மனநிலை மாற்றங்கள், எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பது, பயம் மற்றும் பதட்டம் போன்றவையெல்லாம் டிமென்ஷியா எனும் மறதி நோயின் ஆரம்ப மற்றும் பொதுவாக அறிகுறிகளாகும். எனவே எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மறதி என்பது நம்மில் அனைவருக்கும் இருக்கும் பொதுவான விஷயமாகும். ஒரு பொருளை எந்த இடத்தில் வைத்தோம் என்று தெரியாமல் தேடி அலைவது. பின்னர் நடந்தவற்றையும் நினைவுக்கூர்ந்து அதனைக் கண்டறிவது போன்ற நிகழ்வுகள் நம் வாழ்வில் அடிக்கடி நடந்திருக்கும். ஆனால் டிமென்ஷியா என்றழைக்கப்படும் மறதி நோய் என்பது மிகப்பெரியப் பாதிப்பை ஏற்படுத்துமாம்.
குறிப்பாக மறதி நோய் பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாகப் பாதிக்கப்பட்டு, அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளைக் கட்டுபடுத்தும் திறன், உடலின் செயல்பாடு என அனைத்தும் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை இதற்கான மருந்துகள் எதுவும் கண்டறியப்படாததால் சுகாதாரத்துறைக்கு மிகப்பெரிய சவாலாகவே இந்நோய் உள்ளது. இதோடு மட்டுமின்றி இனி வரும் காலங்களில் மிகப்பெரிய மற்றும் சமூக நெருக்கடியாக டிமென்ஷியா நோய் இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகள்:
டிமென்ஷியா எனும் மறதி நோய் குறித்து உலக சுகாதார அமைப்பே எச்சரிக்கும் நிலையில், இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். இன்றைக்கு உள்ள சூழலில் 40 முதல் 45 வயது அடைந்தாலே இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். எனவே இந்நோயின் ஆரம்ப மற்றும் பொதுவான அறிகுறிகள் என்ன என்பது இங்கே விரிவாக அறிந்துக்கொள்வோம்.
மனநிலை மாற்றங்கள்:
டிமென்ஷியாவின் பொதுவான அறிகுறி தான் மூட் ஸ்விங் அதாவது மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள். ஒரு வேலை செய்துக்கொண்டிருக்கும் போதே தேவையில்லாத யோசனைகள், ஒரு விஷயத்தை செய்யலாமா? வேண்டாமா? என பல சிந்தனைகள் வரக்கூடும்.
ஆர்வம் இல்லாமல் இருப்பது:
டிமென்ஷியா அறிகுறி உள்ளவர்கள் எதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். பொதுவாக அவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியைத்தரும் பொழுதுபோக்கு விஷயங்களில் குறைவான நேரத்தை செலவிடத் தொடங்குகின்றனர். மேலும் உறவினர்கள், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் குறைவான நேரத்தை செலவிடும் போது விரக்தியை அடைகின்றனர். மேலும் மூளைக்கு தேவையில்லாத சிந்தனைகளையும் எடுத்துச்செல்லும் நிலை ஏற்படுகிறது.
உள்ளுணர்வுகளில் மாற்றம் ஏற்படுதல் ( sense of direction):
இந்நோயின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு உள்ளுணர்வுகளில் அதிக மாற்றங்கள் ஏற்படுத்துவதை உணர்வார்கள். பொதுவாக பழக்கமான அடையாளங்கள் கூட அவர்களுக்கு அந்நியமாகத்தோன்றக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எச்சரிக்கை... தோலில் மருக்கள் ஏற்படுவது நீரிழ்வு நோய்க்கான அறிகுறியா..?
மாற்றங்களை ஏற்க மறுக்கும் மனநிலை:
மறதி நோய் பாதிப்பு உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறை அல்லது அவர்கள் வாழும் சுற்றுப்புறங்களில் ஏற்படும் மாற்றங்களைக்கண்டு கவலைப்படும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஒருவேளை சில மாற்றங்கள் ஏற்பட்டால் பயம் அல்லது பதட்டமான உணர்வை அடைகிறார்கள். இது நிச்சயம் அவர்களின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடும்.
உரையாடலில் ஏற்படும் சிரமம்:
டிமென்ஷியா எனும் மறதிநோயின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளர்கள், மற்றவர்களுடன் உரையாடும் போது சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இதனால் மக்களுடன் பேசும் போது மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
இது போன்றவையெல்லாம் டிமென்ஷியாவின் ஆரம்ப மற்றும் பொதுவாக அறிகுறிகளாகும். பொதுவாக இந்நோய் 60 அல்லது 65 வயதை கடந்தவர்களுக்கு அதிகளவில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டாலும் இன்றைய சூழலில் மிகச்சிலருக்கு 40 அல்லது 45 வயதைக்கடந்தாலே ஏற்படக்கூடும். மேலும் இந்நோய் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்களின் நினைவாற்றல் முற்றிலும் இழக்கிறது. இதனால் மற்றவர்களின் உதவி இல்லாமல் அவர்களால் இருக்கவே முடியாது. எனவே ஆரம்ப கட்டத்திலேயே அனைவரும் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள அறிவுறுத்துகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dementia Disease