• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு ஹார்மோன் பிரச்சனை ஏற்படுகிறதா ?

கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு ஹார்மோன் பிரச்சனை ஏற்படுகிறதா ?

காட்சிப் படம்

காட்சிப் படம்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ் எண்ணற்ற நாடுகளில் பரவி வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் . எனினும் வைரஸ் பரவல் முடிவுக்கு வரவில்லை. தற்போது மூன்றாவது அலை குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் நான்காவது அலை பரவலும் ஆரம்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு நிலையில் உருமாற்றம் அடைந்து வருவதால் இதற்கான மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிட்ஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனால் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது. கொரோனா பாதித்த பலர் அதிலிருந்து மீண்டு வந்தாலும் அதற்கு பிறகு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்தநிலையில் கொரோனோவால் பாதித்த பலருக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்னை பெரும்பாலானோருக்கு ஏற்படுத்தவதாக தெரியவந்துள்ளது.

முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (எஸ்ஜிபிஜிஐஎம்எஸ்) சேர்ந்த சஞ்சய் காந்தி ஒவ்வொரு நாளும் சராசரியாக பத்து நோயாளிகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்னையால் அவதிப்படுவதாக கூறுகிறார். எண்டோகிரைன் சொசைட்டி இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு குறித்து விளக்கிய முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் கியான் சந்த், கோவிட் -19 நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸ் கணையத்தை மட்டும் பாதிக்காது, மற்ற நாளமில்லா சுரப்பிகள், ஆண் பாலியல் கோளாறுகளுக்கு கூட வழிவகுக்கிறது என தெரிவித்துள்ளார்.

லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் உள்ள உள் மருத்துவத் துறை, மேவுட், அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மற்றும் மருத்துவத் துறை, உட்சுரப்பியல் பிரிவு, லயோலா பல்கலைக்கழக சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு, மற்றும் உட்சுரப்பியல் பிரிவு, மருத்துவ சேவை, விஏ மருத்துவமனை, ஹைன்ஸ், இல்லினாய்ஸ் உள்ளிட்ட மருத்துவத்துறையை சார்ந்த மையங்கள் SARS-CoV-2 (Covid-19) வைரஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 15 சதவிகிதத்தினருக்கு மிதமான முதல் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என தகவல் அளித்துள்ளதாக கூறினார்.

Also Read : கொரோனாவால் முடி உதிர்வு பிரச்சனையா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

மேலும் "இது நாளமில்லா அமைப்பு உட்பட உடல் முழுவதும் பரவலான விளைவுகளை கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பிட்யூட்டரி, அட்ரீனல், தைராய்டு, எலும்பு பாதிப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். குறிப்பாக கொரோனா பாதித்த ஆண்கள் பலர், கோனாடல் ஹார்மோன்கள் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன, இதன் விளைவாக விந்தணு தரம் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் குறைகிறது.

இதனால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், சிகிச்சைக்கு திரும்பும் நோயாளிகள் உடல் முழுவதும் பரவலான நோய்கள் இருப்பதாக புகாரளித்துள்ளனர். எனவே கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்த நோயாளிகளுக்கு நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு முறையான சிகிச்சை தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “கோவிட் வைரஸ் ACE-2 ஏற்பிகளில் ஒட்டிக்கொண்டது என்பதால் இது அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் பாதிக்கிறது. "ஸ்க்ரோடல் அசவுகரியம் குறித்து பல அறிக்கைகள் உள்ளன, ஒரு முறை கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான ஸ்க்ரோடல் வலி கூட ஏற்படும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என விளக்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: