Home /News /lifestyle /

உடற்பயிற்சி செய்தால் பெண்கள் சீக்கிரம் கர்ப்பமாக முடியுமா..? நிபுணர்கள் சொல்லும் தகவல்...

உடற்பயிற்சி செய்தால் பெண்கள் சீக்கிரம் கர்ப்பமாக முடியுமா..? நிபுணர்கள் சொல்லும் தகவல்...

உடற்பயிற்சி நன்மைகள்

உடற்பயிற்சி நன்மைகள்

உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தோடு இருந்தாலே கருவுறுதலில் எவ்வித தாமதமும், பிரச்சனையும் ஏற்படாது. இதனால் தான் மருத்துவர்கள் உடற்பயிற்சியை பரிந்துரைக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தினமும் நடைபயிற்சி, நீச்சல், யோகா, நடனம் மற்றும் பைலேட்ஸ் போன்ற மிதமான உடற்பயிற்சிகள் பெண்களின் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்க உதவுவதாக கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதைப் போன்று தான் குழந்தைப் பிறப்பும். எல்லாவற்றிற்கும் நேரம் கூடி வர வேண்டும் என்பார்கள் நம் முன்னோர்கள். ஆனால் சமூகம் அதற்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. திருமணம் நடந்து முடிந்த ஒரிரு மாதங்களிலே எதுவும் விசேசம் உண்டா? என கேள்விகளை எழுப்பி பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவார்கள். பெண்களோ ஏன் கர்ப்பம் தரிக்கவில்லை. என்ன பிரச்சனைகள் தனக்கு உள்ளது? என பல்வேறு கேள்விகளோடு உள்ள நிலையில் அவர்களின் தாய் உள்பட பல உறவினர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவார்கள்.

ஆனாலும் எவ்வித பலனும் கிடைக்காத பட்சத்தில் தான், செயற்கை கருத்தரித்தல் முறையைத் தேர்வு செய்கிறார்கள். அதுவும் அனைவருக்கும் வெற்றியைக் கொடுக்குமா? என்பது கேள்விக்குறி தான். பொதுவாக இன்றைக்கு மாறிவரும் உணவு பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப பெண்களின் உடல் நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. இதனால் கருத்தறித்தலும் தாமதம் ஏற்படுகிறது. இச்சூழலில் தான், பெண்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால் கர்ப்பம் தரிப்பது சுலபமாகிவிடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். எப்படி? இது சாத்தியமா? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.



பெண்கள் கருவுற உடற்பயிற்சிகள் எவ்வாறு உதவுகிறது?

உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தோடு இருந்தாலே கருவுறுதலில் எவ்வித தாமதமும், பிரச்சனையும் ஏற்படாது. இதனால் தான் மருத்துவர்கள் உடற்பயிற்சியை பரிந்துரைக்கின்றனர். பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வீக்கத்தைக் குறைத்து நமது பிஎம்ஐ மேம்படுத்துகிறது மற்றும் நமது ஆற்றலை சமநிலையில் வைக்க உதவுகிறது. இவை அனைத்தும் கருவுறுதலை அதிகரிக்க பெரிதும் உதவுவதாகக் கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிக்க தாமதமாகுமா..? குழந்தையின்மையை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்

கருத்தரிப்பில் பெண்களுக்கு என்ன வகையான உடற்பயிற்சி உதவுகிறது?

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஷீப்பா மிட்டலின் கூற்றுப்படி, உடல் ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருப்பது பெண்கள் கருத்தரிக்க உதவுகிறது.எனவே தான் தினமும் நடைப்பயிற்சி, நீச்சல், யோகா, நடனம் மற்றும் பைலேட்ஸ் போன்ற மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள பரிந்துரைக்கின்றனர். இவை பெண்களின் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.



பிசிஓஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடற்பயிற்சி உதவுமா?

இன்றைக்கு பல பெண்கள் கரித்தரிப்பிற்கு தாமதம் ஆவதற்கு பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்சனைகள் தான் காரணம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். மேலும் கர்ப்ப காலத்திற்கு முன்னும் பின்னும் சுறுசுறுப்பாக இருப்பது கர்ப்ப கால நீரழிவு மற்றும் கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல் ஏற்படுத்துவதைக் குறைக்க உதவுகிறது என்கின்றனர்.

குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவருமே தான் காரணம் : IVF நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மேலும் உடற்பயிற்சி செய்யும் போது , மன ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு உதவியாகவும் உள்ளது. எனவே மகிழ்ச்சியான மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது எவ்வித இடையூறும் இல்லாமல் பெண்கள் கருத்தரிக்க முடியும் என்று நம்புகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Exercise, PCOD, PCOS, Pregnancy

அடுத்த செய்தி