• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடல் எடையை குறைக்க டிரை பண்றீங்களா? உடற்பயிற்சிக்கு முன் காஃபி குடிங்க

உடல் எடையை குறைக்க டிரை பண்றீங்களா? உடற்பயிற்சிக்கு முன் காஃபி குடிங்க

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆய்வின் முடிவில் தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்தபோது காஃபின் ஊக்கி, உடலில் கொழுப்பு எரிப்பதை அதிகரித்திருப்பதை கண்டுபிடித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக ஸ்டிராங் காஃபி குடித்தால், உடலில் உள்ள கொழுப்பு வேகமாக குறைவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உடல் பருமன் தற்போது வளர்ந்து வரும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக உள்ளது. அழகியல் சார்ந்து மட்டுமல்லாது ஆரோக்கியத்துக்கும் சிக்கலாக உடல் பருமன் இருந்து வருகிறது. உடற்பயிற்சியின்மை, கட்டுப்பாடற்ற உணவு உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும்போது மட்டுமே பலரும் உடல் பருமன் குறித்து கவலை கொள்கின்றனர்.

மேலும் உடல் எடையை இயற்கையாக குறைக்க முயற்சிக்காமல் பல்வேறு குறுக்கு வழிகளையும் பின்பற்றி மேலும் பல உபாதைகளை தேடிக்கொள்கின்றனர். வேகமாக உடலை குறைக்க நினைப்பவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவு ஒன்று நல்ல செய்தியைக் கொடுத்துள்ளது. அதாவது, உடற்பயிற்சியை தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு காஃபி குடித்தால் உடல் எடையை குறைக்கும் முயற்சி விரைவாகும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். காஃபியில் இருக்கும் காஃபின் ஊக்கி உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை வேகமாக கரைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சொசைட்டி ஆப் ஸ்போர்ட்ஸ் நியூட்டிரிஷன் (Society of Sports Nutrition)-ல் வெளியாகியுள்ள ஆய்வை ஸ்பெயினில் உள்ள கிரானாடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர் பிரான்சிஸ்கோ ஜோஸ் அமரோ-கஹேட் (Francisco Jose Amaro-Gahete) தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு காஃபியை எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். ஏரோபிக் என்றால் ஆக்சிஜன் என்று பொருள். அதாவது காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்து உடற்பயிற்சி மூலம் தசைகளுக்கு செலுத்தி கொழுப்பை குறைப்பதை ஏரோபிக் உடற்பயிற்சி என கூறுவார்கள்.

நடைப்பயிற்சி, படகோட்டுதல் ஆகியவை குறைந்த ஏரோபிக் உடற்பயிற்சிகள் ஆகும். ஓடுதல், குதித்தல் ஆகியவை அதிக ஏரோபிக் உடற்பயிற்சிகள் ஆகும். காஃபின் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் முயற்சியை அதிகரிக்கிறதா என்பதை ஆய்வு செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, சராசரியாக 32 வயதுள்ள ஆண்களின் உணவு முறை, உடற்பயிற்சி மேற்கொள்ளும் முறை மற்றும் அவர்களின் உடலில் தினசரி கரையும் கொழுப்பின் அளவு ஆகியவற்றை கண்காணித்தனர். குறிப்பாக, உடற்பயிற்சி செய்வதற்கு அரைமணி நேரத்துக்கும் முன்பாக காஃபின் எடுத்துக்கொள்ள அவர்கள் பரித்துரைக்கப்பட்டனர். காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைகளிலும் அவர்கள் உடற்பயிற்சி செய்யும் கால அளவு, உணவு முறை உள்ளிட்டவைகளை துல்லியமான தரவுகளை சேகரித்தனர்.

Also read... இயற்கை பொருட்களை பயன்படுத்தி உங்கள் வீட்டிலிருக்கும் கொசுக்களை விரட்ட எளிய வழி.!

ஆய்வின் முடிவில் தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்தபோது காஃபின் ஊக்கி, உடலில் கொழுப்பு எரிப்பதை அதிகரித்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், மதிய நேரங்களில் உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு கொழுப்பு எரிக்கப்படுவதையும் ஆய்வாளர்கள் தரவின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இதனடிப்படையில், உடற்பயிற்சி செய்வதற்கு அரைமணி நேரத்துக்கும் முன்பாக காஃபினை எடுத்துகொண்டால், உடல் குறைப்பில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான பலன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: