ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறுக்கு இரட்டை மருந்து (dual drug) சிகிச்சையை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆல்கஹாலுக்கு அடிமையானவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் நாள்தோறும் எப்படியாவது குடிக்க முயற்சி செய்வார்கள். அவர்களால் ஒருநாளும் குடிக்காமல் இருக்கமுடியாது. அவர்கள் பெரும்பாலும் ஆல்ஹகால் பயன்பாட்டுக்கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. அந்த போதை பழக்கத்தில் இருந்து அவர்களால் வெளியே வர முடியாது அல்லது எப்படி வெளியே வருவது என தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்காக தற்போது நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறைகளுக்கு சிக்கல் இல்லாமல் அல்லது பக்கவிளைவுகள் இல்லாத இரட்டை மருந்து சிகிச்சையை அமெரிக்க அய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Also Read:
ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..
அவர்கள் கண்டுபிடித்த இந்த ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன் என்ற இதழில் வெளியாகியுள்ளது. எலிகளைக் கொண்டு பரிசோதிக்கப்பட்ட இந்த ஆய்வு முறைகள், நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறையில் கிடைக்கும் பலன்களைவிட, வெற்றிகரமான முடிவுகளைக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆய்வாளர் டோரிட் ரான் பேசும்போது, ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறு என்பது நினைவகத்தின் செயல்முறை எனத் தெரிவித்துள்ளார்.
மூளையில் வலுவாக பதிந்திருக்கும் முடிவுகளினால் இந்தப் பிரச்சனை ஏற்படுவதாக தெரிவித்துள்ள அவர், அந்த குறிப்பிட்ட நரம்பு பாதைகள் தடுக்கப்ட்டால் அல்லது திசைதிருப்பப்பட்டால், ஆல்கஹால் பயன்பாட்டுக்கோளாறு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனத் தெரிவித்துள்ளார். பொதுவாகன ஆல்ஹால் பயன்பாட்டுக்கோளாறு என்பது நரம்பியல் சார்ந்த பிரச்சனையாக இருப்பதால், அவற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய வகையில் நினைவகங்கள் மற்றும் எண்ண ஓட்டத்தின் சங்கமங்கள் உருவாக காரணமாக இருக்கும் mTORC1 என்ற நொதியை ஆய்வு செய்ததாக டோரிட் ரான் தெரிவித்துள்ளார்.
Also Read:
அரசு உயர் அதிகாரி துன்புறுத்தியதாக கூறி முகத்தில் மண்ணை எறிந்த ஜூனியர் பெண் அதிகாரி.. வைரல் வீடியோ..
mTORC1 -ஐப் பொறுத்த வரையில் மூளை பிளாஸ்டிசிட்டியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இது நினைவகத்தை வலுப்படுத்த உதவும் நியூரான்களுக்கு இடையில் இணைப்புகளை உருவாக்க உதவுவதாகவும் கூறியுள்ளார். இதற்கு முந்தைய ஆய்வில் ஆல்ஹகால்கள் மூளையில் உள்ள நொதியை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை ரன் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த ஆய்வில் எப்.டி.ஏ-வால் அங்கீகரிக்கப்பட்ட ராபமைசின் மருந்துக் கலவையைப் பயன்படுத்தி mTORC1 நொதியின் செயல்பாட்டைத் தடுப்பது குறித்தும் ரான் விளக்கியுள்ளார். இந்த மருந்தானது சில புற்றுநோய் சிகிச்சைகளுக்கும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆல்ஹகால் பயன்பாட்டுக் கோளாறு பிரச்சனைக்காக தேர்தெடுக்கப்பட்ட எலிகள் மீது இந்த மருந்தை பயன்படுத்தும்போது, ஆல்ஹால் குறித்த எண்ணம் அல்லது பசி ஆகியவை நிறுத்தப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், mTORC1 நொதி கட்டுப்பாட்டை மேற்கொள்ளும்போது உடலில் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிற உடல் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாகவும் கூறியுள்ளார். நீண்டகால அடிப்படையில் மருந்து எடுத்துக்கொள்பவர்கள் கல்லீரல் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்ட பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ரான் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒரே ஒரு மருந்தாக ராபமைசின் (rapamycin) அல்லது ராபாலிங்க் -1 (RapaLink-1) கொடுக்கும்போது எலிகளில் இந்தப் பிரச்சனையைக் காண முடிந்ததாக கூறியுள்ள அவர், அவற்றுடன் பாபாப்லாக் கொடுக்கும்போது பக்கவிளைவுகள் இல்லை எனவும் கூறியுள்ளார். இதனால், ஆல்கஹால் பயன்பாட்டுக்கோளாறுக்கு இரட்டை மருந்து சிகிச்சை மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் என உறுதியுடன் ரான் தெரிவித்துள்ளார். ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறை நரம்பியல் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.