ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தையின்மைக்கு மன அழுத்தம்தான் காரணமா..? செஃப் வெங்கடேஷ் பட் பதிவுக்கு மருத்துவர் விளக்கம்..!

குழந்தையின்மைக்கு மன அழுத்தம்தான் காரணமா..? செஃப் வெங்கடேஷ் பட் பதிவுக்கு மருத்துவர் விளக்கம்..!

ஃபோலேட் நிறைந்தது...

கர்ப்பிணி பெண்களுக்கு ஃபோலேட் ஒரு முக்கிய மினரல். ஏனென்றால் பிறக்க போகும் குழந்தையை நரம்புக் குழாய் குறைபாடுகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க இந்த மினரல் உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு தினசரி தேவைப்படும் ஃபோலேட்டின் கால் பகுதி ஒரு பவுல் பாகற்காயில் அடங்கி இருக்கிறது.

ஃபோலேட் நிறைந்தது... கர்ப்பிணி பெண்களுக்கு ஃபோலேட் ஒரு முக்கிய மினரல். ஏனென்றால் பிறக்க போகும் குழந்தையை நரம்புக் குழாய் குறைபாடுகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க இந்த மினரல் உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு தினசரி தேவைப்படும் ஃபோலேட்டின் கால் பகுதி ஒரு பவுல் பாகற்காயில் அடங்கி இருக்கிறது.

Pregnancy | தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து குழந்தையில்லாத பெண் கருத்தரித்ததாக, அதன் நடுவர் பேசிய கருத்து, சமூகவலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கு மருத்துவர்கள் கூறும் விளக்கம் என்ன.... பார்க்கலாம்....

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தனியார் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசிய சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட், தனக்கு சமூக ஊடகத்தில் வந்த தனிப்பட்ட செய்தியை பகிர்ந்துகொண்டார்.

  அதில், எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண் ஒருவர், செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது, மற்றொரு பெண்ணின் பரிந்துரைபடி, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை பார்த்ததாகவும், அதனால் மன அழுத்தம் குறைந்து தற்போது கர்ப்பமாகியுள்ளதாக தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகவும் வெங்கடேஷ் பட் தெரிவித்தார்.

  தான் பங்குபெறும் நிகழ்ச்சிக்கு வந்த பாராட்டாக சமையல் நிபுணர் கூறிய கருத்தை, சமூகவலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்ய தொடங்கினர். மீம்ஸ் எனும் பெயரில், குழந்தையில்லாத பெண்களை குறிவைத்து வரம்பு மீறிய ட்ரோல்களையும் இங்கு பார்க்க முடிந்தது.

  அதேசமயம், மன அழுத்தம் குறைந்தால் மட்டும் குழந்தை பேறு நிகழ்ந்து விடுமா என்பது போன்ற விவாதங்களும் எழ ஆரம்பித்தது.

  உண்மையில் குழந்தையின்மை பிரச்னைக்கும், மனஅழுத்தத்திற்கும் என்ன தொடர்பு என்பதை விளக்கும் மருத்துவர்கள், ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால், அதற்கு உடல் ரீதியான குறைபாடு மட்டுமே காரணமாக இருக்காது என்றும், மனநலம் சார்ந்தும் குறைபாடு இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். மதுப்பழக்கம், புகைப்பழக்கம், உடல் பருமன் உள்ளிட்ட பல காரணிகள் குழந்தையின்மை பிரச்னைக்கு காரணமாக அமைவதாகவும், மன அழுத்தத்தினாலும் கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் என்பதும் மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

  ஆழ்ந்த மன அழுத்தத்தில் இருப்பவர்களின், ஹார்மோனில் மாற்றம் ஏற்படும். இதனால், உடலுறவுக்கான எண்ணங்கள் இருக்காது எனக்கூறும் மருத்துவர்கள், இதனை குறைப்பதற்காகவே புதுமண தம்பதியர் தேனிலவு செல்ல வீட்டில் உள்ள பெரியோர் அறிவுறுத்தவதாக சொல்கின்றனர்.

  Also Read : யார் யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய கூடாது..?

  மருத்துவர்கள் கூறுவதுபோல இங்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கு நகைச்சுவை எனும் கருவிதான், அட்சயபாத்திரமாக விளங்குகிறது. உடலில் சுருண்டு கிடக்கும் நரம்புகளை தட்டி எழுப்பும் சூட்சுமம் தெரிந்த கலையே இந்த நகைச்சுவை. யோகாவிலும் லாஃபிங் தெரபி இருக்க, பூட்டிக்கிடக்கும் வாழ்க்கையை திறக்கும் மந்திரசாவியான சிரிப்புதான், இன்றைய மாற்று மருத்துவ முறைகளின் ஒரு சிகிச்சை முறையாக உருவெடுத்திருக்கிறது.

  சூழ்நிலையின் இறுக்கத்தை நகைச்சுவை போக்கிவிடும் என்றாலும், அதுமட்டுமே ஒருவர் மீள முழுக்காரணியாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.

  குறிப்பாக, ஐவிஎஃப் எனும் செயற்கை முறை கருத்தரிப்பிற்காக கடினமான பல்வேறு கட்ட சிகிச்சைமுறையை மேற்கொள்பவர்களின் மன இறுக்கத்தை குறைப்பதற்கு, குக்வித் கோமாளி போன்ற காமெடி நிகழ்ச்சி உதவியிருக்கலாம் என விளக்கும் மருத்துவர்கள், அதுவே காரணமாக இருக்காது என்கின்றனர்.

  Also Read : மாத்திரைகள் PCOS- ஐ குணப்படுத்தாதா..? 7 கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

  மனச்சிக்கல் மனிதருக்கு பல சிக்கலை கொடுக்க, அதனை குறைக்க உதவும் எந்தவொரு சூழலும் உடல்நலத்திற்கு ஏற்றதுதான். ஆனால், அந்த மனஅழுத்தம் குறைந்தாலே குழந்தை பிறந்து விடும் என்பது அறிவியல் பூர்வமான கருத்து அல்ல என மகப்பேறு மருத்துவர் கல்பனா தேவி தெரிவித்துள்ளார்.

  Published by:Selvi M
  First published:

  Tags: Infertility, Stress