ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஒருவரின் நீண்ட வாழ்நாளுக்காக மருத்துவர் தரும் சூப்பர் ஃபார்முலா!

ஒருவரின் நீண்ட வாழ்நாளுக்காக மருத்துவர் தரும் சூப்பர் ஃபார்முலா!

புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் என்பது கட்டுப்படுத்தப்பட்ட நுண்ணுயிர் வளர்ச்சியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் அல்லது பானங்கள் மற்றும் நொதி நடவடிக்கை மூலம் உணவு கூறுகளை மாற்றுவது என வரையறுக்கப்படுகிறது.

புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் என்பது கட்டுப்படுத்தப்பட்ட நுண்ணுயிர் வளர்ச்சியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் அல்லது பானங்கள் மற்றும் நொதி நடவடிக்கை மூலம் உணவு கூறுகளை மாற்றுவது என வரையறுக்கப்படுகிறது.

புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் என்பது கட்டுப்படுத்தப்பட்ட நுண்ணுயிர் வளர்ச்சியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் அல்லது பானங்கள் மற்றும் நொதி நடவடிக்கை மூலம் உணவு கூறுகளை மாற்றுவது என வரையறுக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 65 - 72 ஆண்டுகள் என்று இருக்கும் நிலையில், இன்னும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஏராளம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நிலவும் பல காரணிகள் மனிதர்களின் வாழ்நாளை குறைக்க கூடியதாகவே இருக்கின்றன. எனினும் நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியத்தில் முக்கிய இடம் பெற்றிருப்பது உணவுப் பழக்கவழக்கங்கள். இதனை பல ஆய்வுகள் நிரூபித்து உள்ளன. 100 ஆண்டுகளுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ விரும்பும் ஒருவர் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியலை விஞ்ஞானியும், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணருமான டாக்டர். ஜேம்ஸ் டினிகோலண்டோனியோ (Dr. James DiNicolantonio) சமீபத்தில் சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார். அவர் ஷேர் செய்துள்ள உணவுகளின் பட்டியல் மற்றும் அதன் பலன்கள் இங்கே…

சுத்தமான தேன்:

சுத்தமான மற்றும் இயற்கையான தேன் (அதாவது பாட்டிலில் அடைக்கப்படுவதற்கு முன் மட்டுமே வடிகட்டப்படும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த தேன்) இதய நோய்கள் மற்றும் சில வகை புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை. மார்பகம், கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களில் தேன் ஏற்படுத்த கூடிய விளைவுகள் பற்றி முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. கட்டி அல்லது புற்றுநோய் செல்களுக்கு எதிராக தேன் மிகவும் பயனுள்ள சைட்டோடாக்ஸிக் என்று குறிப்பிடப்படுகிறது.

இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

கோட் மில்க் கெஃபிர் (Goat Milk Kefir):

கோட் மில்க் கெஃபிர் என்பது ஒரு பண்பட்ட ப்ரோபயாடிக் பானமாகும், இது குடிக்க கூடிய தயிர் போன்ற சுவை மற்றும் அமைப்பில் உள்ளது. சான்றளிக்கப்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடுகளின் கிரேடு A பாலை கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. இதில் காணப்படும் ப்ரோபயாடிக்ஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுவதன் மூலம் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது. கெஃபிர் சாறு மனித மார்பக புற்றுநோய் செல்களின் எண்ணிக்கையை 56% வரை குறைத்தது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மாதுளை:

வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற பல வைட்டமின்கள் மாதுளையில் அடங்கி இருக்கிறது. மேலும் மாதுளையில் காணப்படும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் நாம் வாழ உதவுகிறது. மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிரீன் டீயை விட பல மடங்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன. செரிமானத்தை சீராக்கி, சருமத்தை பளபளப்பாக்கி நீட நாள் வாழ உதவி புரிகிறது மாதுளம் பழம்.

இதையும் படிங்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

புளிக்க வைக்கப்பட்ட (நொதிக்க வைக்கப்பட்ட) உணவுகள்:

புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் என்பது கட்டுப்படுத்தப்பட்ட நுண்ணுயிர் வளர்ச்சியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் அல்லது பானங்கள் மற்றும் நொதி நடவடிக்கை மூலம் உணவு கூறுகளை மாற்றுவது என வரையறுக்கப்படுகிறது. பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இத்தகைய உணவுகள் வளர்சிதை மாற்ற விகிதத்தை மாற்றும் என்பதற்கான ஆய்வு ஆதாரங்கள் பெருகி வருகின்றன. இவற்றின் மூலம் வயிறு உணவை ஜீரணிக்கும் முறையை ஆரோக்கியமாக மாற்றுகிறது. இவ்வகை உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுடன் ப்ரோபயாடிக்குகளும் இருக்கின்றன. இது ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் தொடர்புடைய உடல் செயல்களை மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது.

பச்சை வாழை:

பச்சை வாழைப்பழம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை 50% வரை குறைக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

First published:

Tags: Explainer, Healthy Lifestyle