Home /News /lifestyle /

ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் குழந்தையின்மை ஏற்படுமா..? மருத்துவர் விளக்கம்

ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் குழந்தையின்மை ஏற்படுமா..? மருத்துவர் விளக்கம்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 46 : கடந்த சில ஆண்டுகளாக உலக அளவிலேயே குழந்தையின்மை பிரச்சனைக்கான சதவீதம் இரண்டு மடங்காகி விட்டது. 15 லிருந்து 30 சதவீதம் ஆகிவிட்டது. என்னவென்று குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றம் போன்றவை முக்கியமான காரணங்களாக சுட்டிக் காட்டப்படுகின்றன .

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ரதியும் ரவியும் மென்பொருள் துறையில் பணிபுரியும் தம்பதியர். 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். திருமணம் ஆகி ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையில் ,இரு குடும்பத்தினரும் விரைவில் குழந்தை வேண்டுமென்று கேட்க ஆரம்பித்து விட்டனர். அதனால், இருவரும் ஆலோசனைக்காக வந்திருந்தனர். ஏராளமான கேள்விகள் . அவற்றில் இரண்டு கேள்விகளை நாம் பார்ப்போம்.

1. அவர்கள் வேலை செய்யும் நேரம் முழுவதும் அவர்களுடைய நிறுவனம் உணவாக, பல்வேறு வகையான சுவையான பதார்த்தங்களை ,அனுப்பி கொண்டே இருக்கும். அவை பெரும்பாலும் பீசா, பர்கர் ,டோனட், சாண்ட்விச் போன்ற( குப்பை அல்லது ஜங்க்,) துரித உணவுகளாகவே இருக்கும். இவ்வாறு துரித உணவுகளை அதிகமாக உண்பது குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்குமா?

2. இருவருமே அமெரிக்க நிறுவனத்திற்காக பணிபுரிவதால் , வேலை நேரம் மாலை 8 மணியிலிருந்து ஆரம்பித்து அதிகாலை 4 மணி வரை
தினமும் இரவு நேர பணி என்பதால் பகலில் தூங்கி விடுகிறோம் . இது போன்ற ஒரு வாழ்க்கை மாற்றம் எங்களுக்கு குழந்தை பெறக்கூடிய வாய்ப்புகளை பாதிக்குமா?கடந்த சில ஆண்டுகளாக உலக அளவிலேயே குழந்தையின்மை பிரச்சனைக்கான சதவீதம் இரண்டு மடங்காகி விட்டது. 15 லிருந்து 30 சதவீதம் ஆகிவிட்டது. என்னவென்று குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றம் போன்றவை முக்கியமான காரணங்களாக சுட்டிக் காட்டப்படுகின்றன. அதிகமாக துரித உணவுகளை உண்ணும் 5000 பெண்களில் நடந்த ஒரு ஆய்வு கூறுவது என்னவென்றால் துரித உணவுகளை சாப்பிடக்கூடிய பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு சிக்கல்களும் இருப்பதோடு, கருத்தரிப்பதற்கு கால தாமதமும் ஆகிறது என்பதை கண்டறிந்து இருக்கிறார்கள்.

தினமும் உடலுறவு கொண்டால் கரு நின்றுவிடுமா..? மருத்துவர் விளக்கம்...

நம்முடைய இந்திய உணவு முறை மிகவும் ஆரோக்கியமான உணவு முறையாகும். கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது என்பதை தவிர நம் உணவு முறையில் குற்றமே கண்டுபிடிக்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் அந்த இடத்தில் இருக்கக்கூடிய தட்பவெப்ப நிலை அங்கு விளையக்கூடிய பொருட்களை, பொறுத்து அங்கிருக்கும் மக்களுடைய உணவு முறை அமைந்திருந்தது. இந்தியா போன்ற மிகவும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்ட நாட்டின் மக்கள் மிக அருமையான உணவு முறைகளை கண்டறிந்து அதையே கடைபிடித்து வந்தார்கள்.

துரித உணவுகளை பொருத்தவரை ஒன்று அதை பல காலமாக குளிர்சாதன பெட்டியில் உறைநிலையில் வைத்து உபயோகிக்கிறோம். அதனால் அதிலுள்ள காய்கறிகளும் மற்ற சத்துக்களும் முழுமையாக நம்மை வந்து அடையாது . அத்துடன் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக அளவு உப்பும் சர்க்கரையும் சேர்க்கப்படுவது நிதர்சனம் . இவை மட்டுமல்லாமல் பூச்சி பிடிக்காமல் இருப்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகளும் பதப்படுத்தக் கூடிய ஏராளமான வேதிப்பொருட்களும் அத்துடன் தாராளமாக சேர்க்கப்படுகின்றன.கண்களை கவர்வதற்காக பல வண்ண நிறமிகள் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன . பொதுவாக இவை எல்லாவற்றுக்கும் இருக்கக்கூடிய ஒரு பொது குணம் அவை நீண்ட கால தாக்கத்தை நம் உடலில் உள்ள செல்களில் ஏற்படுத்தி கேன்சர் போன்ற பிரச்சனையை தோற்றுவிக்கலாம் என்பதே . அத்துடன் அதிகமான அளவு சோடா உப்பு சேர்க்கப்படும் எந்த உணவாகிலும் அது பசித்தன்மையை மந்தப்படுத்தி செரிமான கோளாறுகளை நிச்சயம் உண்டாக்கி விடுகிறது. நாங்கள் ஒவ்வொரு நாளும் இதைக் காண்கிறோம்.

இது போன்ற உணவுகளை உண்ணுவது இப்பொழுது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. இந்த குப்பை உணவுகள் விலையும் அதிகம். அதற்காக நாம் கொடுக்கும் விலையும்( நம் ஆரோக்யம்) அதிகம் . எனவே இந்த தம்பதிக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இதை அதிகம் உண்ணுவதால் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறீர்கள். அப்படி என்றால் ஏதோ ஒரு மாற்றத்தை நீங்கள் உணருகிறீர்கள்.

எனவே குழந்தை வேண்டுமென்று நீங்கள் திட்டமிடும் இந்த காலம் மற்றும் கர்ப்பமாக இருக்கக்கூடிய காலத்தில் முடிந்தவரை புதிய ,அப்பொழுதுதான் ,உங்கள் வீட்டிலேயே சுத்தமாக தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்ணுவதன் மூலம் உங்கள் உடலுக்கு வரக்கூடிய பல கெடுதல்களையும் தொற்றுகளையும் தவிர்க்கலாம். அத்துடன் தேவையான அளவு சத்துக்கள் நமக்கு நேரடியாக கிடைக்கும்.அதிலும் குறிப்பாக மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்கள் இதுபோன்று குப்பை உணவுகளை அதிகமாக உண்ணும் பொழுது எடை அதிகரித்து அவர்களுடைய மாதவிடாய் சிக்கல்கள் மேலும் அதிகமாகலாம் அதனால் குழந்தை பிறப்பு மேலும் தள்ளிக் கொண்டே போகலாம்.

நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கொண்ட ஒரு தாய் ஒரு கர்ப்ப காலத்தை எதிர்கொள்வதும் அல்லது சத்துக்கள் குறைந்த ஒரு தாய் கர்ப்பத்தை எதிர்கொள்வதற்கும் ஏராளமான வித்தியாசம் இருக்கும்.

மாதவிடாய் சமயத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா..? இந்த சமயத்தில் குழந்தை நிற்காதா..?

கர்ப்ப காலத்தில் எடை அதிகமாக இருந்தால் அவர்களுக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் வரலாம். மேலும் கர்ப்பத்தில் ஏராளமான சிக்கல்கள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.

இந்த குப்பை உணவுகளால் ஆண்களுக்கான விந்துகளின் ,உந்து சக்தியும் குறைவாகி மலட்டுத்தன்மை அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன மொத்தத்தில் ஆசைக்கு என்றாவது ஒரு நாள் குப்பை உணவுகளை உண்ணலாமே தவிர, நம் ஆரோக்கியத்தின் மீது ஆசை கொண்டவர்கள் கட்டாயம் வீட்டில் தயாரித்த சுத்தமான புதிய வகை உணவுகளையே உண்ண வேண்டும்.

இவர்களுடைய அடுத்த கேள்வியான, இரவு நேர பணி பாதிக்குமா ?! என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Infertility, Junk food, Pregnancy, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி