ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் வறண்டு போகும் கண்களால் எரிச்சல் , அரிப்பு... இதை சமாளிக்க டிப்ஸ்..!

குளிர்காலத்தில் வறண்டு போகும் கண்களால் எரிச்சல் , அரிப்பு... இதை சமாளிக்க டிப்ஸ்..!

வறண்ட கண்

வறண்ட கண்

நம் தோல் மற்றும் பிற உடல் உறுப்புகளை போலவே நம் கண்களையும் குளிர்காலம் பாதிக்கிறது.  சிலருக்கு அடிக்கடி கண்கள் வறண்டு போகும் சிக்கல் இருக்கும். ஆனால் எப்போதும் கண்கள் இயல்பாக இருப்போருக்கு கூட குளிர்காலத்தில் கண்கள் வறண்டு போகும் நிலை ஏற்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் தோல் மற்றும் பிற உடல் உறுப்புகளை போலவே நம் கண்களையும் குளிர்காலம் பாதிக்கிறது. சிலருக்கு அடிக்கடி கண்கள் வறண்டு போகும் சிக்கல் இருக்கும். ஆனால் எப்போதும் கண்கள் இயல்பாக இருப்போருக்கு கூட குளிர்காலத்தில் கண்கள் வறண்டு போகும் நிலை ஏற்படுகிறது.

பொதுவாக Dry eye எனப்படும் வறண்ட கண்கள் ஏற்பட காரணம், நம் கண்களுக்குள் இருக்கும் கண்ணீரால் போதுமான ஈரப்பதம் கிடைக்காமல் போவதே. போதுமான கண்ணீரை உற்பத்தி செய்ய முடியாத நிலையில் கண்களுக்கு போதுமான லூப்ரிகேஷன் கிடைக்காமல் போவதால் கண்கள் வறட்சியடைகின்றன.

குளிர்காலத்தில் உங்களுக்கும் கண்கள் வறண்டு போகும் பிரச்சனை இருக்கிறதா.! கவலை வேண்டாம்.. இது பலருக்கும் இருக்க கூடிய பொதுவான பிரச்சனை தான். குளிர்காலத்தில் கண்கள் அடிக்கடி வறண்டு போவதற்கான காரணங்கள், அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை பற்றி இங்கே பார்க்கலாம்.

காரணங்கள்:

ஆரோக்கியமான கண்களை கொண்ட ஒருவருக்கு திடீரென குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட கண்களுக்கு அந்த சீசனில் காணப்படும் குறைந்த ஈரப்பதம், குளிரான வெப்பநிலை மற்றும் குளிர்ந்த காற்று காரணமாக இருக்கின்றன. முகத்தில் வீசும் குளிர் காற்று காரணமாக ஒருவரின் கண்கள் வறண்டு போவது ஒருபக்கம் இருந்தாலும், இன்டோர் ஹீட்டிங்கும் இதற்கு ஒரு காரணம். குளிரை சமாளிக்க மக்கள் ஹீட்டரை அதிகம் பயன்படுத்தும் போது கூட இந்த சிக்கல் ஏற்படுகிறது. குளிர்கால சூழ்நிலையால் கண்கள் போதுமான கண்ணீரை உற்பத்தி செய்ய முடியாத போது அல்லது தரம் குறைந்த கண்ணீரை உற்பத்தி செய்யும் போது கண் வறட்சி ஏற்படுகிறது.

Also Read : இந்த 4 வகையான கண் பார்வை பிரச்னைகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் தீவிரமடைகிறது என்று அர்த்தம்..!

கண்கள் வறண்டிருப்பதற்கான அறிகுறிகள்:

கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்ணுக்குள் அரிக்கும் உணர்வு, மங்கலான பார்வை, ஒளியை பார்த்தால் கண்கள் சென்சிட்டிவாக உணர்வது, கண்கள் வீக்கம் உள்ளிட்டவை கண்கள் வறண்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். மேலும் கண்கள் அயர்ச்சியாகவும், கண்களை மூடி திறந்தால் பாரமாக இருப்பது ஒன்றை உணர்வு ஏற்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

- குளிர்காலத்தில் ஹேர் ட்ரையர்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவும். ட்ரையரிலிருந்து வெளிவரும் சூடான காற்று முகத்தில் மற்றும் கண்களில் நேரடியாக படுவதை தவிர்த்து தலைமுடியில் மட்டும் படுமாறு பயன்படுத்த வேண்டும்.

- குளிர்காலத்தில் டயட்டில் ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட்ஸ் அடங்கிய உணவுகளை அதிகம் சேர்ப்பது வறண்ட கண் அறிகுறிகளை குறைக்க உதவும்.

- கண்களுக்குள் உற்பத்தியாகும் கண்ணீர் மூலம் கண்கள் தொடர்ந்து உயவூட்டப்படுகிறது என்பதை உறுதி செய்ய அடிக்கடி கண் சிமிட்டு கொண்டே இருக்க வேண்டும்.

- உடலையும் கண்களும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க நாளொன்றுக்கு 3 - 4 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவும்.

- ஹீட்டர்களை அடிக்கடி பயன்படுத்துவதால் கண்கள் வறண்டு போக கூடும். எனவே அவற்றை லிமிட்டாக பயன்படுத்தவும்.

Also Read : கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதையெல்லாம் சொன்னா நம்பாதீங்க : கட்டுக்கதைகளும்... உண்மைகள்

சிகிச்சை என்ன.!

குளிர்காலத்தில் கண்கள் வறண்டு போவதை தடுக்க மற்றும் நிர்வகிக்க பல வழிகள் உள்ளன. ஐ ட்ராப்ஸ், ஆர்டிஃபிஷியல் டியர்ஸ், ஐ ஆயின்மென்ட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி கண்களை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருக்கலாம். வறட்சியின் காரணமாக கண்ணில் கடுமையான அசௌகரியம் அல்லது எரிச்சல் ஏற்பட்டால் வார்ம் கம்ப்ரஸை (துணியை வாயால் ஊதி அந்த சூட்டை கண்ணின் மேல்) வைக்கலாம்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Eye care, Eye Problems, Eyes