Home /News /lifestyle /

தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால் ஆயுள் கூடுமா..? ஆய்வுகள் கூறும் உண்மை..!

தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால் ஆயுள் கூடுமா..? ஆய்வுகள் கூறும் உண்மை..!

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி

உடல் எடையைக் குறைக்கவும், மற்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் நடைப்பயிற்சியை பலர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இன்றைய வாழ்க்கை முறையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை கட்டாயம் செய்தாக வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்கு முக்கிய காரணம் ஒரே இடத்தில் பல மணி நேரம் இருந்து கொண்டு நாம் செய்ய கூடிய வேலைகள் தான். வாழ்க்கை சூழல், வேலை சூழல் என எல்லாமே இன்று மாறிவிட்டது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பலருக்கு ஏராளமான உடல் பாதிப்புகள் வந்துள்ளன.

இதனால் பலரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் எடையைக் குறைக்கவும், மற்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் நடைப்பயிற்சியை பலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆனால், உண்மையில் நடைப்பயிற்சியினால் நன்மைகள் உண்டா என்பதை தெளிவாக ஆராய்ந்து இருக்க மாட்டோம்.

தினமும் அதிகம் நடப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 'லான்செட் பப்ளிக் ஹெல்த்' என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுப்பாய்வானது உடற்பயிற்சிகள் பற்றிய ஆதார அடிப்படையிலான ஆய்வின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் என்கிற புது நடைப்பயிற்சி விதி ட்ரெண்டாகி வந்திருந்தது. இந்த புதிய முறை பல நன்மைகளை நமக்கு தரக்கூடும்.

குறிப்பாக, 60 வயது மற்றும் அதற்கு முதியவர்களுக்கு, இந்த நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது. இது அவர்களின் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது. இந்த வயதினர் ஒரு நாளைக்கு 6,000-8,000 ஸ்டெப்ஸ் நடந்தால் பெரிதாக பலன் கிடைப்பதில்லை. எனவே 8,000-10,000 ஸ்டெப்ஸ் நடந்தால் மட்டுமே அவர்களின் ஆயுளை அதிகரிக்க முடியும் என்று இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகிறது. இது போன்று தினமும் நடக்க கூடிய ஸ்டெப்ஸ்களின் அளவை அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் பலன் மேலும் உயர்வதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.எந்த அளவிற்கு வேகமாக நடக்க வேண்டும் என்பது முக்கியமில்லை. ஆனால், நாம் ஒரு நாளைக்கு எடுத்து வைக்கும் படிகள் தான் முக்கியம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த நடைப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் மரணத்தின் கால அளவை தள்ளிப்போட முடியும் என்று நிரூபணம் ஆகியுள்ளது. அமெரிக்கர்களுக்கான உடற்பயிற்சிகளில் சில மாற்றங்களை 2018 ஆம் ஆண்டு கொண்டு வந்தனர். அதன்படி பெரியவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மீதமான ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய பரிந்துரைத்தனர்.

நீங்கள் எப்போதும் பிசியான ஆளா...ஒர்க்அவுட் செய்ய கூட நேரமில்லாதவர்களுக்கு 3 நிமிட பயிற்சிகள்...

அதே போன்று தினமும் நடைப்பயிற்சி எந்த அளவிற்கு செய்கிறார்கள் என்பதையும் கண்காணித்து குறிப்பெடுத்து கொண்டனர். இதன் முடிவுகள் வியப்பாக இருந்தது. பெரியவர்கள் தினசரி 10,000 ஸ்டெப்ஸ் நடந்தவர்களின் ஆயுள் நீட்டிக்கப்பட்டதாக கூறினார். 

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்புகளில் தினசரி நடவடிக்கைகளின் விளைவை ஆய்வு செய்த 15 ஆய்வுகளின் ஆதாரங்களை இந்த ஆராய்ச்சி குழு ஒன்றிணைத்தது. மேலும் இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 50,000 பேர் பங்கேற்றனர். இவர்களின் நடைப்பயிற்சியில் அளவை கொண்டு நான்கு குழுக்களாக பிரித்தனர்.

குறைந்த ஸ்டெப்ஸ் நடந்த குழுவானது சராசரியாக 3,500 ஸ்டெப்ஸ் முடித்திருந்தது; இரண்டாவது குழு 5,800 ஸ்டெப்ஸ் கடந்திருந்தது. மூன்றாவது குழு 7,800 ஸ்டெப்ஸ் முடிந்திருந்தது; மற்றும் நான்காவது குழு ஒரு நாளைக்கு 10,900 ஸ்டெப்ஸ் நடந்திருந்தனர். இந்த பகுப்பாய்வின்படி, ஒரு நாளைக்கு அதிக ஸ்டெப்ஸ் நடந்தவர்கள் ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health Benefits, Walking

அடுத்த செய்தி