• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முட்டைகோஸ் இலைகள் மார்பக வீக்கம் மற்றும் வலியைக் குறைக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்!

முட்டைகோஸ் இலைகள் மார்பக வீக்கம் மற்றும் வலியைக் குறைக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்!

முட்டைகோஸ்

முட்டைகோஸ்

முட்டைகோஸ் இலைகளை அதற்காகப் பயன்படுத்தப்படும். அது மட்டுமின்றி, பால் கொடுக்கும் காலத்தில் மார்பகம் விரிவடையும். அதை சரி செய்வதற்காகவும் குளிர்ந்த முட்டைக்கோஸ் இலைகள் மார்பகத்தில் வைக்கப்படும்.

  • Share this:
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தாய் மற்றும் குழந்தைக்கு பல்வேறு விதங்களில் நன்மை அளித்தாலும், தாய்ப்பால் கொடுப்பது உடல் ரீதியான பல அசௌகரியங்களை பெண்ணுக்கு ஏற்படுத்துகிறது. குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால் பால் கட்டிக் கொள்வது, மார்பக வலி, வீக்கம், சோர்வாக உணர்வது, ஆகியவை அசௌகரியமாக உணரச்செய்யும்.

வெந்நீரால் மசாஜ் செய்வது, மார்பகப் பேடுகள் முதல் குளிர்ச்சியான முட்டைகோஸ் இலைகளை வரை பல முறைகளை மார்பக வலி, வீக்கம் மற்றும் அசௌகரியத்துக்காக பெண்கள் பயன்படுத்துவது இயல்பு.

முட்டைகோஸ் இலைகளும் மார்பக வலியும் :

நீங்களும் முட்டைகோஸ் இலைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக்கி மார்பில் வைத்தால் வலி குறையும், என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். வலி மற்றும் சோர்வான மார்பங்களுக்கு மட்டுமின்றி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த முயற்சிக்கும் போது, அதாவது பாலூட்டுவதை நிறுத்தி திட உணவுகளை கொடுக்க முயற்சிக்கும் காலத்தில், தாய்ப்பால் சுரப்பதை நிறுத்த முயற்சி செய்வார்கள்.

முட்டைகோஸ் இலைகளை அதற்காகப் பயன்படுத்தப்படும். அது மட்டுமின்றி, பால் கொடுக்கும் காலத்தில் மார்பகம் விரிவடையும். அதை சரி செய்வதற்காகவும் குளிர்ந்த முட்டைக்கோஸ் இலைகள் மார்பகத்தில் வைக்கப்படும். இதுபற்றி பலரும் தற்போது பேசி வரும் நிலையில், உண்மையிலேயே முட்டைகோஸ் இலைகள் பலனளிக்கிறதா? என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பல ஆண்டுகளாக பெண்கள் பயன்படுத்தும் வீட்டு மருத்துவம் :

குழந்தைக்கு பாலூட்டுவதை ஒரே நாளில் உடனடியாக நிறுத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நிறுத்த முடியும். அதற்கு ஏற்றவாறு குறைவான பால் சுரப்பதற்காக மார்பகத்தை தயார் செய்ய வேண்டும். குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என்னும் போது, வேறு உணவுகளை எளிதாக அறிமுகப்படுத்தலாம்.



எனவே, பால் சுரப்பை குறைக்க, பெண்கள் பல ஆண்டுகளாக வீட்டில் பயன்படுத்தி வரும் ஒரு எளிய செயல்முறை தான் முட்டைகோஸ் இலைகள். இதன் குளிர்ச்சியான தன்மை விரிவடைந்த மார்பகத்தை ஓரளவுக்கு சுருங்கவும், தாய்ப்பால் சுரப்பை குறைக்கவும் உதவுகிறது. ஆனால், இதைப் பற்றிய ஆய்வுகள் தொடரும் அதே நேரத்தில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இப்போது வரை கிடைக்கவில்லை.

அதிகமாக ஆரஞ்சு சாப்பிடுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் கூறும் விளக்கம்..

முட்டைகோஸ் இலைகள் எப்படி வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது :

மேலே குறிப்பிட்டுள்ளது போல, முட்டைகோஸ் இலைகளுக்கு குளிர்ச்சியான தன்மை உள்ளன. மேலும், இதில் உள்ள அமினோ அமிலம் மார்பகத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, வீக்கம், அழற்சி மற்றும் இறுக்கமாக உணர்வை நீக்குகிறது. குழந்தை பால் குடிக்காமல் இருக்கும் போது, இலைகளைப் பயன்படுத்தினால், இறுக்கத்தை தளர்த்தி, பால் கட்டியிருப்பதை சரி செய்கிறது. மருத்துவ ரீதியாக, இது வலி, அசௌகரியமாக உணர்வது போன்றவற்றை குறைக்கிறது. எனவே, முட்டை கோஸ் இலைகள் பயன்படுத்துவது ஒரு கோல்டு கம்ப்ரஸ் (cold compress) கொடுக்கும் பலன்களைக் கொடுக்கிறது என்று கூறப்படுகிறது.



முட்டைகோஸ் இலைகளை எப்படி பயன்படுத்துவது?

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த நினைக்கும் பெண்கள் இதை முயற்சி செய்யலாம்.

முட்டைகோசின் மேற்புற இலைகளை ஒன்றிரண்டை நீக்கி, அடுத்து இருக்கும் இலைகளை கவனமாக எடுக்கவும். பெரிய அளவிலான இலைகள் பயன்படுத்துவது எளிதாக இருக்கும். உங்கள் மார்பகத்துக்கு பொருந்தும் வகையில் இலைகளை தேர்வு செய்யுங்கள். இலைகள் சிறியதாக இருந்தால், இரண்டு மூன்று இலைகளை ஒன்றாக சேர்க்க ஸ்டாப்ளர் அல்லது பின் பயன்படுத்தலாம்.

Pregnancy Tips : சுகப்பிரசவம் வேண்டும் என நினைக்கும் கர்ப்பிணிகள் இவற்றை சாப்பிட்டால் போதும்..

பின்னர், இலைகளை தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அடுத்து, இலைகளை உங்கள் மார்பகம் மீது வைக்கவும். மார்பக சருமத்தின் மீது இலைகள் இருப்பது போல வைக்க வேண்டும். வலி, வீக்கம், போன்றவற்றுக்காக பயன்படுத்தினால், 20 நிமிடம் வரை வைத்தால் போதும். பால் சுரப்பதை குறைக்க வேண்டும் என்றால், கூடுதலாக வைக்கலாம்.

முட்டைகோஸ் இலைகளை நன்றாகக் கழுவிய பின்னர் அப்படியே நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது ஃபிரீசரில் ஒன்றிரண்டு மணிநேரங்கள் வைத்தும் பயன்படுத்தலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: