உடல் எடையைக் குறைக்க...சர்க்கரை நோயைத் தவிர்க்க... இந்த ஒரு விஷயத்தையும் செய்யவேண்டும்..

உடல் எடையைக் குறைக்க...சர்க்கரை நோயைத் தவிர்க்க... இந்த ஒரு விஷயத்தையும் செய்யவேண்டும்..
மாதிரி படம்
  • Share this:
இரவு சீக்கிரமாக உணவை சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றினால் உடல் எடையைக் குறைக்க உதவும். அதேசமயம் சர்க்கரை நோயும் வராது என ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

Endocrine Society’s Journal of Clinical Endocrinology & Metabolism வெளியிட்ட ஆய்வில் இரவு நேரம் தாழ்த்தி உணவு உண்பது உடல் எடையை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கிறது.

இந்த ஆய்வில் 10 ஆண்கள் 10 பெண்கள் என உட்படுத்தி அவர்களுக்கு 10 மணிக்கு மேல் உணவு கொடுத்து படுக்க வைத்ததில் உடல் எடை அதிகமாகியிருந்ததும் அதேசமயம் சர்க்கரை அளவு அதிகரித்ததையும் கண்கானித்துள்ளனர்.
பின்பு 7 மணிக்கு முன்பே உணவு கொடுத்து சீக்கிரம் தூங்க வைத்ததில் அவர்களின் எடை கணிசமான அளவில் குறைந்ததும், இரத்ததில் சர்க்கரை அளவு குறைந்தத்தையும் கண்டு வியந்துள்ளனர். எனவே இரவு சீக்கிரம் சாப்பிட்டு சீக்கிரம் தூங்குவது உடல் எடையைக் குறைக்க உதவும் என அந்த ஆய்வு கூறியுள்ளது.

அதேபோல் இரவு உணவு என்பது ஹெவியாக, காரசாரமாக இல்லாமல் மிதமான உணவாக சீக்கிரம் ஜீரணமாகக் கூடிய உணவாக இருக்க வேண்டும்.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading