• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சுவாச நோய் தொற்றுகளின் அறிகுறிகளை குறைக்க ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ்கள் உதவுமா? ஆய்வில் வெளியான தகவல்..

சுவாச நோய் தொற்றுகளின் அறிகுறிகளை குறைக்க ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ்கள் உதவுமா? ஆய்வில் வெளியான தகவல்..

காட்சி படம்

காட்சி படம்

Respiratory Infections : சளி, காய்ச்சல், சைனசிடிஸ், நிமோனியா மற்றும் கோவிட்-19 உள்ளிட்டவை சுவாச பாதை நோய் தொற்றுகளாகும்.

  • Share this:
ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ்கள் (Zinc supplements) சுவாசக்குழாய் நோய் தொற்றின் அறிகுறிகளை குறைக்கவும் நோயின் காலத்தைக் குறைக்கவும் உதவும் என்று ஏற்கனவே இருக்க கூடிய ஆதாரங்களின் கீழ் தொகுக்கப்பட்ட பகுப்பாய்வு ஒன்று கூறுகிறது. இது தொடர்பாக BMJ ஓபன் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு கட்டுரையில் இருமல், தொண்டை அடைப்பு மற்றும் தொண்டை புண் போன்ற சுவாச பாதை நோய் தொற்றுகளின் அறிகுறிகளைத் தடுக்க மற்றும் நோயின் கால அளவை குறைக்க ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ்கள் உதவும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சளி, காய்ச்சல், சைனசிடிஸ் (சைனஸ் தொற்றுநோய்), நிமோனியா மற்றும் கோவிட்-19 உள்ளிட்டவை சுவாச பாதை நோய் தொற்றுகளாகும். இதனிடையே நோய் எதிர்ப்பு சக்தி, வீக்கம், திசு காயம் (tissue injury), ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு திசுக்களின் பதில்கள் உள்ளிட்டவற்றில் Zinc எனப்படும் துத்தநாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கோவிட்-19 நோய் தொற்றுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே SARS-CoV-2 இன் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு Zinc-ஐ பயன்படுத்த முடியுமா என்பது பற்றிய கணிசமான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
சிறிய நன்மைகள், திரிபுகளின் குறிப்பிட்ட தன்மை, மருந்து எதிர்ப்பு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் சாத்தியமான அபாயங்கள் ஜிங்கை சுவாசக்குழாய் நோய் தொற்றுகளை சுயமாக நிர்வகிப்பதற்கான சாத்தியமான இயற்கை மாற்றாக ஆக்குகிறது.

தவிர விரைவாக குணமடைய தேவையற்ற ஆண்டிபயாடிக் மருந்துகளை நாடக்கூடிய நோயாளிகளுக்காக மாற்று விருப்பமாக ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ்களை பரிந்துரைப்பதற்கான விருப்பத்தை மருத்துவர்களுக்கு வழங்குகிறது என்று ஆய்வாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 17 ஆங்கிலம் மற்றும் சீன ஆராய்ச்சி தரவுத்தளங்களில் வெளியிடப்பட்ட 5,446 பேரை உள்ளடக்கிய 28 மருத்துவ பரிசோதனைகள் இந்த மதிப்பாய்வில் அடங்கும் என்றாலும் கோவிட்-19 தடுப்பு அல்லது சிகிச்சைக்காக ஜிங்கை பயன்படுத்துவதைப் பற்றி எந்த ஆய்வும் குறிப்பாக பார்க்கவில்லை.

Also read : குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க உதவும் 5 ஸ்கின்கேர் டிப்ஸ்..

சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான ஜிங்க் கலவைகள் நாசி ஸ்ப்ரேக்கள் மற்றும் ஜெல்களைத் தொடர்ந்து லோசன்ஜ்கள் ஆகும். இதில் ஜிங்க் அசிடேட் அல்லது குளுக்கோனேட் உப்புகள் உள்ளன. டோஸ்கள் மற்றும் விநியோக முறைகள் ஆய்வுகளுக்கு இடையே கணிசமாக வேறுபடுகின்றன, மிகவும் பொதுவான கலவைகள் லோசன்ஜ்கள், நாசி ஸ்ப்ரேக்கள் மற்றும் துத்தநாக அசிடேட் அல்லது குளுக்கோனேட் உப்புகள் கொண்ட ஜெல்களாகும். அதே போல துத்தநாகம் சுவாச நோய் தடுப்பு அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பதைப் பொறுத்து, மருந்தின் டோஸேஜ் அளவுகள் கணிசமாக வேறுபடுகின்றன என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

எவ்வாறாயினும், வெவ்வேறு துத்தநாக கலவைகள், டோஸ்கள் மற்றும் நிர்வாக வழிகளின் மருத்துவ செயல்திறன் குறித்து கணிசமான நிச்சயமற்ற தன்மை உள்ளது என்பதை மருத்துவர்கள் மற்றும் நுகர்வோர் அறிந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள். வெவ்வேறு ஜிங்க் ஃபார்முலேஷன்ஸ் மற்றும் டோஸேஜ்களின் ஒப்பீட்டு செயல்திறன் தெளிவாக இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர். இந்த ஆய்வுகளின் தரம், அளவு மற்றும் வடிவமைப்பு ஆகியவை கணிசமாக வேறுபடுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: