தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு டாக்டரின் சூப்பர் ஐடியா.. வைரலாகும் வீடியோ..

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு டாக்டரின் சூப்பர் ஐடியா.. வைரலாகும் வீடியோ..

மாதிரி படம்

நீண்ட நேரம் கம்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பதால், அந்த ஒளி கண்களில் வறட்சியை ஏற்படுத்தி தூக்கமின்மைக்கு காரணமாகலாம்.

  • Share this:
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு, டிக்டாக்கில் டாக்டர் ஒருவர் கொடுத்த ஐடியா, பேஸ்புக், ட்விட்டர், டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

காலமாற்றத்தால் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். தூக்கமின்மைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. நீண்ட நேரம் கம்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பதால், அந்த ஒளி கண்களில் வறட்சியை ஏற்படுத்தி தூக்கமின்மைக்கு வித்திடுவதாக கூறப்படுகிறது. மன அழுத்தம், மனக் குழப்பம், செல்போன்களில் அதிக நேரம் செலவிடுவது உளிட்டவை முக்கியமாக குறிப்பிடப்படுகிறது.

தங்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை போக்க பலரும் இணையத்தில் ஐடியாக்களை தேடி வருகின்றனர். அந்தவகையில், தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு டிக்டாக்கில் டாக்டர் ஒருவர் கொடுத்த சிம்பிள் ஐடியா, வைரலாகியுள்ளது. டாக்டர் ஜெஸ் (Jess) என்பவர், தன்னுடைய டிக் டாக் பக்கத்தில், தூக்கமின்மையால் அவதிப்படுவபவர்கள், இரவு தூங்க செல்லும்போது இரு கால்களிலும் சாக்ஸ் அணிந்து உறங்குமாறு கூறியுள்ளார். அவ்வாறு படுக்கும்போது, தூக்கமின்மையை சந்திப்பவர்கள் கூட விரைவில் தூங்கிவிடுவார்கள் என அவர் கூறியுள்ளார்.இந்த முயற்சியை தான் மேற்கொண்டதாகவும், அதில் தனக்கு நல்ல பலன் கிடைத்ததால், டிக்டாக்கில் பதிவிட்டிருப்பதாகவும் மருத்துவர் ஜெஸ் கூறியுள்ளார். டிக் டாக்கில் பிரபலமான டாக்டர் ஜெஸ், " கால்களில் சாக்ஸ் அணிந்து உறங்கச் சென்றால், பாதம் சூடாகும். இதனால், ரத்த நாளங்கள் திறக்கப்பட்டு உடலை குளிர்விக்கும். உடல் வெப்பநிலை குறையும்போது, மூளையில் சோர்வு ஏற்பட்டு விரைவில் உங்களுக்கு தூக்கம் ஏற்படும்", எனக் கூறியுள்ளார். இந்த முறையை தான் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறியுள்ள டாக்டர் ஜெஸ், 2006ம் ஆண்டு பிஸிக்கல் பிகேவியர் (Physical Behaviour) என்ற இதழில் வெளியான ஆய்வில், தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வாக இந்த முறையை ஆய்வாளர்கள் பரிந்துரைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

கண்கள் அடிக்கடி விடாமல் துடிப்பதன் காரணங்கள் என்ன? அதை எப்படிச் சரிசெய்யலாம்..

தூக்கமின்மைக்கு உடலில் இருக்கும் வெப்பநிலையும் காரணம் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக டாக்டர் ஜெஸ் சுட்டிக்காட்டியுள்ளார். டிக்டாக்கில் ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களுக்கும் மேல் டாக்டர் ஜெஸூக்கு இருப்பதால், அவர் பதிவிட்ட இந்த வீடியோ உடனடியாக இணையத்தில் வைரலானது. ஒரு சிலர், சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதா? என கேள்வி எழுப்பியிருப்பதுடன், மருத்துவர் காமெடி செய்வதாகவும் கூறியுள்ளனர்.மேலும் சில இணையவாசிகள், வழக்கமாக தங்களுடைய சாக்ஸ் கடுமையான நாற்றம் அடிக்கும் என்பதால் அதனை எவ்வாறு கால்களில் அணிந்துகொண்டு இரவில் தூங்க முயற்சி செய்வது? என கிண்டலாக கூறியுள்ளனர். எனினும் ஏராளமானோர் அவரின் கருத்தை ஏற்று தாங்களும் முயற்சிப்பதாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர். டாக்டரின் அறிவுரைக்கு டிக்டாக்கில் மட்டுமல்லாது யூடியூப் உள்ளிட்ட பிற தளங்களிலும் ஆதரவும், விமர்சனமும் ஒருசேர எழுந்துள்ளது.

 
Published by:Sivaranjani E
First published: