Home /News /lifestyle /

கருவுறாமல் தடுக்க Copper-T பயன்படுத்தும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன?

கருவுறாமல் தடுக்க Copper-T பயன்படுத்தும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன?

Youtube Video

Dr.Jayasree Sharma | கருவுறாமல் தடுக்க Copper-T பயன்படுத்தும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவை பற்றி டாகடர் ஜெயஸ்ரீ சர்மா விளக்குகிறார்.

ஓரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் Copper T-யை பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே இந்த காப்பர் டி பயன்படுகிறது. பெண்கள் கருவுறாமல் தடுக்க கருதடை வளையமான இந்த Copper-T பயன்பாடு என்பது சிறந்தது என்று மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா விளக்கியுள்ளார்.

மேலும் இது குறித்து மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா கூறியதாவது,” பொதுவாக இந்த காப்பர்  டி குறித்து ஒரு தவறுதலான புரிதல்தான் பெண்கள் அனைவருக்குமே உள்ளது. ஆனால் இதுதான் கருதடைக்கு ரொம்ப ரொம்ப நல்லது. சிறந்ததும் கூட. குடும்பக்கட்டுபாடு செய்ய விரும்பும் பெண்கள் முதலில் இந்த காப்பர் டி-யை தேர்வு செய்வது நல்லது. இந்த காப்பர் டி என்பது T வடிவமைப்பில் இருக்கும்” என்றார்.

மேலும் இதனை மருத்துவர்கள் எப்படி கர்பப்பையில் பொருத்துவார்கள் என்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் ஒரு கர்பப்பை மாடலை வைத்து விளக்குகிறார்.



காப்பர் டி-யின்  அமைப்பு

இந்த காப்பர் டி செம்பால் ஆனது. இதன் கீழ்ப்புறத்தில் நூல் மாதிரி அமைப்பு காணப்படும். இந்த நூல் போன்ற அமைப்பானது இந்த காப்பர் டி-யை வெளியே எடுக்க உதவுகின்றது. இந்த காப்பர் டி ஆனது பெண்ணின் கர்ப்பப்பையில் மருத்துவர்களால் பொருத்தப்படும். ஆகவே இதுதான் பெண்ணின் கருப்பையில் உள்ள இந்த காப்பர் டி கருத்தரித்தல் ஏற்படாமல் தடை செய்யும்.

ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையைச் சென்று சேராமல் இருப்பதை இது உறுதி செய்கிறது. அதனால் இதன் மூலம் கருத்தரித்தல் ஏற்படாமல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கருவுற்றலை தடுக்க நிறைய மாத்திரைகள் இருந்தாலும் காண்டம் பயன்படுத்தினாலும் இந்த காப்பர் டி தான் சிறந்தது என்றும் கூறுகிறார்.

மேலும் படிக்க... Yoga Day 2021: கருவுறுதலுக்கு உதவும் யோகாவின் நன்மைகள்.! 5 சிறந்த ஆசனங்கள்

மேலும் இந்த காப்பர் டி-யை ஒரு முறை போட்டுக் கொண்டால் மீண்டும் மாற்ற தேவையில்லை. இது 3 வருடம், 5 வருடம் ஏன் 10 வருடத்திற்கு ஒரு முறை மாற்றும் வசதிகள் உள்ளது அதனால் அதுவரைக்கும் உங்களுக்கு எந்தவிதமான பிரச்னைகளும் இருக்காது. ஆனால் மிக முக்கியமானது வருடத்திற்கு ஒருமுறையாவது இந்த காப்பர் டி சரியாக உள்ளதா என்று மருத்துவரிடம் சோதனை செய்துக்கொள்வது என்பது நல்லது.

மேலும் படிக்க... 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன..?

பெண்குயின் கார்னர் - பெண்களுக்கான தளம்
மாதவிடாய், பாலியல், மகப்பேறு, பிரசவம் உட்பட எல்லா வயதினருக்கும், பல்வேறு மருத்துவ சிக்கல்களையும், நோய்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Copper benefits, Copper T, Doctor, Pregnancy, Women Care

அடுத்த செய்தி