அதிகமாக வியர்த்தால் உடல் எடை குறையும் என்ற தவறான புரிதல் பலரிடம் நிலவுகிறது. ஆனால், உண்மை நிலை வேறாக இருக்கிறது. உங்களுக்கு எவ்வளவு வியர்க்கிறது என்பதை காட்டிலும் நீங்கள் எவ்வளவு அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதே முக்கியமானது.
இன்னும் உண்மையை சொல்வதென்றால், மழைக்காலத்தை ஒப்பிடுகையில் வெயில் காலத்தில் தான் ஒருவரது உடல் எடை அதிகரிக்கும். வியர்வைக்கும், உடல் எடை குறைப்புக்கும் உள்ள வித்தியாசத்தை அறியும் முன்பாக, பயாலஜிக்கல் ரீதியாக வியர்வையின் முக்கியத்துவம் என்ன? அது எப்படி நடைபெறுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எதனால் வியர்க்கிறது?
நம்மை சுற்றியிலும் வெப்பம் மற்றும் உஷ்ணம் அதிகரிப்பதன் காரணமாகவே பெரும்பாலும் நமக்கு வியர்வை வருகிறது. வெப்பம் அதிகரிப்பதற்கு ஏற்ப நம் உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் வேலை செய்ய தொடங்குவதால் நமக்கு வியர்வை வெளியேறுகிறது.
இந்த பொதுவான காரணம் தவிர்த்து, ஒரு மனிதருக்கு வியர்வை வர பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஸ்ட்ரெஸ் என்னும் மன பதற்றம் மிக முக்கியமானது. இதய துடிப்பு அதிகரிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களாலும் வியர்வை அதிகரிக்கிறது. சிலர் மிக அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யும்போதும், காய்ச்சலின் போதும் வியர்வை சுரக்கிறது.
வியர்வையால் கலோரிகள் கரையுமா?
உடல் தன்னைத் தானே குளிர்விக்க மேற்கொள்ளும் முயற்சிதான் வியர்வை ஆகும். இதற்கும் எடை குறைப்புக்கும் உள்ள தொடர்பு ரொம்பவே அதிகம். அதே சமயம், மிக அதிகப்படியான உடற்பயிற்சிகளையும் செய்யும்போது நமக்கு வியர்வை சுரப்பதுடன் உடலில் கலோரிகளும் கரைகின்றன. ஆனால், இதன் மூலம் எடை குறையாது.
இந்த 2 வைட்டமின் குறைபாடு இருந்தால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுமாம்..!
வியர்வை மூலமாக எதை இழக்கிறோம்
வியர்வை மூலமாக உடலில் உள்ள தண்ணீர் மற்றும் சில முக்கியமான தாதுக்களை நாம் இழக்கிறோம். உதாரணத்திற்கு சோடியம், குளோரைடு, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்களை நாம் இழக்கிறோம்.
எடை குறைவதாக தவறான புரிதல் இருப்பது ஏன்?
ஒருவர் மிகத் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது வியர்த்துக் கொட்டி, அவர் சோர்வு அடைவதைப் போலவே, மற்ற சந்தர்பங்களில் வியர்வை வரும்போதும், அது உடல் எடை குறைவதற்கான காரணமாக நாம் நினைத்து கொள்கிறோம்.
மழைக்காலத்தில் தாடி அரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லையா..? இந்த விஷயங்களை செஞ்சு பாருங்க...
கலோரிகளை கரைப்பது எப்படி?
முறையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலமாகவே கலோரிகளை கரைக்க முடியும். உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த வழிமுறையும் அதுவே. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகத்தான் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க முடியும்.
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
வியர்க்கும் போது உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. மாறாக நீர்ச்சத்து இழப்பு மற்றும் தாதுக்கள் இழப்பு போன்றவையே ஏற்படுகிறது. கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது தான் உடலில் உள்ள கொழுப்பு கரைகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.