கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது இந்திய பெண்களின் முக்கிய உடல்நலப் பிரச்சினையாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் 123907 பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இது மிகவும் தடுக்கக்கூடிய புற்றுநோயாக இருந்தாலும், இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பொதுவான புற்றுநோயாகும். இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில், இந்த நோயைப் பற்றி புரிந்துகொள்வோம். எனவே, இதை முடிந்த அளவுக்கு தடுக்கலாம்.
மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?
மகளிர் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர், டாக்டர் சம்பதா தேசாய் கூறுவதாவது, “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது பெண்களுக்கு மிகவும் மெதுவாக வளரும் புற்றுநோய் ஆகும். இந்த புற்று நோய்க்கு முந்தைய நிலை என்று ஒன்று உள்ளது, இது புற்று நோய்க்கு முந்திய நிலையில் இருந்து புற்றுநோயாக மாற பல ஆண்டுகள் ஆகும். இது புற்றுநோய்க்கு முந்திய நிலையில் அல்லது ஆரம்ப நிலையில் அதைக் கண்டறிய மருத்துவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.
புற்றுநோய்க்கு முந்திய நிலையில் கண்டறியப்பட்டால், இந்த புற்றுநோய் வராமல் தடுக்கலாம். இந்த புற்றுநோயை முன்கூட்டிய அல்லது ஆரம்ப நிலைகளில் கண்டறிய ஸ்கிரீனிங் சோதனைகள் உள்ளன. ஏனென்றால், ஆரம்ப நிலையின் அறிகுறிகள் இதற்கு இல்லை, அல்லது முற்றிலும் அறிகுறியற்றதாக இருக்கலாம் அல்லது அறிகுறிகள் குறிப்பிடப்படாதவையாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப அறிகுறிகள் :
அப்நார்மல் டிஸ்சார்ஜ் : பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளியேறும். இதில் துர்நாற்றம் இருக்கலாம் மற்றும் தண்ணீர் போல இருக்கலாம். வழக்கமான யோனியில் இருந்து திரவம் வெளியேறும் அளவு அதிகரித்தாலும் கவனம் தேவை.
இரத்தப்போக்கு : இது வழக்கமான மாதவிடாய் காலத்தை விட அதிகமாக அல்லது வடிவத்தில் இருக்கலாம். உடலுறவுக்குப் பிறகு இரத்தப்போக்கு அல்லது புள்ளிகள் கூட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும், இதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. சில நேரங்களில் இரத்தப்போக்கு மாதவிடாய் காலங்களுக்கு இடையில் இருக்கலாம்.
Also Read : 30 வயதை நெருங்கிட்டீங்களா..? உங்கள் உடலில் நடக்கப்போகும் இந்த மாற்றங்களை தெரிஞ்சுக்கோங்க..!
வயதான பெண்களில், இது மாதவிடாய் நின்ற பிறகு இரத்தப்போக்கு ஏற்படலாம். எந்த அளவிலும் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்பட்டால் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், தனது மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
சோர்வு: இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் இது மிகவும் குறிப்பிடப்படாத அறிகுறியாகும்.
முன்கூட்டிய அறிகுறிகள்
உடலுறவின் போது ஏற்படும் வலி :
உடலுறவின் போது ஏற்படும் வலி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முக்கியமான அறிகுறியாகும். மேலும், கால் வலி அல்லது குறைந்த முதுகுவலி அறிகுறியாக இருக்கலாம், மேலும் இவை பொதுவாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.
சிறுநீர்ப்பை மற்றும் குடல் அசைவுகளில் ஏற்படும் மாற்றங்கள்:
அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது நீங்கள் எப்போதும் செல்ல வேண்டும் என்று நினைப்பது நோயுடன் தொடர்புடைய அறிகுறிகளாகும். இந்த அறிகுறி ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் உங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும்.
Also Read : குளிர்காலத்தில் தொப்புளில் எண்ணெய் வைத்தால் நல்லது : ஏன் தெரியுமா..?
எடை இழப்பு
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மற்ற பல புற்றுநோய்களைப் போலவே, பசியின்மையை ஏற்படத்தலாம். கூடுதலாக, எவ்வளவு உணவை சாப்பிட்டாலும் உடல் எடையை குறைப்பது கடினமாக இருக்கும். போதுமான அளவு உட்கொண்ட போதிலும் திடீரென உடல் எடை குறைந்து மேலே குறிப்பிட்டுள்ள வேறு சில அறிகுறிகள் இருந்தால், அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாக இருக்கலாம். எனவே, இது போன்ற நிலைகளில் நீங்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது முக்கியம்
ஏறக்குறைய அனைத்து வகையான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களும், புற்றுநோயை உண்டாக்கும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) மூலம் ஏற்படுகின்றன. இது பாலியல் ரீதியாகப் பரவுகிறது. தொடர்ந்து HPV தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கக்கூடிய தடுப்பூசிகள் இப்போதும் கிடைக்கின்றன. மேலும் ஸ்கிரீனிங் சோதனைகள், பாப் சோதனை அல்லது HPV டிஎன்ஏ சோதனை போன்றவை இந்த வைரஸால் ஏற்படும் தொற்று மற்றும் HPV தொற்று காரணமாக ஏற்படும் உயிரணுவின் மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cervical cancer