தினமும் இரவில் ’இயர் ஃபோன்’ மாட்டிக் கொண்டே தூங்கிவிடும் பழக்கம் இருக்கா..? கண்டிப்பா படிங்க

”பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என இயர் ஃபோன் மாட்டிக்கொண்டு இரவைக் கழிக்கும் பழக்கம் பலரிடமும் வந்துவிட்டது”

தினமும் இரவில் ’இயர் ஃபோன்’ மாட்டிக் கொண்டே தூங்கிவிடும் பழக்கம் இருக்கா..? கண்டிப்பா படிங்க
இயர்ஃபோன்
  • Share this:
இன்று பலருடைய பிரச்னை தூக்கமின்மையால் அவதிப்படுவதுதான். இதை சமாளிக்க இரவில் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என இயர் ஃபோன் மாட்டிக்கொண்டு இரவைக் கழிக்கும் பழக்கம் பலரிடமும் வந்துவிட்டது. சில சமயம் இயர் ஃபோனில் பாட்டுக் கேட்டுக்கொண்டே தூங்கிவிடுவார்கள். செல்ஃபோனில் ஒலித்துக் கொண்டிருக்கும் இசையையும் அணைக்காமல் அப்படியே தூங்கிவிடுவார்கள்.

இப்படி தூங்குவதால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம்..!

இரவு தூங்கும்போது இயர் பட்ஸ் காதுக்குள் ஆழமாக சென்றுவிட்டால் காதுக்குள் அழுக்கு உருவாகும் வாய்ப்பு அதிகம். அழுக்கு இருந்தாலும் இயர் பட்ஸின் அழுத்தத்தால் அழுக்குகள் காதின் உள்ளுக்குள்ளே சென்றுவிடும். இது அப்படியே அதிகமாகி காற்று உள்ளே செல்லமுடியாமல் காது கேட்பதில் பிரச்னைகள் உண்டாகலாம்.


காதுக்குள் அரிப்பு, எரிச்சல், சீழ் வடிதல் போன்ற பிரச்னைகள் வரும். இதனால் காது வலி தீவிரமாகலாம். இந்த பிரச்னை நீச்சல் பயிற்சியாளர்கள் காதுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க அணியும் இயர் பட்ஸுகளாலும் உண்டாகும். அதேசமயம் தொடர்ந்து இயர் ஃபோன் அணிவதாலும் உண்டாகும்.இரவு தூக்கத்தில் திரும்பி படுக்கும்போது இயர் ஃபோன் சரியாக காதுக்குள் ஃபிட் ஆகாமல் வெளியே மாட்டிக்கொண்டு இருந்தாலும் அது தீவிரமான பிரச்னைக்கு வழி வகுக்கும்.அடுத்ததாக இயர் ஃபோன் அணிந்துகொண்டு தூங்குவதால் வெளியே வரும் சத்தங்கள் எதுவுமே கேட்காது. இதனால் இரவு உங்களை சுற்றி எது நடந்தாலும் தெரியாமல் போகலாம். அவசர உதவிக்கு அழைத்தாலும் அது கேட்காமல் போகும்.

லாக்டவுனில் இயர்ஃபோன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டதா..? எச்சரிக்கும் ஆய்வுத் தகவல்..!

எனவே இரவு தூக்கம் வருவதற்காக இயர் ஃபோன் அணிந்தாலும் அதை கவனமுடன் கழற்றிவிட்டு தூங்குவது நல்லது. உங்களுக்கு தூக்கம் வருவதுபோல் தோன்றினாலே கழற்றிவிடுங்கள்.

இல்லையெனில் இயர் ஃபோன் அணிவதைக் காட்டிலும் ஸ்பீக்கரில் மெல்லிய ஒலியில் பாட்டுக் கேட்பது இந்த பிரச்னைகளை முற்றிலும் தவிர்க்க நல்லது.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading