E-cigarette: புகைப்பழக்கத்தை கைவிட இ-சிகரெட் உதவுகிறது : ஆய்வு அறிக்கை!

E-cigarette

ஆய்வின் பங்கேற்றவர்களின் சுவாசத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு சோதனை செய்யப்பட்டது. இந்த அளவீடுகளின் படி, இ-சிகரெட் குழுவில் 19% பங்கேற்பாளர்கள் முற்றிலுமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது

  • Share this:
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட, நிகோடின் மாற்று முறையை விட இ-சிகரெட் மிகவும் உதவியாக இருக்கிறதாக ஆய்வில் கூறுப்பட்டுள்ளது. இ-சிகரெட்டுகள் பயன்பாடு, கடந்த செப்டம்பர் 2019 முதல் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இந்த பழக்கத்திலிருந்து மீள்வதற்கு இ-சிகரெட் உதவலாம் என்று இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. ஆனால், இ-சிகரெட் குறித்த பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

நிகோடின் பயன்பாட்டை முழுமையாக நிறுத்தாததால் வரும் கடுமையான பாதிப்புகளை தவிர்க்க, வேறு விதமான முறைகளைப் பயன்படுத்தி புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலன் பெறலாம். புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த நிகோடின் மாற்று சிகிச்சை பரவலாக பயன்பாட்டில் உள்ளது. நீண்ட காலமாக இருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க மற்றும் நிறுத்த, நிகோடின் மாற்று சிகிச்சையை விட இ-சிகரெட்டுகள் மிகவும் பயனுள்ளாதாக இருப்பதாக, தற்போதைய புதிய ஆய்வு குறிக்கிறது.

லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் இந்த மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ‘அடிக்ஷன்’ என்ற ஜர்னலில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன. புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட 80 சதவிகிதத்தினர், அதை நிறுத்த தீவிரமான சிகிச்சை பெற்ற ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் புகைபிடிக்க தொடங்குகின்றனர். எனவே, நிகோடின் பயன்பாட்டை முழுவதும் நிறுத்தாததால் வரும் கடுமையான பாதிப்புகளை தவிர்க்க, வேறு விதமான முறைகளைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் நிகோடின் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்கும் தேர்வை மேற்கொண்டு, புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலன் பெறலாம்.

Also Read:   'மினி பாகிஸ்தான்' என ஃபேஸ்புக்கில் சர்ச்சை பதிவு: லைக்ஸுக்காக இளைஞர் செய்த விபரீதம்!

நிகோடின் பேட்சுகள், சூயிங்கம், நாசல் ஸ்ப்ரே/மவுத் ஸ்ப்ரே மற்றும் இன்ஹேலர்கள் ஆகியவை நிகோடின் மாற்று சிகிச்சைகள் ஆகும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சிகிச்சைகளாகப் பயன்படுத்த முறையான உரிமம் பெற்றுள்ளன. புகைபிடிப்பவர்கள் தங்கள் நடத்தைகளை மாற்றிக்கொண்டு ஆதரவு அளிக்கும் பட்சத்தில், இந்த முறைகள் பலனளிக்கின்றன. ஆனால், முடிவுகள் ஓரளவு சுமாரானவை.

வழக்கமான சிகிச்சை முறைகள் மூலம் புகைபழக்கத்தை கைவிடமுடியாமல் அவதிப்படும் 135 ஸ்மோக்கர்கள், முதல் முறையாக நடத்தப்படும் இத்தகைய ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். ரேண்டம் முறையில், அவர்களுக்கு நிகோடின் மாற்று சிகிச்சை அல்லது இ-சிகரெட் ஸ்டார்டர் பேக் வழங்கப்பட்டன. கூடுதலாக, அவர்கள் தேவைக்கு ஏற்ப இ-திரவங்களும், அவர்கள் விரும்பும் சுவைகளையும் வாங்குவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டன. அனைத்து தயாரிப்புகளும், புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான குறைந்தபட்ச ஆதரவை வழங்கின.

Also Read:   வயலின் பரிசாக கொடுத்த காவல்துறை ஆணையர்: இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்த முதியவர்!

ஆய்வின் முடிவுகள், இ-சிகரெட் குழுவில், கணிசமான அளவில் புகைபிடிப்பது குறைந்திருப்பதைக் காட்டியது (பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தியது உட்பட) என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, நிகோடின் மாற்று சிகிச்சை குழுவின் பங்கேற்பாளர்களில் 6 சதவிகிதத்தோடு ஒப்பிடும் போது, மின்-சிகரெட் குழுவில் பங்கெடுத்தவர்களில் கிட்டத்தட்ட 27% பேர் புகைபிடிப்பதை குறைந்தது பாதியாகக் குறைத்துள்ளனர்.

இந்த ஆய்வின் பங்கேற்றவர்களின் சுவாசத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு சோதனை செய்யப்பட்டது. இந்த அளவீடுகளின் படி, இ-சிகரெட் குழுவில் 19% பங்கேற்பாளர்கள் முற்றிலுமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், நிகோடின் மாற்று சிகிச்சைக் குழுவில் 3% மட்டுமே புகைப்பிடிப்பதை நிறுத்தியுள்ளனர் என்பது காணப்பட்டது. இது மிகவும் குறிப்பிடத்தக்க விகிதங்களில் காணப்படும் வேறுபாடு ஆகும்.

Also Read:   கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு: மத்திய அரசு ஆலோசனை!


புகைப்பிடிக்கும் பழக்கத்தை சார்ந்திருப்பவர்களுக்கு மாற்று சிகிச்சையை பரிந்துரைப்பதை விட, இ-திரவம் மீண்டும் நிரப்பக்கூடிய இ-சிகரெட் மற்றும் நோயாளிகளின் விருப்பச்சுவை என்ற வலிமையான தேர்வை பரிந்துரை செய்தது, இந்த முறையை மிகவும் பயனுள்ளதாக்கியுள்ளது என்பதை ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, இ-சிகரெட் ஸ்டார்ட்டர் பேக் நிகோடின் மாற்று சிகிச்சையை விட விலை மலிவானது.

இ-சிகரெட் பயன்பாடு பல்வேறு வகையில் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் பயன்பாடு சார்ந்த பிரச்சனைகள் இன்னும் உலகளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. லான்செட் பப்ளிக் ஹெல்த் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஆராய்ச்சியாளர்களான ஜாய் குமார் சக்மா, ஹேமந்த் குமார், ஸ்டூட்டி பார்கவா மற்றும் திரிப்தி கன்னா ஆகியோர் எழுதியது, "நிகோடின் பயன்பாடு என்பதை போதைப்பொருள் அடிமைப் போன்றது என்பதற்கு அப்பால், இதில் கூடுதல் சுவை மற்றும் ஈர்ப்புக்கு சேர்க்கப்படும் சுவையூட்டிகள், மணமூட்டிகள் மற்றும் அடிட்டிவ் ஏஜெண்டுகளில், புரோபிலீன் கிளைகோல் மற்றும் காய்கறி கிளிசரின் போன்றவை உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Also Read:   இன்ஸ்டாவில் இனி புகைப்படங்களை பகிரமுடியாது.. ஏன் தெரியுமா?

வெப்பமடையும் போது, கூடுதலாக சேர்க்கப்பட்ட இந்த பொருட்கள் ஃபார்மால்டிஹைட் மற்றும் அசிடால்டிஹைட் உள்ளிட்ட பல்வேறு சேர்மங்களை உருவாக்க முடியும், அவை மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய காரணியாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி, இ-சிகரெட்டுகளிலிருந்து கழிவுகளை அகற்றுவது மற்றும் இ-சிகரெட்டுகளை தயாரிப்பது ஆகியவை சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக. இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் இ-சிகரெட்டுகளின் பயன்பாடும், குறிப்பிடத்தக்க ஒரு கவலையாக உள்ளது, மேலும், அமெரிக்காவில், இ-சிகரெட் பயன்பாட்டால், கடுமையான நுரையீரல் நோய்களும் அதிகரித்து வருகின்றன.

இ-சிகரெட் பயன்பாடு குறித்து முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இருந்தாலும், புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து தங்கள் ழுழு பங்கேற்பாளர்கள் வெளியேற அல்லது மீள்வதற்கு இ-சிகரெட்டின் பங்கு மிகவும் இன்றிமையாதது என்றும், அவர்களின் ஒத்துழைப்பும் ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காட்டியதாகவும் லண்டன் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளரும் சுகாதார உளவியலாளருமான டாக்டர் கேட்டி மியர்ஸ் ஸ்மித்: “இதற்கு முன்பு, வழக்கமான சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி புகைபிடிப்பதை நிறுத்த முடியாத நபர்களுக்கு, இந்த ஆராய்ச்சி முடிவுகள் முக்கியமான மருத்துவ கண்டுபிடிப்புகளைக் கொண்டுள்ளன. புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட முயன்று, முடியாமல் போராடியவர்களுக்கு இ-சிகரெட்டுகள் பரிந்துரைக்கப்பட வேண்டும். அதிலும், குறிப்பாக, குறைந்த அளவிலான நடத்தை ஆதரவு கிடைக்கிறது" என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆய்வுக்கு நிதியளித்த புற்றுநோய் ஆராய்ச்சி பிரிட்டனின் தலைமை செயல் நிர்வாகி மைக்கேல் மிட்செல் கூறியது "புகைபிடிப்பதை நிறுத்த விரும்பும் மக்களுக்கு, இதற்கு முன்பு இந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு வெளியேற முயற்சித்தவர்கள் உட்பட, இ-சிகரெட்டுகள் மிகவும் பயனுள்ள கருவியாக இருக்கும் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. புகைபிடிப்பதை விட வாப்பிங் செய்வது மிகவும் குறைவான தீங்கு விளைவிக்கும் என்பதை, இதுவரை நடந்த ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதே நேரத்தில், இ-சிகரெட்டுகள் ஆபத்து இல்லாதவை அல்ல. அவற்றின் நீண்ட கால விளைவுகள் என்ன என்பது பற்றி எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, எனவே புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது" என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: