உடல் எடையை குறைக்க இதை மட்டும் பண்ணா போதுமாம்..

காட்சி படம்

தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைப்பதற்கு எவ்வாறு உதவுகிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

 • Share this:
  உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் அளவான உடல் அமைப்பைப் பராமரித்து வந்தாலே நம்மை நோய்கள் அண்டாது என்று கூறுகின்றனர். எனவே அதற்காக அதிகம் மெனக்கெடாமல் சிம்பிளான இந்த விஷயத்தை தொடர்ந்து பின்பற்றினாலே போதும். அதாவது, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தாலே போதுமானது. ஏனெனில் உடல் நீரேற்றத்துடன் இருப்பது நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் அதனால் இன்னும் பிற நன்மைகளையும் பெறலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.

  குடிநீர் எவ்வாறு உடல் எடையை குறைக்கும் : பல ஆராய்ச்சிகள் குடிநீருக்கு பல நன்மைகள் இருப்பதாகவும், அவற்றில் எடை இழப்பு முக்கியமானது என்றும் குறிப்பிடுகின்றன. ஒபெசிட்டி இதழில் 2011ல் வெளியான ஒரு ஆய்வில், ஒரு ஹைபோகலோரிக் டயட்டின் போது குடிநீர் வயதானவர்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமனைக் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக உடல் எடையைக் குறைப்பது கடினம் என்றாலும் இந்த முறை பாசிட்டிவான ரிசல்ட்டுகளை தருகின்றது.

  2017ம் ஆண்டில் இன்டர்நேஷனல் ஒபெசிட்டி இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், 12 மாத எடை பராமரிப்பு காலத்திற்கு டயட் ட்ரிங்ஸ் மற்றும் பீவரேஜ்களை சாதாரண நீருக்கு மாற்றிய பங்கேற்பாளர்கள் உடல் எடையை குறைத்தது மட்டுமல்லாமல், இன்சுலின் சென்சிட்டிவிட்டி மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் மேம்படுத்தியிருப்பதைக் குறிக்கிறது. உடல் எடையை குறைக்க குடிநீர் நிச்சயம் உதவும்.


  Published by:Tamilmalar Natarajan
  First published: