ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆபத்து! பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் குடித்தால் கேன்சர் வருமாம்!

ஆபத்து! பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் குடித்தால் கேன்சர் வருமாம்!

காட்சி படம்

காட்சி படம்

கோடை காலத்தில் பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து வைக்கப்படும் தண்ணீர் சூரிய வெப்பத்தால் அதிக தாக்கத்திற்கு ஆளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது, முன்பெல்லாம் ஜில்லென பானைகளில் தண்ணீர் ஊற்றிவைத்து குடிப்போம். ஆனால் தற்போது 20 லிட்டர் பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது பழக்கமாகிவிட்டது. அலுவலகம், வீடுகள் என எங்கு பார்த்தாலும் 20 லிட்டர் கேன்களை பயன்படுத்துவது அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் சமீபத்திய அறிக்கையின்படி, நீங்கள் ராட்சத வாட்டர் கேன்களில் அடைத்து வைத்து தண்ணீரை பருகுவது ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரபல செய்தி நிறுவனத்தின் நாளிதழில் வெளியான செய்தியின் படி, கோடை காலத்தில் பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து வைக்கப்படும் தண்ணீர் சூரிய வெப்பத்தால் அதிக தாக்கத்திற்கு ஆளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் குறித்து ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர்கள், வெப்பமான பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் வாட்டர் கேன்களில் உள்ள தண்ணீரை குடிப்பதை தவிர்ப்பது நல்லது என எச்சரித்துள்ளனர். அதாவது வெப்பம் காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரில் கலக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை பெற ஒரு தண்ணீர் கேன் அல்லது பாட்டிலை வாங்கி குடிப்பதற்கு முன்னால், அது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள இடத்தில் இருந்ததா? என்பதை ஒருமுறைக்கு, இரண்டு முறை பரிசோதித்து கொள்வது நல்லது. பிளாஸ்டிக் பாட்டில்கள், அதில் அடைக்கப்படும் கூல்டிரிங்ஸ் மற்றும் தண்ணீரில் ஒரு சிறிய அளவிலான இரசாயனங்களை வெளியிடுவதாக நேஷனல் ஜியோகிராஃபிக் அறிக்கை கூறுகிறது. வெப்பநிலை மற்றும் நேரம் அதிகரிக்கும் போது, ​​பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயன பிணைப்புகள் உடைந்து, வெளியேறும் என்றும், அவை அதில் அடைக்கப்பட்டுள்ள பானங்கள் அல்லது உணவு பொருட்களில் கலக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

டாக்டர் சந்தீப் குலாட்டி கூறுகையில், “மைக்ரோ-பிளாஸ்டிக் காரணமாக, பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரை தொடர்ந்து உட்கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படலாம்” என்று கூறுகிறார். பிசிஓஎஸ், கருப்பை பிரச்சினைகள், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மைக்கும் உள்ளிட்ட பலவற்றிற்கு வழிவகுக்கும் இது வழிவகுக்கும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

also read : கோடைக்காலத்தில் அடிக்கடி ஒற்றை தலைவலி ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்:

1. டையாக்ஸின் உற்பத்தி: சூரிய வெப்பம் வெளிப்படையாக தாக்கப்படுவதால் உருவாகும் சூடு டையாக்ஸின் என்ற நச்சுப்பொருளை வெளியிடுகிறது, அதை உட்கொள்ளும்போது மார்பக புற்றுநோயை ஏற்படும் அபாயம் உள்ளது.

2. BPA உருவாக்கம்: Biphenyl A என்பது ஈஸ்ட்ரோஜனைப் பிரதிபலிக்கும் ஒரு இரசாயனமாகும், இது நீரிழிவு, உடல் பருமன், கருவுறுதல் பிரச்சினைகள், மற்றும் பெண் குழந்தைகள் விரைவில் பருவமடைதல் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

3.நோயெதிர்ப்பு மண்டலத்தின் தாக்கம்: பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் நமது நோயெதிர்ப்பு மண்டலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள ரசாயனங்கள் உடலுக்குள் செல்லும் போது அவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைக்கிறது.

4. கல்லீரல் புற்றுநோய் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல்: பிளாஸ்டிக்கில் பித்தலேட்ஸ் என்ற வேதிப்பொருள் இருப்பதால், பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பதால் கல்லீரல் புற்றுநோய் மற்றும் விந்தணு எண்ணிக்கை குறையும் ஆபத்து உள்ளது.

ஃப்ரெடோனியாவில் உள்ள நியூயார்க் ஸ்டேட் யுனிவர்சிட்டி சமீபத்தில் நடத்திய ஆய்வில், பாட்டில் தண்ணீரில், குறிப்பாக பிரபலமான பிராண்டுகளில் அதிகப்படியான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது. மைக்ரோபிளாஸ்டிக் என்பது 5 மில்லி மீட்டர் அல்லது அதற்கும் குறைவான சிறிய பிளாஸ்டிக் குப்பைத் துண்டுகளை குறிக்கிறது. 93 சதவீதத்திற்கும் அதிகமான பாட்டில் தண்ணீரில் மைக்ரோபிளாஸ்டிக் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என உலக சுகாதார மையம் தெரிவித்தாலும், இது ஆபத்தானது என்பதை ஆராய்ச்சியாளர்களை கவலையடைய வைத்துள்ளது.

also read : சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

பாட்டிலில் தண்ணீர் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை:

* தண்ணீர் கேன்களை அதிக நேரம் வெயிலில் வைத்திருந்தால் அதை வாங்க கூடாது

* தண்ணீர் நிழலின் கீழ் இருப்பதையும், 25 டிகிரி வெப்பநிலை இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* கண்ணாடி, செம்பு, சில்வர் போன்ற வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் எடுத்துச் செல்லலாம்.

* பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்காதீர்கள்.

First published:

Tags: Drinking water