• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Corona Vaccination : 2-வது டோஸ் கோவிட் தடுப்பூசி நோயெதிர்ப்பு மண்டலத்தை மிக விரைவாக ஆக்டிவேட் செய்கிறது - ஆய்வு

Corona Vaccination : 2-வது டோஸ் கோவிட் தடுப்பூசி நோயெதிர்ப்பு மண்டலத்தை மிக விரைவாக ஆக்டிவேட் செய்கிறது - ஆய்வு

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

கோவிட் தொற்றுக்கு எதிரான உரிய பாதுகாப்பை ஒருவர் பெற 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு கொள்வது மிக முக்கியமானது.

  • Share this:
நம் நாட்டில் கோவிட்-19 தொற்றின் 2-வது அலை இன்னும் முழுமையாக ஓயவில்லை. இன்னும் பல நாடுகளில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் கோவிட் -19 வைரஸுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை தொடர்ந்து துரிதப்படுத்தி வருகின்றன.

தற்போது கட்டுக்குள் இருக்கும் கொரோனாவின் அடுத்த அலை எந்நேரம் வேண்டுமானாலும் தீவிரமாகலாம் என்ற சூழலை கருத்தில் கொண்டு தொற்றுக்கு எதிரான மிக பெரிய கேடயமான தடுப்பு மருந்துகளை தயக்கமின்றி தடுப்பூசி வடிவில் எடுத்து கொள்ள பல நாடுகளும் தங்களது மக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.

தடுப்பூசி போட்டு கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அனைத்து வகை தடுப்பூசிகளிலும் சில பக்கவிளைவுகள் பொதுவானது எனவே பயமின்றி எடுத்து கொள்ளுங்கள் என்றும் நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தடுப்பூசிகள் பாதுகாப்பானவை தான் என்றாலும், அவற்றின் செயல்திறன் மற்றும் அவை எவ்வளவு நாட்களுக்கு பாதுகாப்பு தரும் உள்ளிட்ட பல கேள்விகளுக்கான் பதில்கள் மருத்துவ பரிசோதனைகள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில் சமீபத்திய சோதனை ஒன்றின்படி கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டு கொண்ட 2 வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசி நமக்கு அளிக்கும் பாதுகாப்பு உகந்ததாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.கோவிட் தொற்றுக்கு எதிரான உரிய பாதுகாப்பை ஒருவர் பெற 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு கொள்வது மிக முக்கியமானது என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் அப்போது தான் ஒட்டுமொத்த பாதுகாப்பை வழங்கும் மற்றும் நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆன்டிபாடி ரெஸ்பான்ஸை ஒருவர் அடைய வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

நியூயார்க் பிரஸ்பைடிரியன் வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, தடுப்பூசியின் முதல் டோஸுக்கு ஆன்டிபாடி ரெஸ்பான்ஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த போது, SARS-CoV-2, Covid-19 வைரஸை அடையாளம் காணக்கூடிய ஆன்டிபாடிகளை உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு உருவாக்க துவங்க குறைந்தது 10 நாட்கள் ஆகிறது என்று அவர்கள் ஆய்வில் தெரிய வந்தது.

கொரோனா 2-ம் அலையால் கர்ப்பிணி பெண்கள், புதிய தாய்மார்களின் பாதிப்பு இரட்டிப்பானது : ICMR அறிக்கை

நமது நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் தடுப்பூசிக்கு எதிர்வினையாற்ற தொடங்க குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்று இதன் மூலம் தெரிகிறது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். அதுவே முதல் டோஸை ஒப்பிடும் போது கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்து கொண்ட ஒரு வாரத்திற்குள் அது நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை மிக விரைவாக செயல்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.இதன் மூலம் நம் உடலில் ஆன்டிபாடிகளின் அளவை அதிகரிக்க, பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்குள் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என்பது முக்கியமாகிறது. மேலும் இரண்டாவது டோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபட்சம் பத்து மடங்குகள் வரை அதிகரிக்க செய்கிறது மற்றும் தொற்று நோயிலிருந்து மிகவும் வலுவான மற்றும் நீண்டகால பாதுகாப்பை வழங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Coronavirus : மூளையை பாதிக்கும் கோவிட் 19 : ஜெர்மனி ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

இரண்டாவது டோஸ் பெறும் பரிந்துரைக்கப்பட்ட தேதியை ஒருவர் தவறவிட்டால் கவலைப்பட தேவையில்லை. அதற்காக மிகவும் தாமதம் செய்யலாம் என்று அர்த்தம் இல்லை. தவற விடும் தேதிக்கு மிக நெருக்கமான தேதியிலேயே உதாரணமாக ஓரிரு நாளிலேயே போட்டு கொள்வது சிறந்த பலனை பெறுவதை உறுதி செய்யும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறிவியல் தரவுகளின் படி, இரண்டாவது டோஸை பெற்றதிலிருந்து சில மாதங்களுக்கு பெரும்பாலான மக்களை தொற்றிலிருந்து பாதுகாக்கும். ஆனால் ஒன்றிரண்டு வருடங்கள் அல்லது நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்கான அவற்றின் செயல்திறன் குறித்து இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும். எனவே, தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கை சுகாதாரம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது நோயைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

v

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: