தொடர்ச்சியான தலைவலியை அலட்சியம் செய்யாதீர்கள் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

தலைவலி | Headache

கால்-கை வலிப்பு அல்லது அடிக்கடி மரத்து போவது தலைவலியோடு தொடர்புடையதாக இருக்கலாம்.

  • Share this:
தலைவலி என்பது நமது உடலில் ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. மன அழுத்தம் மற்றும் சோர்வு மற்றும் அலைச்சல் காரணமாக சாதாரண தலைவலி ஏற்படும். மனதுக்கும், உடலுக்கும் போதுமான ஓய்வு கொடுத்தால் தலைவலி சிறிது நேரத்தில் சரியாகும். இது தவிர கவலை , தூக்கமின்மை, பசி, உடல் நீரிழப்பு, கண் பிரச்சனை, அதிக ஆல்கஹால் போன்றவையும் சில நேரங்களில் தலைவலியை ஏற்படுத்தும்.

பொதுவாக பதற்றம் அல்லது டென்ஷனில் ஏற்படும் தலைவலி என்பது லேசான தலைவலி என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக மோசமான வேலைநாள் அல்லது சண்டைகள் போன்றவை காரணமாக ஏற்படுவது. இதை தீர்க்க மனதை நிதானப்படுத்தி, தேவைப்பட்டால் வலி நிவாரணி மாத்திரை எடுத்து கொண்டு தூங்கி எழுந்தாலே சரியாகிவிடும்.

ஒற்றைத் தலைவலி மற்றும் பிற வாஸ்குலர் தலைவலி பொதுவாக மிகவும் கடுமையான வலி ஏற்படுத்தும் தலைவலியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் குமட்டல் மற்றும் வாந்தியுடன் சேர்ந்து படுத்தி எடுக்கும் இந்த தலைவலி கொண்டவர்கள் ஒளி மற்றும் ஒலியால் தொந்தரவை அனுபவிப்பர். இது பல மணி நேரம் அல்லது பல நாட்கள் இருக்கும். இந்த வகை தலைவலியால் ஏற்படும் தொந்தரவுகளை குறைக்க சந்தைகளில் பல மாத்திரைகள் உள்ளன.



பெரும்பாலான தலைவலி கடும் விளவுகளை ஏற்படுத்தாது என்ற போதும் சில சந்தர்ப்பங்களில் அவை உடலில் இருக்கும் நோய்களுக்கான அறிகுறிகளாக கூட வெளிப்படும். சில நேரங்களில் தொடர்ச்சியான தலைவலி என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக கூறப்படுகிறது. ஏனென்றால் மூளைக் கட்டி, மூளை ரத்த கசிவு அல்லது கடுமையான மூளை தொற்று போன்ற மோசமான காரணங்களால் கூட தொடர் தலைவலி ஏற்படலாம். இந்த பாதிப்புகளுக்கான தொற்று பொதுவாக ஒரு பாக்டீரியாவால் கூட ஏற்படும். சில நேரங்களில் அதிக காய்ச்சலுடன் தலைவலியும் அதிகரிக்கும். நாள்பட்ட மூளை காய்ச்சலானது பல வாரங்கள், மாதங்கள் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் அது கூட சமயங்களில் தொடர் தலைவலியை ஏற்படுத்தலாம்.

மூளை அனீயரிசம் மற்றும் தலைவலி..

மூளையின் ரத்த நாளங்களில் ஏற்படும் பலவீனம் காரணமாக உட்பகுதி வீக்கமடைந்து நாளடைவில் ரத்தகசிவு அல்லது சிதைவு ஏற்படலாம். இதன்போது குறிப்பிட்ட நபருக்கு திடீர் மற்றும் கடும் தலைவலி அடிக்கடி ஏற்படும். இது பெரும்பாலும் கழுத்து விறைப்பு மற்றும் வாந்தியுடன் தொடர்புடையது. ரத்த போக்கு கடுமையாக இருந்தால், நோயாளி சுயநினைவை இழக்க கூடும் அல்லது மரணிக்க கூடும். இந்த பிரச்சனை சிறிதாக இருக்கும் போது எந்த அறிகுறிகளும் தெரியாது. தீவிரமடையும் போது மூளை திசுக்கள் மற்றும் நரம்புகள் மீது அழுத்தத்தை உருவாக்கி, வலி அல்லது நரம்பியல் கோளாறை ஏற்படுத்தும்.

Explainer : குழந்தைகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? மருத்துவர்கள் விளக்கம்!

இந்த சிக்கலுக்கு 2 பொதுவான சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று அறுவை சிகிச்சை மற்றொன்று எண்டோவாஸ்குலர் காயிலிங். அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட ரத்த நாளத்தை கண்டுபிடித்து அதில் ஒரு சிறிய மெட்டல் கிளிப் வைக்கப்படுவதன் மூலம் ரத்த கசிவு நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் நாளங்கள் வழியாக ரத்த ஓட்டம் பராமரிக்கப்படுகிறது.



எண்டோவாஸ்குலர் காயிலிங்கில் இரு ஹாலோ பிளாஸ்டிக் குழாயை ஒரு தமனிக்குள் பொருத்தப்படுகிறது. உட்புறத்திலிருந்து பாதிக்கப்பட்ட ரத்த நாளங்களை முழுவதுமாக பிரிக்க இந்த பிளாஸ்டிக் சுருள்கள் சொருகப்பட்டு ரத்த ஓட்டம் அதில் கட் செய்யப்படுகிறது.

மூளை கட்டி மற்றும் தலைவலி:

மூளையில் உள்ள அசாதாரண உயிரணுக்களின் நிறை அல்லது வளர்ச்சி மூளைக் கட்டி எனப்படுகிறது. இது வீரியமிக்க அல்லது தீங்கற்ற புற்றுநோயாக இருக்கலாம். சில நேரங்களில் உடலின் மற்ற பகுதிக்கு பரவும் புற்றுநோய் மூளைக்கும் பரவும். மூடி இருக்கும் மண்டை ஓடு மூளையில் வளரும் கட்டிகளால் பாதிக்கப்பட்டு உட்புறம் அழுத்தத்தை சந்திக்கிறது. இது தீவிர தலைவலியை ஏற்படுத்துகிறது.மற்ற தலைவலிகளை போல் இல்லாமல் சில நேரங்களில் மோசமான வழியை தரும். இருமல், தும்மல் அல்லது உடற்பயிற்சி காரணமாக மூளைக் கட்டியுடன் தொடர்புடைய தலைவலி அதிகரிக்கும்.



கால்-கை வலிப்பு அல்லது அடிக்கடி மரத்து போவது தலைவலியோடு தொடர்புடையதாக இருக்கலாம். மூளை கட்டிக்கான சிகிச்சையானது கட்டியின் வகை, அளவு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்தது. பெரும்பாலான மூளைக் கட்டிகளுக்கு முதன்மையானது அறுவை சிகிச்சை. அறுவை சிகிச்சை செய்தாலும் நுண்ணோக்கி காணமுடியாத மூளையின் ஆழமான இடத்தில் கட்டிகள் இருக்க கூடும். இதற்கு கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் மூளைக் கட்டிகளுக்கான அறுவை சிகிச்சை மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது. நியூரோ-நேவிகேஷன் எனப்படும் கணினி உதவி நுட்பம் மூலம் மூளையில் கட்டி எங்குள்ளது என்பதும், அறுவை சிகிச்சையின் கருவி எங்கு செல்கிறது என்பதை துல்லியமாக பார்க்க முடியும். அறுவை சிகிச்சையின் போது ரத்த இழப்பை குறைக்க சில ரத்த நாளங்கள் முன்னெச்சரிக்கையாக அடைக்கப்படுகிறது. நவீன கால மருத்துவ தொழிநுட்ப வசதிகள் மூளைக் கட்டிகளை அகற்றுவதை மிகவும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றியுள்ளது.

 
Published by:Sivaranjani E
First published: