ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

என் கணவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்... இதனால் கரு தங்குவது தள்ளி போகுமா..?

என் கணவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்... இதனால் கரு தங்குவது தள்ளி போகுமா..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 55 : குழந்தை பெறுவதை பொருத்தவரை மது ஒருவருடைய ஆண்மை தன்மையை குறைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகளின் படி நீண்ட நாள் மது அருந்துபவர்களுக்கு ,தாம்பத்தியத்தில் ஈடுபடுவது கூட சாத்தியமில்லாமல் போய்விடும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மிகவும் புத்திசாலியான, தெளிவான பெண் நித்யா.

ஒரு அரசு அதிகாரி. திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. அவருடைய கணவர் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிகிறார். ஒரு வருடமாக குழந்தைக்காக முயற்சி செய்தும் நித்யா கருத்தரிக்கவில்லை. ஆலோசனைக்காக வந்திருந்தார்.

பொதுவான கேள்விகளுடன் ஆலோசனை தொடங்கியது . இருவருக்குமே மருத்துவ சிக்கல்கள் எதுவும் இதுவரை இல்லை . . அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

நான் நித்தியாவிடம் அடிப்படை பரிசோதனைகளை எடுத்து பார்ப்போம். இருவருக்கும் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா ? என்று தெரிந்துவிடும். பிறகு அதற்கு ஏற்றார் போல சிகிச்சை தொடங்கலாம் என்று கூறினேன்.

அப்போது நித்யா ,

"கணவர் சுரேஷ் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால், அவருக்கு நிறைய நண்பர்கள் உண்டு ,

அவர் நண்பர்களுடன் வெளியே செல்லும்போது மது அருந்தி வருவதை பார்த்திருக்கிறேன்.

டெஸ்ட் செய்தால் ஏதேனும் பிரச்சினை இருந்தால் வெளிப்பட்டு விடுமோ? என்ற பயம் இருப்பதாகவும் அதனால் செய்துகொள்ள மாட்டார்" என்றும் கூறினார்.

டாக்டர்!!  மது அருந்துவதால் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படுமா? ,

எப்படி இவருக்கு புரிய வைப்பது? அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தாலும் டெஸ்ட் எடுத்து கண்டுபிடித்தால் தானே அதற்குரிய சிகிச்சையை தர முடியும்" என்று கூறினார்.

. நீங்கள் சொல்வது சரிதான் நித்யா முதலில் உங்களுக்கு பரிசோதனைகளை செய்வோம் . அடுத்த முறை வரும்பொழுது உங்கள் கணவரையும் கூட்டி வாருங்கள், அவரிடமும் பேசுவோம்" என்று கூறினேன்.

Also Read : இறுக்கமான ஆடைகள் கர்ப்பம் தரித்தலை பாதிக்குமா..? ஜீன்ஸ் பேண்ட் அணிவது கர்ப்பப்பைக்கு ஆபத்தா..?

அதுபோலவே நித்யாவிற்கு அடிப்படை ரத்த பரிசோதனைகளை செய்தோம் ஸ்கேனும் செய்தோம். எல்லாமே நார்மல் ஆக இருந்தது .நித்தியாவிற்கு நிம்மதியாக இருந்தது. சொல்லியபடியே அவருடைய கணவரை அடுத்த முறை கூட்டி வந்திருந்தார். நான் தான் தொடங்கினேன்.

"சுரேஷ்!! குழந்தை வேண்டுமென்ற சிகிச்சையை பொறுத்தவரை இருவருக்கும் பரிசோதனைகள் , சிகிச்சை செய்து கொள்வது, மிக மிக முக்கியம். அதனால் தயங்காமல் நீங்களும் எல்லா பரிசோதனைகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும்" என்று கூறினேன்.

நேரடியாகவே சுரேஷ் விஷயத்திற்கு வந்தார். டாக்டர்!!! நான் அவ்வப்போது ஆல்கஹால் எடுத்துக் கொள்வதால் எனக்கு ரத்தத்தில் ஏதாவது இருக்கலாம் அதுபோலவே என்னுடைய விந்தணுக்களிலும் குறைபாடு இருக்கலாம், என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் டெஸ்ட் செய்ய துணிவில்லை " என்று கூறினார்.

இப்பொழுது நித்யா , " டாக்டர்!!! நான் சொன்னது சரிதானே என்று கூற, கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சிறிது கோபத்தோடு பார்த்துக் கொண்டனர். ஒரு நிமிட மவுனத்திற்கு பிறகு நானே மீண்டும் துவங்கினேன்.

பொதுவாக ஆல்கஹால் உடலுக்கு கெடுதல். அது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. அவரவருடைய உடல் நிலைமையை பொறுத்து எந்த அளவுக்கு அது தீவிரமாக பாதிக்கிறது? எவ்வளவு நாட்களில் பாதிக்கிறது? என்பது மாறுபடும்.

சோசியல் டிரிங்கர் என்று சொல்லப்படும் மது அருந்துவதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஒன்றும் நேராது .ஆனால் எப்பொழுது மதுவுக்கு அடிமை ஆகிறார்களோ , அப்பொழுது உடலுள்ள எல்லா உறுப்புகளையும் மது பாதிக்க தொடங்கும்.

Also Read : கர்ப்பப்பை உன்னுடையது.. குழந்தை என்னுடையது... வாடகை தாய் முறை எல்லோருக்கும் சாத்தியமா..?

மதுவால் மனிதனுக்கு மூளையிலிருந்து நரம்பு, எலும்பு, குடல் கல்லீரல் வரை எல்லா இடங்களிலும் பாதிப்புகள் உண்டாகும். குறிப்பாக ஜீரண பாதையை பாதிப்பதால் குடல் வீங்கி புண்ணாகவே இருக்கும். கல்லீரல் ஆல்கஹாலை செரித்து வெளியேற்ற வேண்டியிருப்பதால் சிறிது சிறிதாக கல்லீரலில் ஆல்கஹால் சேர்ந்து கல்லீரல் தன்னுடைய வேலை செய்யும் செல்களை இழந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டு இறப்பு வரை கொண்டு செல்லும். ஏற்கனவே சுகர் சர்க்கரை ரத்த கொதிப்பு போன்றவை இருப்பின் அவை அனைத்தும் மது அருந்துபவர்களுக்கு அதிகமாகும், தீவிரமாகும், கட்டுப்பாட்டில் இருந்து விலகும்.

குழந்தை பெறுவதை பொருத்தவரை மது ஒருவருடைய ஆண்மை தன்மையை குறைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகளின் படி நீண்ட நாள் மது அருந்துபவர்களுக்கு ,தாம்பத்தியத்தில் ஈடுபடுவது கூட சாத்தியமில்லாமல் போய்விடும்.

மது அருந்தும் ஆண்களுடைய விந்து எண்ணிக்கை ,அதன் நகர்வு, அமைப்பு, கருத்தரிக்கக் கூடிய உயிர்ப்பு தன்மை அனைத்துமே பாதிக்கப்படுகிறது.

இவை எல்லாம் மருத்துவ அறிவியல் உண்மைகள் .

"முதலில் ரத்த பரிசோதனைகளை செய்வோம். அது போலவே விந்தணுக்கள் பரிசோதனையும் செய்வோம். ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் மது அருந்துவதை நிறுத்திவிட்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது கட்டாயம் இயல்பான நிலைக்கு நார்மலுக்கு அதை கொண்டு வர முடியும். டெஸ்ட் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது சரி அல்ல !!"என்று கூறினேன்.

சுரேஷும் நான் சொன்னதை ஒப்புக்கொண்டு பரிசோதனைகளுக்கு தயாரானார். முடிவுகளில் "பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. உயிரணுக்களும் இயல்புக்கு சிறிதளவே குறைவாக இருந்தன. பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. அதனால் மூன்று மாதங்கள் மது அருந்துவதை நிறுத்திவிட்டு கல்லீரல் மருந்துகளும் உயிரணுக்களின் உயிர்ப்புக்கான மருந்துகளும் எடுத்துக் கொள்ளும் படி கூறினேன்.

ஒரு மாதம் கழித்து நித்தியா " ஒரு மாதமாக மருந்துகளை கணவர் சரியாக எடுத்துக் கொள்வதாகவும் மதுவை அறவே நிறுத்தி விட்டதாகவும் மகிழ்ச்சியுடன் செய்தி அனுப்பி இருந்தார். அவர்கள் குழந்தையும் விரைவில் கருவாகும் , மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை .

Published by:Sivaranjani E
First published:

Tags: Alcohol consumption, Male infertility, பெண்குயின் கார்னர்