ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் கண் இமைகளை சுற்றி அரிப்பு , எரிச்சல் இருக்கிறதா..? இந்த பிரச்சனைதான் காரணம்..!

உங்கள் கண் இமைகளை சுற்றி அரிப்பு , எரிச்சல் இருக்கிறதா..? இந்த பிரச்சனைதான் காரணம்..!

உங்கள் கண் இமைகளை சுற்றி அரிப்பு , எரிச்சல்

உங்கள் கண் இமைகளை சுற்றி அரிப்பு , எரிச்சல்

நீண்ட நேரம் இடைவேளையின்றி கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் வேலை செய்பவர்களும், ஏர் கண்டிஷனரில் நேரத்தை செலவிடுபவர்களும், வெப்பமான சூழலில் இருப்பவர்களுக்கும் ட்ரை ஐ சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது அன்றாட வாழ்வின் ஒரு பொதுவான கடமையாக இருந்தது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கோவிட் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளதால், மீண்டும் மாஸ்க் அணிவது நல்லது என்கிற நிலை உருவாகியுள்ளது.

தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, மாஸ்க்குகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் பல் பிரச்சனைகள் குறித்து மக்கள் புகார் கூறி வருகின்றனர். இதற்கிடையில் ஒரு புதிய ஆய்வு, மாஸ்க் அணிவதால் 'ட்ரை ஐ சிண்ட்ரோம்' (dry eye syndrome) என்கிற அபாயம் ஏற்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

'ட்ரை ஐ சிண்ட்ரோம்' என்றால் என்ன?

ட்ரை ஐ சிண்ட்ரோம் என்பது உங்கள் கண்ணீரால் உங்கள் கண்களுக்கு போதுமான லூப்ரிகேஷனை வழங்க முடியாத ஒரு நிலையாகும், இதனால் நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். உங்கள் கண்கள் போதுமான கண்ணீரை உற்பத்தி செய்யாத போது அல்லது கண்களை லூப்ரிகேட் செய்ய முடியாத அளவிலான தரம் குறைந்த கண்ணீரை உற்பத்தி செய்யும் போது இது நிகழலாம். இப்படியான "நீண்ட கால வறட்சி" ஆனது கண் வீக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் கண்ணின் மேற்பரப்பை சேதப்படுத்தும்.

பல காரணங்களின் கீழ் இது நடக்கலாம் என்றாலும் கூட, தற்போது நாம் அதிகப்படியாக மாஸ்க் அணிவதால் இது அதிகரித்து வருகிறது. சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மாஸ்க் அணிவது ட்ரை ஐ சிண்ட்ரோம் அபாயத்துடன் தொடர்புடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ட்ரை ஐ சிண்ட்ரோமின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

* கண்களில் அரிப்பு, எரிச்சல் அல்லது கீறல் போன்ற உணர்வு

* கண்கள் 'லைட் சென்சிடிவ்' ஆக இருப்பது

* கண் சிவந்து போகுதல்

* கண்களில் ஏதோ இருப்பது போன்ற உணர்வு

* கண்களில் இருந்து தொடர்ச்சியாக கண்ணீர் வந்து கொண்டே இருத்தல்

* மங்கலான பார்வை அல்லது கண் சோர்வு

* கண் இமை வீக்கம்

இதய பாதிப்பை உணர்த்தும் இந்த அறிகுறிகளை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்..!

யாருக்கெல்லாம் அதிக ஆபத்து?

நீண்ட காலமாக மாஸ்க் அணியும் அனைவருக்கும் இந்த நிலை உருவாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக கண் கண்ணாடி மற்றும் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிபவர்களிடையே இது ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். தவிர, நீண்ட நேரம் இடைவேளையின்றி கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் வேலை செய்பவர்களும், ஏர் கண்டிஷனரில் நேரத்தை செலவிடுபவர்களும், வெப்பமான சூழலில் இருப்பவர்களுக்கும் ட்ரை ஐ சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதற்கு ஏதேனும் சிகிச்சை உள்ளதா?

சிகிச்சையளிக்கப்படாவிட்டால், ட்ரை ஐ சிண்ட்ரோம் ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறும் மற்றும் கண்களை கடுமையாக சேதப்படுத்தும். இருந்தாலும் மேற்கண்ட அறிகுறிகளை நீங்கள் சந்திக்கும் பட்சத்தில், பெரிய அளவில் அச்சம் கொள்ள வேண்டாம். ட்ரை ஐ சிண்ட்ரோமில் இருந்து தப்பிக்க அல்லது நிவாரணம் பெறுவதற்காக நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் இதோ:

* புகை, நேரடியான காற்றோட்டம் மற்றும் காற்று ஆகியவற்றை தவிர்க்கவும்

* தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்

* ஹுமிடிஃபையர்-ஐ (Humidifier) பயன்படுத்தலாம்.

* கண்களில் 'வார்ம்' ஆன கம்ப்ரெஸ்-களை பயன்படுத்துங்கள்

* ஸ்க்ரீன்களிடம் இருந்து அவ்வப்போது ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்

* உங்கள் மடிக்கணினியை கண் மட்டத்திற்கு கீழே வைக்கவும்

* தவறாமல் ஆர்டிஃபிஷியல் டியர்-ஐ (Artificial tear) பயன்படுத்தவும்

Published by:Sivaranjani E
First published:

Tags: Corona Mask, Eye Problems