ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்கால பிரச்னைகளை தவிர்க்க உதவும் டிரை ஃப்ரூட்ஸ்..!

குளிர்கால பிரச்னைகளை தவிர்க்க உதவும் டிரை ஃப்ரூட்ஸ்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அதிக சத்துகளைத் தரவல்ல உலர் பழங்களை (Dry fruits) வேலைக்கு செல்வோர் ஒரு சிறிய பாக்ஸில் எடுத்துச்சென்று அலுவலக நேரத்தில் சாப்பிடலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களைப் போலவே, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும் ட்ரை ஃப்ரூட்களை (Dry fruits) எடுத்துக்கொள்ளலாம். மேலும் இவை குளிர் காலத்தில் உங்கள் உடலை வெது வெதுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் அனைத்தையும் செய்கிறது. ஒவ்வொரு வேளைக்கும் ஒரு வகை என தினமும் ட்ரை ஃப்ரூட்ஸை (Dry fruits) இந்த குளிர்காலத்தில் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

இது போன்ற உலர் பழங்களை சாப்பிட்டுவந்தால், பல நோய்களின் வரவைக் கட்டுப்படுத்தி உங்களால் ஆரோக்கியத்துடன் வாழமுடியும். ட்ரை ஃப்ரூட்ஸை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். அல்லது காலை உணவு, அலுவலக இடைவேளை நேரங்கள், மாலை 5-6 மணிக்குள் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். உலர்ந்த பழங்கள், எண்ணெயில் வறுத்த உணவுகளுக்கு ஆரோக்கியமான மாற்றாகும்.

Read More : குளிர்காலத்தில் நன்மைத்தரும் நெய்..! 5 விதமான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு..

அவை உங்களுக்கு மனநிறைவின் உணர்வைத் தருகின்றன, மேலும் அவை சிறந்த சிற்றுண்டி உணவாகும். இந்த ட்ரை ஃப்ரூட்ஸ்களில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் (nutrients, vitamins, proteins, and healthy fats) நிரம்பியுள்ளன, அவை குளிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

எனவே, குளிர்காலத்தில் நீங்கள் அவசியம் சாப்பிடக்கூடிய சிறந்த உலர் பழங்களை இங்கே உங்களுக்காக தொகுத்துளோம்..

அத்தித்பழம் (Figs) :  அத்திப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் C, வைட்டமின் D, அயர்ன் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதயப் பிரச்னை உள்ளவர்களின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்ட அத்தி பழம் , இரத்தச் சோகை உள்ளவர்களுக்கும் நல்ல பலன் கொடுக்கும். இவை அனைத்தும் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இவை குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் ஆகும்.
பிஸ்தா (Pistachios): பிஸ்தா (Pistachios) உங்கள் உணவு அட்டவணையில் இருப்பது அவசியம். பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் பாஸ்பரஸ் சத்து அதிகம் கிடைத்து, உடலை ஆரோக்கியமாகச் செயல்பட வைக்கும். உடல் மினுமினுப்பாகவும், கூந்தல் வலிமையுடனும் இருக்கும். அதிக கொழுப்புச் சத்துள்ள பிஸ்தா பருப்பு, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ்.
பாதாம் (Almonds): பாதாம் உலர்ந்த பழங்களின் ராஜா (King of Dry Fruits) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள், புரதம், நார்ச்சத்து, துத்தநாகம், வைட்டமின் E (Fatty acids, Protein, Fiber, Zinc, Vitamin E) போன்றவற்றவை உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது. அவை இரத்த ஓட்டம் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகின்றன மற்றும் நம் உடலில் கொழுப்பின் அளவைக் (regulate cholesterol levels) கட்டுப்படுத்துகின்றன.
அதிக சத்துகளைத் தரவல்ல உலர் பழங்களை (Dry fruits) வேலைக்கு செல்வோர் ஒரு சிறிய பாக்ஸில் எடுத்துச்சென்று அலுவலக நேரத்தில் சாப்பிடலாம்.உலர் பழங்களை (Dry fruits) உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு குளிர்காலத்தை இதமாக கழித்திடுங்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Dry Fruits, Health, Healthy Lifestyle, Winter