி அல்லது தேநீர் உங்கள் காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றுவதாக உங்களுக்குத் தோன்றினாலும் அதன் மூலமாக உடலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளும் ஏராளம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு காலையில் எழுந்ததும் காபி, டீ இல்லாமல் பொழுது விடியாது என்பது தான் பொதுவான கருத்தாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உற்சாக பானமாக காபி உள்ளது. எஸ்பிரசோ, கேப்புசினோ, லாட்டே, ஐரிஷ் என பல வகைகளில் காபி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமும் உண்டு. காபியை இப்படி பலரும் விரும்ப காரணம் அதிலுள்ள காஃபின் எனும் வேதிப்பொருள், ஏனென்றால் இது மைய நரம்பு மண்டலத்தை தட்டி எழுப்பி, தூக்கத்தில் இருந்து நம்மை சுறுசுறுப்பாக மாற்ற உதவுகிறது.

  பல நிபுணர்கள் காபியில் இருக்ககூடிய நன்மைகள் காரணமாக ஒருநாளைக்கு 3 கப் அளவிற்கு பருகலாம் என பரிந்துரைக்கின்றனர். சில ஆய்வு முடிவுகளின் படி, சில நோயாளிகளுக்கு ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்தவும், அறிவாற்றல் குறைவை தாமதப்படுத்தவும் மற்றும் அல்சைமர் அபாயத்தை தடுக்கவும் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளன.

  காஃபின் கலந்த காபி அல்லது தேநீர் உங்கள் காலை பொழுதை சுறுசுறுப்பாக மாற்றுவதாக உங்களுக்குத் தோன்றினாலும் அதன் மூலமாக உடலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளும் ஏராளம். அதிகப்படியான காஃபினை உட்கொள்வது, உடலில் நீரிழப்பை ஏற்படுத்துவது, சர்க்கரை அளவை அதிகரிப்பது போன்ற பிரச்சனைகளை கொடுக்கிறது. எனவே, நீங்கள் இந்த காஃபின் பழக்கத்தில் இருந்து மீண்டு வர விரும்பினால் முறியடிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை முயற்சித்து பார்க்கவும்...

  காஃபின் உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது?

  காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை ஆகிய பிரச்சனைகள் ஏற்படுவதோடு, திடீரென காஃபின் கலந்த பொருட்களை உட்கொள்வதை நிறுத்துவது மனச்சோர்வு, ஒற்றைத் தலைவலி, உடல் எடையில் மாற்றம், மன அழுத்தம், மூட் ஸ்விங் போன்ற பக்கவிளைவுகளை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

  Read More : காலை உணவு சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமாக தோன்றுகிறதா? - இதை செய்யுங்க..


  - அதிகப்படியாக காஃபின் உட்கொள்வது தூக்கத்தை சீர்குலைக்கிறது.
  - கடுமையான தலைவலி
  - சிலருக்கு தளர்வான மலம் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
  - பதற்றம் போன்ற பிரச்சனைகளையும் உருவாக்கக்கூடும்.

  காஃபின் பழக்கத்தை முறியடிப்பதற்கான டிப்ஸ்கள்:

  1. காஃபின் எடுத்துக்கொள்ளாத சமயத்தில் சோர்வாக இருப்பது போல் உணர்ந்தால், தினந்தோறும் குடிக்கும் காபி அல்லது டீயின் அளவை மெதுவாக குறைக்கவும்.

  2. பால் கலந்த அல்லது ப்ளாக் டீ, காபிக்கு பதிலாக லெமன் டீ, கிரீன் டீ, தேங்காய் தண்ணீர் போன்ற மூலிகை பானங்களுக்கு மாற முயற்சிக்கலாம்.

  3. கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இது உங்கள் காஃபின் அருந்த வேண்டும் என்ற தூண்டுதலை குறைக்க உதவும்.

  4. ஹெல்தி லைப் ஸ்டைலுக்கு வாழ்க்கை முறையை மாற்றுங்கள். உடற்பயிற்சி, 8 மணி நேரம் முழுமையான தூக்கம், ஆரோக்கியமான உணவுகள், உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது போன்ற பழக்கங்களை கொண்டு வாருங்கள்.

  5. தினந்தோறும் 8 மணி நேரம் தூக்கம் கட்டாயம். எனவே காஃபின் பழக்கத்தை திருத்த முயற்சித்தால் நல்ல தூக்கத்தை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். இது இயல்பாகவே மூளையையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

  6. காஃபின் போதை பழக்கத்தை முறியடிக்க உடற்பயிற்சி மற்றொரு வழியாகும். தினமும் உடற்பயிற்சி செய்வது அல்லது வெறும் நடைபயிற்சி செய்தாலும் கூட நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்கலாம்.

  7. நீண்ட காலமாக வழக்கத்தில் இருந்த பழக்கத்தை திடீரென கைவிடுவது என்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே காஃபின் பழக்கத்தில் இருந்து விடுபட அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்படுவது அவசியம்.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Health, Lifestyle

  அடுத்த செய்தி