"மிக்ஸ் அண்ட் மேட்ச்" கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானதா? கோவிட் வைரஸை வெல்ல உதவுமா?

கொரோனா தடுப்பூசி

முதல் டோஸ் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் போட்டு கொண்டோர், தங்களது இரண்டாவது டோஸை பெற முயலும் போது மீண்டும் அதே தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

  • Share this:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில், மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் சில வாரங்களில் மூன்றாம் அலையின் தாக்கம் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் அதிக மக்களை தடுப்பு மருந்துகள் சென்றடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வமாக இருக்கும் நிலையில், பல இடங்களில் அதற்கு திடீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தடுப்பூசி போடாமல் இருப்பவர்களை விட முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களை இந்த பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. ஏனென்றால் முதல் டோஸ் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் போட்டு கொண்டோர், தங்களது இரண்டாவது டோஸை பெற முயலும் போது மீண்டும் அதே தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருப்பதாய் போல "மிக்ஸ் அண்ட் மேட்ச்" கோவிட் தடுப்பூசி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது சாத்தியமாகுமா என்பது பற்றிய ஆய்வில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். அதென்ன "மிக்ஸ் அண்ட் மேட்ச்" என்கிறீர்களா.? வேறொன்றுமில்லை முதல் டோஸில் நீங்கள் போட்டு கொண்டே அதே தடுப்பூசி இல்லாமல், இரண்டாவது டோஸின் போது வேறு நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டு கொள்வது தான் இங்கே "மிக்ஸ் அண்ட் மேட்ச்"தடுப்பூசிகள் என்று குறிப்பிடப்படுகிறது.

சமீபத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா கூட முதல் டோஸில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில், இரண்டாவது டோஸின் போது மாடர்னா தடுப்பூசியை போட்டு கொண்டார். இந்த சம்பவம் கோவிட் -19 தடுப்பூசிகளின் கலவை விவகாரத்தில் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த "மிக்ஸ் அண்ட் மேட்ச்" முறை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா அல்லது தடுப்பூசிக்கு பிந்தைய பொதுவான அறிகுறிகளில் ஏதேனும் வித்தியாசத்தை ஏற்படுத்துமா என்பதை உறுதியாக கண்டறிய ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.ஒரே தடுப்பூசியின் 2 டோஸ்களை உடலில் செலுத்தி கொள்வதை விட, இரு வெவ்வேறு தடுப்பூசிகளை முதல் மற்றும் இரண்டாம் டோஸில் எடுத்து கொள்வது மிகவும் வலுவான, நீடித்த நோயெதிர்ப்பு சக்தியை தூண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மிக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு உலக நாடுகள் ஒரே நேரத்தில் தடுப்பூசி செலுத்தி வருவதால், இயற்கையாகவே தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுகிறது. அதுவே "மிக்ஸ் அண்ட் மேட்ச்" தடுப்பூசி போடும் முறை நடைமுறைக்கு வந்தால் கவலையின்றி மக்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய எந்த ஒரு தடுப்பூசியையும் பெற முடியும்.

மிக்ஸ் அண்ட் மேட்ச் முறையின் உயிரியல் விளைவுகள் என்ன.?

உலகெங்கிலும்இருக்கும் வெவ்வேறு மருந்து நிறுவனங்கள் வெவ்வேறு முறைகளை பயன்படுத்தி கோவிட் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. வெவ்வேறு தடுப்பூசி தொழில்நுட்பங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் தனித்துவமான அம்சங்களை செயல்படுத்துகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் SARS-CoV-2 ஸ்பைக் புரதத்தின் சற்று மாறுபட்ட பகுதிகளை அவற்றின் தடுப்பூசி ஃபார்முலாவில் பயன்படுத்தி உள்ளன. SARS-CoV-2 ஸ்பைக் புரதம் என்பது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு பதிலளிக்கும் வைரஸின் ஸ்பைக் புரதம். இதன் மூலம் கொரோனா வைரஸ் போன்ற தோற்றமுடைய நோய் கிருமியற்ற ஒரு ஸ்பைக் புரதம் தடுப்பூசி வழியே உள் செலுத்தப்படுகிறது. ஸ்பைக் புரதத்தை எதிர்த்து நோயெதிர்ப்பு மண்டலம் போராடும் போது, எதிர்காலதில் ஏற்பட கூடிய நோய்த்தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள உடல் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

தடுப்பூசி மூலம் உருவாகும் ஆன்டிபாடிகளின் நமக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க வேண்டும். ஸ்பைக் புரத மாற்றம் மூலம் உருமாறிய வேரியண்ட் வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் mRNA-வின் சிறிய பகுதியை கொண்டுள்ளன.

இது SARS-CoV-2 ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியை உருவாக்குவதற்கான செய்முறையைக் கொண்டிருக்கும் மரபணு பொருளாகும். ஒரு fat coat-ல் மூடப்பட்டிருக்கும், mRNA தடுப்பூசி போட்டு கொண்டவரின் உயிரணுக்களில் கலந்து, அங்கு அது வைரஸ் புரதத்தின் உற்பத்தியை இயக்குகிறது. பின்னர் குறிப்பிட்ட நபரின் நோயெதிர்ப்பு அமைப்பானது வெளியில் இருந்து ஊடுருவி உள்ள ஸ்பைக் புரதத்தை கண்டறிந்த அதற்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பல கோவிட்-19 தடுப்பூசிகள் வைரஸ் வெக்டார்களை (viral vector) நம்பியுள்ளன.இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் SARS-CoV-2 ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியை உற்பத்தி செய்வதற்காக. ஒரு அடினோவைரஸை மாற்றியமைத்தனர். இந்த மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் பாதுகாப்பானது என்று குறிப்பிட்டுள்ளனர். இதுவரை வெளியாகி உள்ள தகவல்களின் படி ஒரு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தொடர்ந்து, இரண்டாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசி எடுத்து கொள்வது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கலவையா காரணமாக வலி மற்றும் சளி போன்ற தற்காலிக பக்கவிளைவுகள் ஏற்பட சற்று அதிக வாய்ப்புள்ளது.

கவலைகள் :

மிக்ஸ் அண்ட் மேட்ச் முறை எவ்வளவு பாதுகாப்பானது இதனால் சிறந்த நோயெதிர்ப்பு பதிலைத் தூண்ட முடியுமா என்பது பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த முறை பற்றி நெருக்கமான ஆய்வுகள் உதாரணமாக கோவாக்சினுக்கு முன் கோவிஷீல்ட்டை முதல் டோஸாக போட்டு கொள்வது சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை தருமா? என்பது பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன. மிக்ஸ் அண்ட் மேட்ச் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் சில சர்வதேச அமைப்புகள், இதிலிருக்கும் சில சிக்கல்களை எடுத்துக்காட்டி உள்ளன.

Coronavirus : தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு இந்த அறிகுறி தோன்றினால் கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் - நிபுணர்கள் எச்சரிக்கை

இந்த தடுப்பூசிகளின் ஷெல் லைஃபில் உள்ள வேறுபாடுகள், அவற்றின் ஏற்றுமதி மற்றும் ஸ்டோரேஜ் கண்டிஷன்கள் மற்றும் முரண்பாடுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். சில தடுப்பூசிகள் அதிக பக்க விளைவுகளைக் கொண்டிருக்கலாம் அல்லது குறிப்பிட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் செயல்படாது என்றும் குறிப்பிடுகின்றன. மேலும் ஒரு சில ஆய்வுகள் சில தடுப்பூசிகளின் மிக்ஸ் அண்ட் மேட்ச்கள், ஃபைசர் தடுப்பூசிகளுடன் அஸ்ட்ராஜெனெகா போன்ற சில தடுப்பூசி சேர்க்கைகள் அதிக பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் கருத்து :

உலக நாடுகள் மற்றும் மருந்தக நிறுவனங்கள் உருமாறிய வைரஸ்களுக்கு எதிரான பூஸ்டர்களை தயாரிக்க முனைப்பாக செயல்பட்டு வரும் வேளையில், தடுப்பூசிகளின் கலவையை பயன்படுத்தி ஹீட்டோரோலஜஸ் பிரைம்-பூஸ்ட் நோய்த்தடுப்பு அல்லது நோய்த்தடுப்பு மருந்துகள் வெளிவருவது நாடுகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். ஒரு நிறுவனத்தின் தடுப்பூசி மூலம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுவிட்டு அடுத்த டோஸிற்காக அதே நிறுவன தடுப்பு மருந்திற்கு காத்திருக்கும் மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கான வாய்ப்பை இது திறக்கிறது. மேலும் இது சிறப்பாக செயல்படுவதாகத் தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.உலகளாவிய நிலை.?

பல ஐரோப்பிய நாடுகள் மிக்ஸ் அண்ட் மேட்ச் தடுப்பூசி முறைகளை பயன்படுத்தி வருகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன், நார்வே மற்றும் டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை முதல் டோஸாக போட்டு கொண்டவர்கள் வேறு மாற்று தடுப்பூசியை தங்கள் இரண்டாவது டோஸாக எடுத்து கொள்ளுமாறு அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். ஸ்பானிஷ் ஆய்வு ஒன்றில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸைத் தொடர்ந்து, இரண்டாவது டோஸாக ஃபைசர் ஷாட்டைப் பெற்ற நபர்களுக்கு 14 நாட்களுக்குப் பிறகு அதிக ஆன்டிபாடி ரெஸ்பான்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தேசிய தடுப்பூசி திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்ய கோவிட் -19 தடுப்பூசிகள் மிக்ஸ் அண்ட் மேட்ச் முறை செயல்படுத்தப்படும் என்று கனேடிய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எபோலா போன்ற வைரஸ்களுக்கு எதிராக மிக்ஸ் அண்ட் மேட்ச் முறை ஏற்கனவே பல ஆண்டுகளாக சோதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான காம்பினேஷன்கள் ஆரம்பத்தில் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தடுப்பூசிகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டன. இந்தியாவில், ரோட்டா வைரஸ் தடுப்பூசிகளின் சேர்க்கைகளும் பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.

 
Published by:Sivaranjani E
First published: