காதுக்குள் அழுக்கு, தூசி, சின்ன சின்ன மாசு துகள்கள் சென்று சவ்வை சேதப்படுத்துவதை தவிர்ப்பதற்காக பசை போன்ற ஒருவகை திரவத்தை சுரக்கிறது. வெளிப்புற காது ஓட்டையில் சுரக்கும் மொழுகு போன்ற திரவம் தான் காதுமெழுகு என அழைக்கப்படுகிறது. இந்த திரவம் காது துளைகளில் இருக்கும் தோலைப் பாதுகாப்பதோடு, நீர், பூச்சிகள் மற்றும் பிற பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள், வெளிப்புற தூசு, மாசு போன்றவற்றிக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த காது மெழுகில் கொழுப்பு அமிலங்கள், ஆல்கஹால், ஸ்குவாலீன் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை அடங்கியுள்ளன. காது மெழுகு 'செருமன்' என்றும் அழைக்கப்படுகிறது.
இது காதுகளில் ழுப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படுகிற்து. மூத்த ஆலோசகர் டாக்டர் எச்.கே. சுஷீன் தத்தின் கருத்துப்படி, "இது இறந்த சரும செல்கள் மற்றும் வெளிப்புற செவிவழி கால்வாயில் உள்ள (காது கால்வாய்) சுரப்பிகளின் கலவையாகும்” என மருத்துவ ரீதியாக விளக்குகிறார்.
இது பார்ப்பதற்கு அருவெறுப்பாக இருந்தாலும், காதுமெழுகு மூலமாக அதன் உட்புறத்திற்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. காதின் உட்புற தோலை பாதுகாக்கவும், தூசு, துகள்கள் ஆகியவற்றால் சேதமடைவதை தடுக்கவும் உதவுகிறது.
காதுமெழுகு அதிகம் இருப்பது ஏன்?
அனைவருக்கும் காது மெழுகு உற்பத்தியாவது இயல்பான ஒன்று தான் என்றாலும், சிலருக்கு காது கேட்காமல் செல்லும் அளவிற்கு அதிகப்படியான மெழுகு உற்பத்தியாக என்ன காரணம் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?, காது மெழுகு உற்பத்தி அதிகரிக்க மரபணு ரீதியான காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Pubic Hair Removal: பெண்கள் பிறப்புறுப்பில் வளரும் முடியை ஏன் நீக்கக்கூடாது..?
பிற நிற மெழுகுகளை விட வெள்ளை நிற மெழுகு அதிக அளவிலான செருமனை உற்பத்தி செய்வதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் சிறிய காதுகளைக் கொண்டவர்களின் காது வாய்களும் சிறியதாக இருக்கும் என்பதால், மெழுகு வெளியேற வழியில்லாமல் அதிக அளவில் உள்ளே தேங்குவதாக நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். காது மெழுகு உற்பத்தியை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதும் அதன் அளவு அதிகரிக்க காரணமாகிறது.
காது மெழுகை சுத்தப்படுத்துவது எப்படி?
காதுகளை வெளிப்புற அசுத்தங்களில் இருந்து பாதுகாப்பதற்காக செருமன் பயன்பட்டாலும், அதனை அவ்வப்போது நீக்க வேண்டும். இல்லையெல், காது கேட்கும் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் காதுகளில் உள்ள அழுக்கை சுத்தப்படுத்துவதற்காக காட்டன் பட்ஸ்களை பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் காதுகளில் உள்ள மெழுகை சுத்தம் செய்ய இயர்பட்ஸைப் பயன்படுத்தும் போது அது செருமனை காதுக்குள் ஆழமான பகுதிக்கு தள்ளக்கூடும் என்றும், இதனால் செவித்திறன் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் காதுக்குழாய் வழியாக பட்ஸை விடும் போது, நாம் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக காதில் நோய் தொற்று தாக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் காதில் பட்ஸ் போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதால், காயம், தொற்று, ரத்தக்கசிவு மற்றும் செவிப்பறையில் துளையிடுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே காதில் அதிகப்படியாக சேர்ந்துள்ள மெழுகை நீக்க நினைத்தால் ENT நிபுணர் பரிந்துரைக்கக்கூடிய சிரிங்கிங் அல்லது மெழுகு கொக்கி அல்லது சக்ஷன் கிளியரன்ஸ் போன்ற முறைகளைப் பின்பற்றி காதுக்கு உள்ளே உள்ள மெழுகை சுத்தம் செய்வது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.