சிலருக்கு அசைவ உணவுதான் நிறைவைத் தரும். இதற்காக ஞாயிறு வரை காத்திருப்போரும் உண்டு. அதேசமயம் அசைவம் இல்லாமல் உணவே சாப்பிட மாட்டேன் என்று சொல்லும் சிலரும் இருக்கிறார்கள். இந்நிலையில் அசைவ உணவு ஆரோக்கியத்திற்கு அதிக கேடு என்னும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அளவுக்கு அதிகமாக அசைவ உணவு சாப்பிடுவது பல வகையான உடல் நலப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
அதில் முக்கியமாக அதிக யூரிக் அமிலம் உருவாவதை தூண்டும் என்கின்றனர். இந்த யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் தேவையற்ற கழிவாகும். இது பியூரின்ஸ் என்னும் கெமிக்கலை உடல் வெளியிடும்போது உருவாகக்கூடிய அமிலமாகும். அதிகப்படியான யூரிக் அமிலம் சுரப்பதை hyperuricemia என்று அழைக்கிறார்கள். இது கீல்வாதம் போன்ற பல வகையான நோய்களை உண்டாக்கும். அப்படி அசைவ உணவு அதிகமாக சாப்பிடுவோருக்கு இரத்ததில் யூரிக் அமிலத்தின் சுரப்பு அதிகரிக்கும் என்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.
டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அம்ரேந்திர பதக் பேசுகையில் “ யூரிக் அமிலம் என்பது உடலின் கழிவு. இது கல்லீரலில் சுரந்து சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது. பின் அது சிறுநீர் வழியாக வெளியேறும். யூரிக் அமிலம் 3 காரணங்களுக்காக அதிகரிக்கும். அதில் முதல் காரணம் மோசமான வாழ்க்கைமுறை, இரண்டாவது சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனையால் அதிகரிக்கும். மூன்றாவது அதிகமாக பியூரின் மற்றும் அசைவ உணவுகளை உட்கொளவதாகும். உங்களுக்கு அதிகமாக யூரிக் அமிலம் சுரக்கிறது எனில் ஆரம்பத்தில் அறிகுறிகள் தென்படாது” என்று கூறுகிறார்.
யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது சில அறிகுறிகள் தென்படும். அவை..
உடலில் அதிக வலி இருக்கும் அல்லது மூட்டுகளில் வலி இருக்கும்.
மூட்டுகளில் கதகதப்பான உணர்வு இருக்கும்
அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள்
சிறுநீரில் வித்தியாசமான துர்நாற்றம் வீசும். நுரை அதிகமாக இருக்கும்.
குமட்டல் அல்லது வாந்தி வரும்
Also Read : டீ பிரியர்களே.. மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை டீயுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.!
ஏன் அசைவ உணவுகள் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கின்றன..?
டாக்டர் அம்ரேந்திர பதக் கூற்றுப்படி அதிகமாக புரோட்டீன் மறும் பியூரின் உணவுகளை உண்டால் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். குறிப்பாக சிவப்பு இறைச்சிகளில் அதிகமாக பியூரின்ஸ் இருப்பதால் யூரிக் அமிலத்தின் உற்பத்தியையும் அதிகரிக்கும். அப்படி பலர் யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சீரான உணவு முறை மூலம் இதை எளிதாக கட்டுப்படுத்த முடியும். ஒருவேளை உங்களுக்கு யூரிக் அமிலம் பிரச்சனையை கண்டறிந்துவிட்டால் ஒரு வாரத்திலேயே எளிதாக குணப்படுத்த முடியும் என்கிறார் மருத்துவர் பதக்.
யூரிக் அமிலத்தின் உற்பத்தியை கட்டுப்படுத்த சில டிப்ஸ் :
அசைவ உணவுகள் உட்கொள்வதை தவிர்க்கவும்
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறவும்
அதிக இனிப்பு கலந்த பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி, உடல் உழைப்பு அவசியம்
அவ்வப்போது உடல் நலப் பரிசோதனைகளை செய்வதும், ஆரோக்கியத்தை சீராக கடைப்பிடிப்பதும் அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Non Vegetarian, Side effects, Uric Acid