டெல்லி, நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகள் இவற்றுக்கு அருகிலுள்ள பகுதிகளில் Smog எனப்படும் காற்று மாசு தீவிரமடைந்து வரும் நிலையில், பாதுகாப்பாக இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. புகையும் பனியும் கலந்து உருவாகும் புகைப்பனி (Smog) என்பது ஒரு வகையான தீவிர காற்று மாசுபாடு ஆகும்.
வாகனப்புகை மற்றும் தொழிற்சாலைப் புகை ஆகியவை வளிமண்டல காற்று மற்றும் சூாிய ஒளியுடன் வினை புாிவதால் புகைப்பனி உருவாகிறது. காற்று மாசுபாட்டை பூமிக்கு மிக அருகிலேயே புகைப்பனி வைத்திருப்பதால் காற்றில் நச்சுத்தன்மை அதிகமாகிறது. இது ஒருவரின்பார்வை திறனை குறைப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியதாக கருதப்படுகிறது. ஒரு நகரம் முழுவதையும் மூடக்கூடிய மாசு கலந்த மற்றும் நச்சு காற்றாகவும் இது இருக்கிறது.
ஆஸ்துமா, சிஓபிடி போன்ற சுவாச நோய்களுக்கு ஏற்கனவே மருந்து எடுத்து கொண்டிருக்கும் எவரும் இதுபோன்ற சூழலில் அதிகம் பாதிக்கப்படலாம். சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனிடையே புகைப்பனியால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவைகளின் பட்டியலை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சமீபத்தில் பகிர்ந்துள்ளது.
செய்ய வேண்டியவை..
* புகைப்பனி சூழ்ந்திருக்கும் நேரத்தில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற அதிக தண்ணீர் குடிக்கலாம்.
* வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பழங்களை தொடர்ந்து உட்கொள்வது ஆரோக்கியத்தை பராமரிக்க பெரிதும் உதவும்.
* துளசி, மணி பிளாண்ட் போன்ற சில காற்றை சுத்திகரிக்கும் தாவரங்களை வீடுகளிலும் அலுவலகங்களிலும் வைத்திருப்பது நல்ல பலனை கொடுக்கும்.
* நாசல் ஃபில்ட்டர்ஸ் அல்லது ஏர் பியூரிஃபையர்களை பயன்படுத்தலாம்.
செய்ய கூடாதவை..
* ஏற்கனவே காற்று மாசு அதிகமாக காணப்படும் புகைப்பனி நேரத்தில் பொதுவெளியில் குப்பைகளை எரிக்க கூடாது. உங்கள் அருகில் வசிக்கும் யாரையும் அவ்வாறு செய்யவும் அனுமதிக்காதீர்கள்
* காற்று மாசு அல்லது புகைப்பனி மிக அதிகமாக காணப்படும் நேரத்தில் வெளியே செல்வதை முற்றிலும் தவிர்த்து கொள்வது நல்லது.
டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவும் (DPCC) AQI அளவு அதிகரித்து வருவதை அடுத்து பின்பற்ற வேண்டிய மற்றும் செய்ய கூடாதவைகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அவை பின்வருமாறு:
* வேலைக்கு செல்ல முடிந்தவரை தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்தாமல் பொதுபோக்குவரத்தை பயன்படுத்தலாம் அல்லது சைக்கிளை பயன்படுத்தலாம்.
குளிர்காலத்தில் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
* திறந்தவெளிகளில் குப்பைகளை கொட்டக்கூடாது. .
* குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் பிற அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களை எரிக்க கூடாது
* மக்கள் தங்கள் வாகனங்களின் என்ஜின்களை சரியாக டியூன் செய்ய வேண்டும்
* டயர்களில் சரியான காற்றழுத்தத்தை பராமரிக்க வேண்டும்,
* சமீபத்திய மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்
* கட்டுமானப் பணிகளை தவிர்த்தல் நலம்
* மாசு அளவுகள் 'மிகவும் மோசமான' பிரிவில் இருக்கும் போது வாகனங்களின் ஏர் ஃபில்ட்டர்களை மாற்ற வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.