ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது பற்றி சமீப காலமாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது தான். ஆனால் சர்க்கரை அளவு குறைவது என்பது கூட ஆபத்தான ஒரு நிலைதான் என்பதை பற்றி பலரும் மறந்துவிடுகிறோம். நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு குறையும் என்பது பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலை பற்றியும் மருத்துவர்கள் ஏன் கூறுவதில்லை?
குருகிராமில் இருக்கும் ஆர்டிமிஸ் மருத்துவமனையின் எண்டோகிரைனாலஜி துறை தலைவரான மருத்துவர் தீரஜ் கபூர் இதைப் பற்றி கூறுகையில் “ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது இதய நோய்கள், பக்க வாதம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கண்கள் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பதால் அதைப் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. சர்க்கரை நோய் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுத்தும் அபாயம் இருந்தாலும் மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
இது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் இதை பற்றி அதிகமாக பேசுகிறோம். அதேபோல, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதும் மிகமிக ஆபத்தானது. அதிகமாக இருப்பதை பற்றி பரவலாக பேசப்படுவதால் சர்க்கரை குறைவாக இருப்பது சிறந்தது என்று பலரும் நினைக்கிறார்கள். இரண்டுமே ஆபத்தானது தான்’ என்று தெரிவித்துள்ளார்.
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலுமே, அது உடல்நலத்திற்கு பெரிய ஆபத்தை உடனடியாக ஏற்படுத்தாது. ஆனால் ஹைப்போகிளைகேமியா என்று கூறப்படும் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் பொழுது அவர்கள் உடனடியாக மயங்குவதற்கும், நினைவு தப்புவதற்கும், அதனால் ஏற்படக்கூடிய தீவிரமான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். எனவே சர்க்கரை அளவு குறைவதால் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றியும் அனைவரும் புரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தால் ஏற்படும் அறிகுறிகள் :
* வெளிறி போன தோற்றம்
* கை, கால், உடல் நடுக்கம்
* தலை சுற்றல், மயக்கம்
* வியர்வை
* சீரற்ற இதயத்துடிப்பு
* பசி
* கவனம் செலுத்த முடியாமை
* தீவிரமான சோர்வு
* எரிச்சலான உணர்வு
* படபடப்பு, பதற்றம்
* குழப்பமான மனநிலை, கோ-ஆர்டினேஷன் இல்லாமை
* பேச முடியாமல் தடுமாற்றம்
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது சர்க்கரை அளவு குறைந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் சர்க்கரை அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏதேனும் ஒருவேளை அவர்கள் உணவு சாப்பிடாமல் விட்டால் அல்லது தாமதமாக சாப்பிட்டால் உடனடியாக அவர்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். எனவே சர்க்கரை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு ஹைபோகிளைகீமியா ஏற்படக்கூடிய சாத்தியமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்ன..? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்..?
உதாரணமாக மதியம் 12:00 மணிக்கு உங்கள் உடலில் சர்க்கரை அளவு குறைந்துவிட்டது. ஆனால் நீங்கள் பொதுவாக மதியம் 1:30 மணிக்குத்தான் உணவு சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தால் என்ன செய்யலாம்? சர்க்கரை அளவு குறைந்த உடனேயே அல்லது அதற்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே நீங்கள் ஏதாவது சாப்பிட்டுவிட வேண்டும். உணவு தாமதமாக எடுத்துக் கொள்ளாமல், சீக்கிரமாக சாப்பிட வேண்டும் அல்லது பிஸ்கட் வாழைப்பழம், தேநீர், என்று ஏதாவது உடனடியாக சாப்பிடுவது முக்கியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetes, Type 2 Diabetes