குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் ஆண்கள் சீக்கிரமாகத் தூங்க வேண்டும் - ஆய்வில் தகவல்

படம் பார்ப்பது, அலுவலக வேலைகளைச் செய்வது, செல்ஃபோன் பயன்படுத்துவது என்று இரவு 11 மணிக்கு மேல் வரைப் பயன்படுத்தியபின் தாமதமாகத் தூங்கி தாமதமாக எழுவது ஆரோக்கியமல்ல.

news18
Updated: June 25, 2019, 5:56 PM IST
குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் ஆண்கள் சீக்கிரமாகத் தூங்க வேண்டும் - ஆய்வில் தகவல்
உறக்கம்
news18
Updated: June 25, 2019, 5:56 PM IST
பொதுவாகச் சீக்கிரம் தூங்கி அதிகாலை விழிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தற்போது வெளியாகியுள்ள ஆய்வில் ஆண்கள் சீக்கிரம் தூங்கி எழுந்தால் விந்தணுக்களும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

டென்மார்க்கில் உள்ள ஆரஸ் பல்கலைக்கழகம் 100 ஆண்களை உட்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதில் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் உள்ள ஆண்களுக்கு டென்மார்க் கருத்தரித்தல் கிளினிக் சிகிச்சை அளித்துள்ளது. அவர்களை 10.30 மணிக்கே படுக்கச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதைப் பின்பற்றிய ஆண்களுக்கு நான்கு மடங்கு ஆரோக்கியமான மற்றும் சரியான முறையில் விந்தணுக்கள் உற்பத்தியாகியுள்ளன. குழந்தையும் உருவாகியுள்ளது.

அதேபோல் தினமும் 11 அல்லது 11.30 மணிக்கு மேல் தூங்கச் செல்லும் ஆண்களுக்குக் குறைவான மற்றும் ஆரோக்கியமற்ற விந்தணுக்கள் உற்பத்தியாகும். அவை குழந்தை உருவாவதற்கான தகுதியற்ற விந்தணுக்கள் என்கிறது.பேராசிரியர் ஹான்ஸ் ஜாகொப் கூறியதுபடி ஆண்கள் சீக்கிரம் தூங்கி விழிக்க வேண்டும். அதை வழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆண்களுக்கு ஆழ்ந்த தூக்கம் , அதிகமான தூக்க நேரம் கிடைத்தால் அவர்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் அதில் இரவில் படம் பார்ப்பது, அலுவலக வேலைகளைச் செய்வது, செல்ஃபோன் பயன்படுத்துவது என்று இரவு 11 மணிக்கு மேல் வரைப் பயன்படுத்தியபின் தாமதமாகத் தூங்கி தாமதமாக விழிப்பது ஆரோக்கியமல்ல என்றும் எச்சரிக்கிறது.


Loading...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...