உடல் எடையை குறைக்க செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாதவை என்ன ? தெரிந்துக்கொள்ளுங்கள்..

காட்சி படம்

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கீங்களா ? அப்ப கட்டாயம் இதை படிங்க..

 • Share this:
  நீங்கள் ஒரு ஆரோக்கியமான உடல் அமைப்பை பெறுவதற்கும், சில கிலோ எடையை குறைப்பதற்கும் வழிகளைத் தேடுகிறீர்களானால், அதற்கு நீங்கள் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உணவை சாப்பிடுவது அவசியம். உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் ஒத்துழைப்பு இல்லாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியமில்லை.

  நீங்கள் முழுமையாகவும் கடுமையாகவும் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கத்தை பின்பற்றுவது அவசியம். நம் அன்றாட உணவு முறை காரணமாக தான் தற்போது கொலஸ்ட்ரால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படுகிறது. மேலும் இம்மாதிரியான நோய்கள் வர உடல் பருமன் தான் முக்கிய காரணம். அந்த வகையில் உடல் எடையை குறைக்க சில முக்கிய குறிப்புகளை நீங்கள் தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.  அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்: தொடந்து சில நாட்களுக்கு உடற்பயிற்சிகளையும் ஆரோக்கியமான உணவையும் எடுத்துக்கொண்ட பிறகு, மக்கள் அதிகப்படியான மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். ஆனால் சில சமயங்களில் தங்கள் உடலில் எடுக்கக்கூடிய அளவை விட அதிகமாக சாப்பிடுவார்கள். ஆகையால், நீங்கள் ருசியான மற்றும் சாப்பிட தூண்டும் எல்லா உணவையும் குறைக்க விரும்பினால், நீங்கள் கவனமாக சாப்பிடுவதை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் உங்கள் தொண்டையில் கொட்டுவதற்குப் பதிலாக, உங்கள் வாய்க்குள் செல்லும் ஒவ்வொரு கை சாப்பாட்டையும் நீங்கள் அனுபவிக்க வேண்டும். இது உங்கள் ஆசைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் ஆன்மாவை திருப்தியடைய செய்யும்.

  Also Read : வாரத்திற்கு 5 முறை இதை சாப்பிட்டால் ஆயுள் கூடுமாம்.. ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சிக்கோங்க..

  பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டாம்: சர்க்கரை அல்லது மாவு பதப்படுத்தப்படும் போது அல்லது சுத்திகரிக்கப்படும் போது, அவற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களும் நீக்கப்படும். உடலில் உள்ள ஃபைபர் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது; இது உடலில் செரிமானத்தை ஆரோக்கியமான விகிதத்திற்கு குறைக்கிறது. உங்கள் உணவில் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகமாக இருக்கும் போது, அதில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். வெற்று கலோரிகளின் ஆதாரமாக இருப்பதைத் தவிர, சில பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எடுத்துக்காட்டாக, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடலில் மிக விரைவாக எழுகிறது. இதனால் வயதான மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடைய ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் ரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன.  பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிட வேண்டாம்: துரித உணவில் பெரும்பாலும் அதிகப்படியான சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் உப்பு உள்ளது. குறிப்பாக சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், புரதம், நார்ச்சத்து, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பெரும்பாலான துரித உணவுப் பொருட்கள் வழங்கப்படுவது மிகக் குறைவு. எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதுபோன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

  Also read : 7 நாட்களில் தொப்பை கொழுப்பைக் குறைக்கணுமா ? இந்த பானங்களை குடிங்க..

  நீங்கள் விரும்பிய உணவை எப்போதாவது சாப்பிடலாம்: சரியான உடலமைப்பை பெற நீங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் சாப்பிட ஏங்கிக்கொண்டிருந்த உணவை ஒருமுறையாவது சாப்பிடுங்கள். இது நீங்கள் திருப்தி அடைய உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் எடை இழப்பு இலக்குகளை நோக்கி கடினமாக உழைக்கவும் உதவும்.

  குற்ற உணர்ச்சியுடன் சாப்பிட வேண்டாம்: உங்களுக்கு பிடித்த உணவுகளை குற்ற உணர்ச்சியுடன் சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை. சில சமயங்களில் நீங்கள் விரும்பும் அனைத்து உணவுகளையும் சாப்பிடுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பும் உணவுகளை நீங்கள் சாப்பிட்ட பிறகு குற்ற உணர்ச்சியுடன் இருந்தால், நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

  உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிட திட்டத்தை உருவாக்குங்கள்: கொழுப்பு குறைந்த உணவு நிச்சயமாக உங்கள் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்வதற்கான ஒரு வழியாகும். இருப்பினும், நீங்கள் என்ன சாப்பிடப் போகிறீர்கள், எப்போது சாப்பிடப் போகிறீர்கள் என்பதைக் கூறும் ஒரு கடினமான உணவுத் திட்டத்தையும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இது உங்களை கொஞ்சம் கட்டுப்படுத்துவதாகத் தோன்றலாம். ஆனால் உங்கள் உடலை ஒழுங்குபடுத்துவதிலும் பராமரிப்பதிலும் இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை காலப்போக்கில் நீங்கள் உணருவீர்கள்.  காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள்: காய்கறிகள் மற்றும் பழங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. நார்ச்சத்து நிறைந்த இவற்றில் கலோரிகள் மிகவும் குறைவு. பசிக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக, வேகவைத்த காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.

  தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்: தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் நிறைய தண்ணீர் குடிப்பதால், குறைவான அளவே சாப்பிட முடியும். இதனால் உடல் எடை குறையும். மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் நீரேற்றத்துடன் இருக்கும். உடலில் கலோரிகளை குறைக்கவும் நிறைய தண்ணீரைக் குடிக்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: