ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

லாக்டவுனில் இயர்ஃபோன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டதா..? எச்சரிக்கும் ஆய்வுத் தகவல்..!

லாக்டவுனில் இயர்ஃபோன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டதா..? எச்சரிக்கும் ஆய்வுத் தகவல்..!

 இயர்ஃபோன்

இயர்ஃபோன்

காதுகளுக்கு 40 டெசிபல்தான் பாதுகாப்பான ஒலி, அதுவே 60க்கு மேல் சென்றால் ஆபத்து என்கிறார். நம் செல்ஃபோனில் ஒலியின் அளவு 70 டெசிபல் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 • News18 India
 • 2 minute read
 • Last Updated :

  இந்த லாக்டவுன் சமயத்தில் பொழுதைக் கழிக்க வீடியோக்கள் பார்ப்பது, பப்ஜி கேம் விளையாடுவது, பாட்டுக் கேட்பது என அனைத்திற்கும் எப்போதும் இயர்ஃபோன் சொருகிக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதில் இருக்கும் ஆபத்து என்ன தெரியுமா..?

  தொடர்ந்து செல்ஃபோன் கதிர் வீச்சும், தினசரி இயர் ஃபோன் பயன்பாடும் உங்கள் காதுகளில் உள்ள சவ்வுகளை சேதப்படுத்தும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

  அதாவது, தொடர்ந்து அதிக ஒலியில் காதுக்குள் சொருக்கிக் கொள்ளும் வகையிலான இயர் ஃபோன் பயன்படுத்தினால் காது கேட்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஆய்வு.

  இதுகுறித்து டெக்கான் க்ரானிகல் செய்திக் குறிப்பில் இன்றைய மக்களுக்கு காதுப் பிரச்னை அல்லது காது கேளாமை பிரச்னைகள் இருப்பின் அதற்கு பெரும்பான்மையான காரணம் இயர் ஃபோன் பயன்பாடுதான் என்று தெரிவித்துள்ளது.

  உங்கள் பிள்ளைகளின் செல்ஃபோன் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளதா..? இந்த விஷயங்களில் கவனமுடன் இருக்க சொல்லுங்கள்..!

  இதுகுறித்து ஆய்வு மருத்துவர்கள் குறிப்பில் “காது கேளாமை பிரச்னை என்பது உடனடியாக தெரியக்கூடியது அல்ல. நமக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். அப்படி உங்களுக்கு அதிக ஒலியான காலிங் பெல் அல்லது யாரேனும் உங்களை அழைத்தது கேட்கவில்லை எனில் உடனே மருத்துவரை அனுகுவது நல்லது” என்று கூறியுள்ளனர்.

  காதுகளுக்கு 40 டெசிபல்தான் பாதுகாப்பான ஒலி, அதுவே 60க்கு மேல் சென்றால் ஆபத்து என்கிறார். நம் செல்ஃபோனில் ஒலியின் அளவு 70 டெசிபல் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  மூளைக்கு நெருக்கமான அதிர்வலையை எழுப்பக் கூடிய இயர் ஃபோன் பயன்பாட்டின் அறிகுறி முதலில் காதுகளில் நரம்புகளிலிருந்தே துவங்கும். இதனால் அடிக்கடி காது வலி போன்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள். அதன் வீரியம் அதிகரித்தால் காது கேளாமை பிரச்னை ஏற்படும்.

  இது குறித்து மனநல மருத்துவர் பிராடிமா மூர்த்தி டெக்கான் க்ரானிகலுக்கு பேசிய போது “இப்படி அதீத சத்தம் காதுகளுக்கு மட்டுமன்றி அவர்களின் மன நிலையையும் மாற்றிவிடும். அவர்களை தனிமைப் படுத்தும். சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதையே தெரிந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். அவர்களை முற்றிலுமாக சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும்” என்கிறார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit


  லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: