ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கல்லீரல் நோய் ஏற்பட்டுள்ளதற்கான முக்கிய ஆரம்ப அறிகுறிகள்.!

கல்லீரல் நோய் ஏற்பட்டுள்ளதற்கான முக்கிய ஆரம்ப அறிகுறிகள்.!

கல்லீரல்

கல்லீரல்

தோல் அல்லது உங்கள் கண்களின் நிறம் மஞ்சளாக மாறினால் அது தீவிர கல்லீரல் நோய் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். ரத்த சிவப்பணுக்கள் சிதைவதால் உருவாகும் ஒரு சேர்மம் பிலிரூபின். இதனை கல்லீரலால் ப்ராசஸ் செய்ய முடியாது. இதனால் ரத்த ஓட்டத்தில் அதிக அளவு பிலிரூபின் கலக்க வழிவகுக்கிறது. இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். இது முடிவில் மஞ்சள்காமாலை ஏற்பட காரணமாகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் உடலில் அதிசய உறுப்புகள் பல இருந்தாலும் அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது கல்லீரல். நம் உடலின் மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் தன்னை தானே உயிர்ப்பித்துக் கொள்ளும் திறன் படத்தை ஆச்சரியமான உறுப்பாகும். நம் உடலில் பெரும்பாலான நேரங்களில் பிசியாக இருக்கும் உறுப்பால் செய்யப்பட்டு கொண்டிருக்கும் கல்லீரலில் ஏற்பட கூடிய சுமார் 90 சதவீத நோய்கள் தவிர்க்க கூடியதே என்று நிபுணர்கள் சொல்வது, நம் ஆரோக்கியத்தை நாமே எந்த அளவிற்கு சீர்குலைத்து கொள்கிறோம் என்பதற்கான சான்றாக இருக்கிறது. இதயம், மூளை போல முக்கியத்துவம் வாய்ந்த பெரிய உறுப்பாக இருக்கும் கல்லீரல் நம் ரத்தத்தில் உள்ள பெரும்பாலான கெமிக்கல் லெவல்களை ஒழுங்குபடுத்துகிறது.

வயிறு மற்றும் குடலில் இருந்து வெளியேறும் அனைத்து ரத்தமும் கல்லீரல் வழியாக தான் செல்கிறது. உணவு செரிக்க தேவையான பித்தநீர், ரத்தம் உறைவதற்கு உதவும் கெமிக்கல் உள்ளிட்டவற்றை கல்லீரல் தான் நமக்கு வழங்குகிறது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்யும் திறன் கொண்ட கல்லீரலை சேதப்படுத்துவது நாம் தான். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தவறும் போது கல்லீரலில் பிரச்சனை மற்றும் நோய்கள் ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, கட்டுப்பாடற்ற உடல் எடை, டைப் 2 நீரிழிவு, அதிகப்படியான கொழுப்பு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உடலில் சேர்வது, மரபியல் அல்லது வைரஸ்கள், காரணமாக கல்லீரல் நோய்கள் ஏற்படலாம்.

உடலில் உள்ள அனைத்து ரத்தத்தையும் வடிகட்டும் முக்கிய பணியை செய்யும் கல்லீரல் சரியாக இயங்குகிறதா என்பதை நாம் ஒவ்வொவருவரும் கண்காணிப்பது அவசியம். நம் கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்பதற்கான அறிகுறிகளை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி தனது இன்ஸ்டா போஸ்ட்டில் ஷேர் செய்து இருக்கிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Rashi Chowdhary (@rashichowdhary)கல்லீரல் நோயின் முக்கிய ஆரம்ப அறிகுறிகள் பின்வருமாறு:

கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்பதற்கான பொதுவான அறிகுறிகளில் முக்கியமானது குமட்டல் உணர்வு. ரத்த ஓட்டத்தில் உருவாகும் நச்சுகளை கல்லீரலால் சரியாக வடிகட்ட அல்லது அகற்ற முடியாத போது குமட்டல் உணர்வு ஏற்படுகிறது.
மலம் மிகவும் வெளிர் நிறமாக இருந்தால், மலத்திற்கு போதுமான பித்தம் வரவில்லை என்று அர்த்தம். பித்தப்பை, கணையம் அல்லது கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தான் மலத்தில் பித்த அளவு குறைவாக இருக்கும். எனவே கல்லீரல் ஆரோக்கியமாக இல்லை என்றால் வெளியேறும் மலம் டார்க்காக இல்லாமல் வெளிர் நிறத்தில் தொடர்ந்து வெளியேறும்.
தோல் அல்லது உங்கள் கண்களின் நிறம் மஞ்சளாக மாறினால் அது தீவிர கல்லீரல் நோய் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். ரத்த சிவப்பணுக்கள் சிதைவதால் உருவாகும் ஒரு சேர்மம் பிலிரூபின். இதனை கல்லீரலால் ப்ராசஸ் செய்ய முடியாது. இதனால் ரத்த ஓட்டத்தில் அதிக அளவு பிலிரூபின் கலக்க வழிவகுக்கிறது. இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். இது முடிவில் மஞ்சள்காமாலை ஏற்பட காரணமாகிறது.
அதே போல ரத்த ஓட்டத்தில் பிலிரூபின் சேர்மம் அதிகரித்தால் வெளியேறும் சிறுநீரும் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும்.
சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அடிக்கடி ஏற்பட்டால் அது கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஏனென்றால் கல்லீரலால் நாம் சாப்பிட்ட உணவை உறிஞ்சி பயன்படுத்த முடியாத போது பெருங்குடல் சுருக்கம் ஏற்பட்டு உடனடியாக மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
சேதமடைந்த கல்லீரல் ரத்தம் உறைவதற்கு உதவி செய்யும் குறைவான புரதங்களை உற்பத்தி செய்கிறது. எனவே காயத்திற்குப் பிறகு அதிக ரத்தப்போக்கு அல்லது சிராய்ப்பு ஏற்பட்டால், காயம் குணமாக அதிக நேரம் எடுத்து கொண்டால் கல்லீரல் வேலை செய்வதில் சிக்கல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
திரவம் குவிவதால் ஏற்படும் வயிற்று வீக்கம் பெரும்பாலும் கல்லீரல் நோயுடன் தொடர்புடையது. இந்த நிலை Ascites எனப்படுகிறது. கல்லீரலின் ரத்த நாளங்களில் அதிக அழுத்தம் மற்றும் அல்புமின் எனப்படும் புரதத்தின் குறைந்த அளவு ஆகியவற்றால் இந்த நிலை ஏற்படுகிறது. இது அடிவயிற்றில் திரவத்தைத் தக்கவைக்க வழிவகுக்கிறது. கால் மற்றும் கணுக்கால் வீக்கமும் கல்லீரல் நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
Published by:Josephine Aarthy
First published:

Tags: Liver Disease, Liver Health