Bone Deaths | கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்கும் ’எலும்பு மரணம்’- மருத்துவர்கள் எச்சரிக்கை!

எலும்புத் திசுக்களின் மரணம் எனப்படும் அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் பாதிப்பு, எலும்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் தடைபடும்போது ஏற்படும்.

எலும்புத் திசுக்களின் மரணம் எனப்படும் அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் பாதிப்பு, எலும்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் தடைபடும்போது ஏற்படும்.

  • Share this:
கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்களை எலும்பு மரணம் என்ற புதுவகையான நோய் தாக்குவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இரண்டாம் அலை கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் இருந்து மீண்டவர்கள் பல்வேறு பக்க நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருப்பு பூஞ்சை, ரத்த உறைவு, இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்நிலையில், Bone Death எனப்படும் எலும்பு மரணம் மருத்துவர்களையும் பீதியடைய வைத்துள்ளது. மும்பையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்ட பலரும் எலும்பு மரண நோயால் (avascular necrosis) பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவாஸ்குலர் நெக்ரோஸிஸ்:

எலும்புத் திசுக்களின் மரணம் எனப்படும் அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் பாதிப்பு, எலும்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் தடைபடும்போது ஏற்படும் நோயாகும். பொதுவாக, தொடை மற்றும் இடுப்பு எலும்புகள் இந்த வகை நோயால் பாதிக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் தடைபடுவதால் திசுக்கள் இறந்து நெக்ரோஸிஸ் பாதிப்புக்கு வழிவகுக்கின்றன. இடுப்பு எலும்பு திசு பாதிப்பு அண்மையில் அதிகமாக கண்டறியப்பட்ட நிலையில், நெக்ரோஸிஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோய் உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆரம்ப கட்டத்தில் அறிகுறி இல்லாமல் இருக்கும் இந்த நோய் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கடுமையான வலிகளை ஏற்படுத்தும். மூட்டு பாதிப்புக்குள்ளாகும்.

மருத்துவர்கள் கண்டுபிடிப்பு:

அண்மைக் காலமாக நெக்ரோஸிஸ் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், அவர்கள் பெரும்பாலும் கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்களாக இருப்பதாக கூறியுள்ளனர். அதாவது, ஒரு மாதங்களுக்குள்ளாக கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்கள், குறிப்பாக 40 வயதிற்குட்பட்டவர்களிடையே எலும்பு திசு மரண பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பி.எம்.ஜே (British Medical Journal) இதழும் அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் பாதிப்பு கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடையே அதிகம் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் - கொரோனா தொடர்பு:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மற்றும் மாத்திரைகளின் மூலம் ஏற்படும் பக்க விளைவுகளினால், மற்ற நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. அதனைப்போலவே அவாஸ்குலர் நெக்ரோசிஸூம், ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துகொள்வதின் காரணமாக ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றன. அதிக டோஸ் உள்ள ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது எலும்பு திசுகள் பாதிக்கப்படும் என எச்சரிக்கும் மருத்துவர்கள், இதுகுறித்து தெளிவான விளக்கம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர். எந்த ஸ்டீராய்டு மாத்திரைகள் இந்த நோய்க்கு காரணமாக உள்ளது என்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிகிச்சை என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளனாவர்களுக்கு பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகள் குறித்து பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஸ்டீராய்டு மருத்துகள் மட்டுமே அவாஸ்குலர் நெக்ரோசிஸூக்கு காரணமாக கூற முடியாது எனத் தெரிவிக்கும் மருத்துவர்கள், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் மறுக்க முடியாது எனத் தெரிவிக்கின்றனர். இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் அதிகமான வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்குமாறு அறிவுறுத்துகின்றனர். தொடக்கத்தில் கண்டறியப்பட்டால் தரமான சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என்றும், பிஸியோதெரபி, அழற்சியை ஏற்படுத்தாத மருந்துகள், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமும் குணப்படுத்தலாம் என கூறியுள்ளனர்.
Published by:Archana R
First published: