ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் காது வலியால் அவஸ்தைப்படுகிறீர்களா..? என்ன காரணம்..? சரி செய்யும் 10 வழிகள்..!

குளிர்காலத்தில் காது வலியால் அவஸ்தைப்படுகிறீர்களா..? என்ன காரணம்..? சரி செய்யும் 10 வழிகள்..!

காது வலி

காது வலி

நம் காதின் அமைப்பு மென்மையான திசுக்களால் ஆனது. நரம்புகளுடன் கூடிய அமைப்பால் மூளை மற்றும் தொண்டையை இணைக்கிறது. இதன் சில மென்மையான பாகங்கள் வெளிப்புறம் தெரியும்படி இருப்பதால் சுற்றுச்சூழல் மாசு , குளிர்கால காற்று காதை நேரடியாக பாதிக்கிறது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குளிர்காலத்தில் காது வலி என்பது பொதுவான விஷயம்தான் என்றாலும் அதை அலட்சியமாக விடுவது அதன் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும். அதோடு காதிலும் காதை சுற்றிலும் உண்டாகும் வலி நாள் முழுவதும் நம்மை பாடாய் படுத்திவிடும். சில நேரங்களில் இது மூளை வரை பரவி தலைவலி போன்ற தீவிர பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். இது எப்படி ஏற்படுகிறது , தவிர்க்கும் வழிகள் என்ன போன்ற விஷயங்களை தெரிந்துகொள்வது நல்லது.

  குளிர்காலத்தில் காது வலி உண்டாக என்ன காரணம்..?

  ”இதற்கு பல காரணங்கள் உள்ளன. நம் காதின் அமைப்பு மென்மையான திசுக்களால் ஆனது. நரம்புகளுடன் கூடிய அமைப்பால் மூளை மற்றும் தொண்டையை இணைக்கிறது. இதன் சில மென்மையான பாகங்கள் வெளிப்புறம் தெரியும்படி இருப்பதால் சுற்றுச்சூழல் மாசு , குளிர்கால காற்று காதை நேரடியாக பாதிக்கிறது. இதன் காரணமாக சளி அடைப்பு, வலி , தொற்று போன்ற தொந்தரவுகளை உண்டாக்குகிறது” என்கிறார் டாக்டர் குணால் நிகம், (துறைத் தலைவர் மற்றும் ஆலோசகர், ENTசானார் சர்வதேச மருத்துவமனை)

  மேலும் பல காரணங்கள் :

  தொற்று : சளியால் பாதிக்கப்பட்டிருந்தால் சிலருக்கு காதிலும் வலி இருக்கும். eustachian என்னும் குழாய் காதுடன் இணைக்கப்பட்டிருக்கும். தொண்டையிலிருந்து இதன் வழியாக தொற்று பாக்டீரியா காதுக்குள் பரவும். இதனால் காதும் தொற்றால் பாதிக்கப்பட்டு வலியை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையை அசால்டாக விடாமல் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். இல்லையெனில் சீழ் வைத்து தண்ணீர் வடிய ஆரம்பிக்கும்.

  மூக்கடைப்பு : சளி கட்டிக்கொண்டு தொந்தரவு செய்கிறது எனில் அது மூக்கடைப்பை உண்டாக்கும். இதன காரணமாகவும் பனிக்காலத்தில் காது வலி ஏற்படும்.

  இருமல் மற்றும் சளி : உங்களுக்கு குளிர்ச்சியான சூழல் இருந்தாலே இருமல் , சளியால் பாதிப்பு இருக்கும் எனில் இதன் நரம்பு அழுத்தம் காரணமாக காது வலிக்கலாம். இது தீவிரமாக இருப்பின் மருத்துவரை அணுகுங்கள்.

  Also Read : குளிர்காலத்தில் அதிகரிக்கும் மூட்டு வலிக்கு விட்டமின் டி குறைபாடுதான் காரணம்... தவிர்க்கும் வழிகள்..!

  சைனஸ் : உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருந்தாலே இயல்பாகவே காது வலியும் வரும். நரம்புகளின் அழுத்தம் காரணமாக தலை, காது வலி ஏற்படும்.

  குளிர் காற்று : பனிக்காலத்தில் அதிகமாக பயணம் செய்யும் நேரும்போது காதுக்குள் குளிர் காற்று செல்வதாலும் காது நரம்புகள் தீவிர வலியை உருவாக்கும்.

  காது வலியை தடுக்க உதவும் 10 வழிகள் :

  மருத்துவர் குணால் நிகம் பேசுகையில் “ குளிர்காலம் அல்லாமல் எப்போதும் காதின் சுத்ததை உறுதி செய்வது அவசியம். சிலர் காதை சுத்தமாக வைத்துக்கொள்ள தவறுகின்றனர். இதன் காரணமாகவும் தொற்று ஏற்படலாம். எனவே அடிப்படை சுகாதரத்தை மீறியும் காது வலி , பாக்டீரியா தொற்று உண்டாகிறது எனில் மருத்துவரை அணுகுங்கள். மிதமாக இருப்பின் இந்த குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்.

  எப்போது வெளியே சென்றாலும் காதை மூடிக்கொண்டு செல்லுங்கள். பனிக்காற்று காதில் நேரடியாக நுழைய அனுமதிக்காதீர்கள்.
  சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் , சளி, இருமலால் பாதிக்கப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.
  காதை சுத்தம் செய்ய ஹேர் பின் , குச்சி போன்ற பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். காட்டன் பட்ஸ் மட்டுமே பயன்படுத்தவும்.
  மருத்துவரின் ஆலோசனையின்றி காதில் எந்த ட்ராப்ஸும் நீங்களாக வாங்கி விடாதீர்கள்.
  சிறிய அறிகுறி இருந்தாலும் உடனே ENT நிபுணரை அணுகி சிகிச்சை பெறுங்கள். சில பாதிப்புகள் காது கேளாமை பிரச்சனையை கூட உண்டாக்கும்.
  வலி நிவாரணி மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைபடி பயன்படுத்துங்கள்.
  காது வலி இருப்பின் வெதுவெதுப்பான் ஒத்தடம் கொடுக்கலாம்.
  குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குளித்த பின் ஈரம் இருந்தாலும் உடனே துடைத்துவிடுங்கள்.
  குளிர்காலத்தில் காதை எப்போது மூடி வைத்திருப்பதே நல்லது. மேலே சொன்ன அனைத்தையும் குழந்தைகளுக்கும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Ear care, Ear Pain, Winter