ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பிணிகள் அடிக்கடி ஸ்கேன் செய்வது கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா..?

கர்ப்பிணிகள் அடிக்கடி ஸ்கேன் செய்வது கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 58 : எக்ஸ்ரே என்பது கதிர்வீச்சு தன்மையுடையது. சிடி ஸ்கேன் கதிர்வீச்சு தன்மையுடையது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்பது ஒலி அலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எம் ஆர் ஐ ஒலியலைகளை அடிப்படையாகக் கொண்டது. அதனால் பயன்படுத்தும் போது எந்த விதமான கதிர்வீச்சும் இருப்பதில்லை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சாராவும் அவருடைய தாயும் அன்று மருத்துவமனைக்கு வந்திருந்தனர். சாராவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது.

அவருடைய தாய் தான் தொடங்கினார். '" சாராவுக்கு மாதவிடாய் ஒரு வார காலம் தள்ளியிருக்கிறது. சாப்பிட முடியவில்லை . வயிற்றில் அதிகமாக கேஸ் இருப்பது போல இருக்கிறது. லேசான தலை சுற்றலும் இருக்கிறது. நல்ல நியூஸா!, என்று பார்த்து சொல்லுங்கள் டாக்டர்!! "என்று கூறினார்.

'கர்ப்பமாக இருக்கலாம் ' ,என்று யூரின் டெஸ்ட் எடுத்து செக் செய்தோம். டெஸ்ட் கிட்டில் இரண்டு கோடுகள் கர்ப்பம் இருப்பதை உறுதி செய்தது.

"கங்கிராஜுலேஷன்ஸ்! சாரா!!" என்றேன். இருவர் முகத்திலும் மகிழ்ச்சி.

பொதுவான உடல்நிலை விசாரிப்புகளான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்பட்டுள்ளதா? மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்களா? குடும்பத்தில் ஏதேனும் குறைபாடுள்ள குழந்தைகள் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளில் , எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்பது தெரிந்தது.

அடிப்படை ரத்தப் பரிசோதனைகளை எடுத்துக் கொள்ளுமாறு எழுதி கொடுத்தேன்.

6-7வது வாரத்தில் ஸ்கேன் செய்து பார்த்தால் கருவினுடைய இதய துடிப்பை உறுதி செய்ய முடியும் என்று கூறினேன். அதற்காக இரண்டு வாரங்கள் கழித்து வருமாறு கூறினேன்.

சாராவின் தாய்க்கு சந்தேகம். "அதற்குள் தெரிந்து விடுமா டாக்டர் !!! இந்த கட்டத்திலேயே ஸ்கேன் செய்தால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை வருமா? தாயின் உடல்நிலை எதுவும் பாதிக்குமா? ஸ்கேன் செய்தால் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு வருமா? எக்ஸ்ரே எடுக்க கூடாது என்று சொல்வார்களே!, ஸ்கேன் மட்டும் எடுக்கலாமா ???"என்பது போன்ற கேள்விகளை அடுக்கினார்.

என்னுடைய பதில்:

எக்ஸ்ரே என்பது கதிர்வீச்சு தன்மையுடையது. சிடி ஸ்கேன் கதிர்வீச்சு தன்மையுடையது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்பது ஒலி அலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எம் ஆர் ஐ ஒலியலைகளை அடிப்படையாகக் கொண்டது. அதனால் பயன்படுத்தும் போது எந்த விதமான கதிர்வீச்சும் இருப்பதில்லை. அதனால் குழந்தைக்கோ, தாய்க்கோ எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.

Also Read : கர்ப்பம் உறுதியானதும் இத்தனை டெஸ்ட் எடுக்கனுமா..? ஏன் இதெல்லாம் எடுக்கனும் தெரியுமா..?

ஆரம்ப கட்டத்தில் குறிப்பாக ஆறிலிருந்து ஏழு வாரங்களில் முதல் ஸ்கேன் எடுக்கும் போது,

1.கருப்பைக்குள் கர்ப்பம் இருக்கிறதா?

2. எத்தனை குழந்தைகள் இருக்கின்றன? அதாவது இரட்டை குழந்தை போன்றவையும் ஆரம்ப கட்டத்திலேயே தெரிந்து விடும்.

3.கருவுக்கு வளர்ச்சி சரியாக இருக்கிறதா? கருவுக்கு இதயத்துடிப்பு வந்து விட்டதா ?

4.வேறு ஏதேனும் கருப்பையை சுற்றி உள்ள பகுதிகளில் பிரச்சனை இருக்கிறதா?

என்பது போன்ற முக்கியமான விபரங்களை அறியலாம்.

கர்ப்பப்பை இல்லாமல் டியூபல் பிரக்னன்சி என்று சொல்லப்படும் கரு குழாய் கர்ப்பத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் போது ஊசி மூலமாகவே குணப்படுத்த முடியும் . கரு வளர்ச்சி ஆரம்ப கட்டத்திலேயே கணக்கிடப்படும் பொழுது பிரசவ தேதியில் குழப்பங்கள் வராது. இதயத் துடிப்பு வந்துவிட்டது என்றால் அதற்குப் பிறகு அந்த கரு அபார்ஷன் ஆகும் வாய்ப்பு குறைவு.

இதை ஆரம்ப கட்டத்திலேயே உறுதிப்படுத்துவதன் மூலம் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். அதனால் ஏழு வாரங்களில் ஒரு ஸ்கேன் செய்து கொள்வது மிகவும் முக்கியம் எத்தனை முறை கர்ப்ப காலத்தில் ஸ்கேன் செய்தாலும் குழந்தைக்கு தாய்க்கோ எந்தவிதமான பிரச்சனையும் வருவதில்லை. கிட்டத்தட்ட 30 வருடங்களாக இதை நாங்கள் நேரடியாக பார்க்கிறோம். அதனால் உறுதியாக சொல்ல முடியும். எனவே ஏழாவது வாரத்தில் கட்டாயமாக ஸ்கேன் செய்து கொள்ள சாராவை அழைத்து வாருங்கள்" என்று கூறினேன் .

" நன்றாக தெளிவாக எடுத்து கூறினீர்கள்!! டாக்டர்!!!. திருப்தியாக இருக்கிறது. மிக்க நன்றி!!! " என்று கூறி விடை பெற்றனர்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy, பெண்குயின் கார்னர்