Coronavirus Safety : கொரோனா பாஸிட்டிவ்... என்னால் ஓட்டு போட முடியுமா? மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா விளக்கம்

Coronavirus Safety : கொரோனா பாஸிட்டிவ்... என்னால் ஓட்டு போட முடியுமா? மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா விளக்கம்

கொரோனா பாதுகாப்பு

கொரோனா காலத்திலும் அனைவரும் முன்வந்து கொரோனா நெறி முறைகளை கடைபிடித்து தைரியமாக ஓட்டளித்து உங்கள் ஜனநாயகக் கடமையை நிலைநிறுத்துங்கள்.

  • Share this:
"தகுதியான ஒருவர் கூட ஓட்டு போடாமல் விடுபட்டு விடக்கூடாது" என்பதே இந்திய தேர்தல் ஆணையத்தின் நோக்கும், இலக்கும் ஆகும். கொரோனா என்ற கொடிய நோயுடன் நாம் போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் , தேர்தலை நடத்தவேண்டிய தேவை இருப்பதால் சில சிறப்பு வழிமுறைகளை நமது தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. எந்த அளவுக்கு கொரோனா நெறி முறைகளை நாம் சரியாக பின்பற்றுகிறோமா அந்த அளவுக்கு பரவலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் .

 ஓட்டு போடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..!

1 .ஓட்டு போடும் நேரத்தை காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரை. இரண்டு மணி நேரம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

2.ஓட்டு போடுவதற்கு விசாலமான பெரிய அரங்குகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு நேரத்தில் ஒரு அதிகாரி முன்பு ஒரே ஒரு ஓட்டாளர் மட்டுமே நிற்க வேண்டும்..

3.. வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் வரவேற்பில் டோக்கன் (வில்லைகள்) கொடுக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் பலர் கூடுவதை தடுக்கிறது.



4. மக்களுடைய வசதிக்காக கொரோனா நெறிமுறைகள் குறித்த சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும்.

5.கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் முக கவசம் அணிந்துகொண்டு ஓட்டு போடும் இடத்திற்கு செல்ல வேண்டும். முகக் கவசம் அணிவது நம்முடைய அடையாளத்தை சரிபார்ப்பதற்கு இடையூறாக இருக்கும். எனவே சோதிக்கும் அதிகாரிகள் முன்பு கவசத்தை நீக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். பெரும்பாலான தேர்தல் பணி அதிகாரிகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டு விட்டதால் தைரியமாக செயல்படுவார்கள்.
முகக் கவசம் இல்லாதவருக்கு முக கவசம் கொடுக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

COVID-19 Vaccination : 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பு அவசியம் இதை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

6.அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். காய்ச்சல் இருந்தால் அன்றைய தினத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில் (6-7) வந்து ஓட்டு அளிக்கலாம்.

7. கைகழுவ சோப்பும் நீரும் வசதி செய்யப்படும். அது இயலாத இடங்களில் அனைவருக்கும் கை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்படும்.



8. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வட்டங்கள் வரையப்பட்டிருக்கும். அதில் நின்று கையுறை அணிந்து கொண்டு ஓட்டளிக்க வேண்டும்.

9.நமக்கு தேவையான (பேனா) எழுதுகோல் போன்றவற்றை நாமே எடுத்துச் செல்வது நல்லது.

10.ஓட்டு போடும் இடத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் தினமும் வெப்பநிலை பரிசோதனையும் அறிகுறிகள் இருக்கிறதா என்ற பரிசோதனை நடத்தப்படும் .ஏதேனும் இருப்பின் உடனடியாக மாற்று அதிகாரிகள் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11. நாம் உபயோகப்படுத்தும் கையுறைகள் , முக கவசம் போன்றவற்றை போடுவதற்கான இடம் மற்றும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

12. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் , தேர்தலில் பொறுப்பேற்கும் அதிகாரிகள் மற்றும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தபால் ஓட்டு போடும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



13. தகுதியான வாக்காளர்கள் அனைவரும் மாலை 6 மணிக்குள் தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

14. கடைசி ஒரு மணி நேரம் 6-7 காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் மற்றும்கொரோணா பாதிப்புக்குள்ளாவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் போடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Explainer : நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கும் நிலையில், பாதுகாப்பாக இருக்க மக்கள் செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை..!

15. தனிமைப் படுத்தப் பட்டவர்கள் ஓட்டுப்போட வரும் போது கவச உடை(PPE ) அணிந்து வரவேண்டும்.  உங்களிடம் கவச உடை இல்லை என்றாலும் தேர்தல் பொறுப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கவும். ஓட்டு போடும் இடத்தில் கவச உடையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

16.பொது போக்குவரத்தை தவிர்க்க வேண்டும். முடிந்த வரை சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவது நலம். 108 ஆம்புலன்ஸை அழைக்கலாமா என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால் சொந்த வாகனங்களை பயன்படுத்தலாம்.



தேர்தல் ஆணையம் , காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கொரோணா தடுப்பு முறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வர். உலகிலேயே ஓட்டு போட்டு தன்னுடைய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. கொரோனா காலத்திலும் அனைவரும் முன்வந்து கொரோனா நெறி முறைகளை கடைபிடித்து தைரியமாக ஓட்டளித்து அப்பெருமையை தக்க வைத்துக் கொள்வோம்.
Published by:Sivaranjani E
First published: