முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மெனோபாஸ் எலும்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது? மருத்துவ நிபுணர்கள் பகிரும் தகவல்

மெனோபாஸ் எலும்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது? மருத்துவ நிபுணர்கள் பகிரும் தகவல்

ஹார்மோன் அளவில் ஏற்படும் மாற்றங்கள் உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இருப்பினும், உங்கள் வயதானது எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கும் ஒன்றாகும்.

ஹார்மோன் அளவில் ஏற்படும் மாற்றங்கள் உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இருப்பினும், உங்கள் வயதானது எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கும் ஒன்றாகும்.

ஹார்மோன் அளவில் ஏற்படும் மாற்றங்கள் உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இருப்பினும், உங்கள் வயதானது எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கும் ஒன்றாகும்.

  • 1-MIN READ
  • Last Updated :

குறிப்பிட்ட வயதை கடந்த பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை அனுபவிப்பார்கள். மெனோபாஸ் என்பது ஒரு வருடத்திற்கு மாதவிடாய் வருவதில் மாறுபாடு ஏற்பட்டு படிப்படியாக குறையும் என வரையறுக்கப்படுகிறது. இது பொதுவாக பெண்களின் 40களின் பிற்பகுதியில் அல்லது 50களின் முற்பகுதியில் நிகழும்.

மெனோபாஸ் என்பது பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகளுள் எடை அதிகரிப்பு அல்லது பெண்ணுறுப்பு வறட்சி ஆகியவை அடங்கும். சரி, இந்த மெனோபாஸ் குறித்து பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

மாதவிடாய் நிற்கும் பொதுவான வயது எது?

மாதவிடாய் நிற்பதற்கான (மெனோபாஸ்) சராசரி வயது 51 என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் ஏற்படுவது படிப்படியாக நிற்கிறது. கருப்பை செயல்பாடு குறைவதற்கான ஆரம்ப நிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சில பெண்களுக்கு தொடங்கலாம். மற்றவர்கள் 50 வயதிற்கு பிறகும் மாதவிடாய் காலத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைவதால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படுகின்றன?

75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். ஹாட் ஃப்ளாஷ் எனப்படும் அதிகப்படியான காய்ச்சல் வெப்பத்தின் திடீர் உணர்வு என்பது மாதவிடாய் நிற்கும் பெண்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளாகும். பகலில் அல்லது இரவில் இதுபோன்ற உணர்வு ஏற்படலாம். சில பெண்கள் தசை மற்றும் மூட்டு வலியை அனுபவிப்பார்கள். இது ஆர்த்ரால்ஜியா அல்லது மனநிலை மாற்றங்கள் (mood swing) என்று அழைக்கப்படுகிறது.

மெனோபாஸ் எலும்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியின் சரிவு எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவை பாதிக்கும். இது எலும்பு அடர்த்தியில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்துவதால் உங்களை இடுப்பு, முதுகெலும்பு மற்றும் பிற எலும்பு முறிவுகளுக்கு ஆளாக்கும். எனவே, உங்கள் எழும்பு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

பால் பொருட்கள், கீரை வகைகள் போன்ற கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்

வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

மது அருந்துவதை, புகைப்பிடிப்பதை தவிக்கவும்.

இதையும் படிங்க | 20, 30, 40… வயதிற்கு ஏற்ப மாற்றம் காணும் பெண்ணுறுப்பு… நிச்சயம் அறிய வேண்டியவை..!

மெனோபாஸுக்கும் இதய நோய்க்கும் தொடர்பு உள்ளதா?

தலைச்சுற்றல் அல்லது இதயத் துடிப்பில் மாற்றம் போன்றவை மாதவிடாய் நிற்கும் பருவத்தில் நீங்கள் அனுபவிக்கும் ஒன்று. ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் உங்கள் உடல் ஃப்ளெக்ஸிபில் ஆர்ட்ரீஸ்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இது இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

எனவே, உங்கள் உடல் எடையை கவனித்து, ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது ஆகியவை இதய நோய்களை உருவாக்குவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும்போது உடல் எடை அதிகரிக்குமா?

உங்கள் ஹார்மோன் அளவில் ஏற்படும் மாற்றங்கள் உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இருப்பினும், உங்கள் வயதானது எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கும் ஒன்றாகும்.

சீரான உணவை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள், உங்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் பிற ஆரோக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடிக்கவும். அதிக எடையுடன் இருப்பது இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் பிற நிலைமைகளுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

First published:

Tags: Bone health, Menopause